எட்கார் கெரெட் குறுங்கதைகள்
ஹீப்ரூ மொழியில் எழுதும் இஸ்ரேலியரான எட்கார் கெரெட் சமகால நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகளில் - பெரும்பாலும் குறுங்கதைகளில் - மட்டுமே கவனம் செலுத்தும் இவர் ஒரு கிராபிக் நாவலும் இரு நினைவுக்குறிப்புகளும் எழுதியுள்ளார். Middle Man என்ற திரைப்படத்துக்கு மனைவியுடன் சேர்ந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பல உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளது. இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் எளிமையாக தோற்றமளிக்கும் நடையில் சர்ரியலிசத்தன்மையோடு எழுதப்பட்டவை. அளவில் சிறியதாக இருந்தாலும் நிதான வாசிப்பில் பல பரிமாணங்களை உள்ளடக்கியிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்: 1) ‘The Bus Driver Who Wanted to Be God.’ 2) ‘The Girl on the Fridge’ 3) ‘Suddenly, a Knock on the Door’ 4) l