சையது அக்தர் மிர்ஸாவின் ஆதங்கங்கள்
பெங்களுர் குறிப்பு
சையது அக்தர் மிர்ஸாவின் ஆதங்கங்கள்
ப. சகதேவன்
1978இல் வெளியான திரைப்படம்: அர்விந்த் தேசாயின் ‘விசித்திரத் தலையெழுத்து’. சுதந்திரத்திற்குப் பின் பிறந்த ஒரு தலைமுறையின் பிரதிநிதி தனது செல்வச் செழிப்பு தந்த சுகங்களை அனுபவித்துக்கொண்டும் அதே சமயம் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணிக்க முடியாமலும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடித் திரியும் கதை.
1980இல் ஒரு படம்: ‘ஆல்பர்ட் பிண்டோவுக்கு கோபம் வரக் காரணமேன்?’ ஒரு மில் தொழிலாளியின் மகனான ஆல்பர்ட் பிண்டோ தனது கார் திருத்தும் திறமையின் மூலம் சமுதாயத்தில் மேல்நிலைக்கு வந்துவிடலாம் என்று கனவு காண்கிறான். அவனது பணக்கார வாடிக்கையாளர்களும் அவனுக்கு அந்த நம்பிக்கையைத் தருகிறார்கள். ஆனால் வர்க்க வேறுபாடு கூர்மையாயிருப்பதை அனுபவம் மூலமாக அவன் உணர்கிறான்.
1984இல் வெளியான ஒரு படம்: &lsqu