மூகாப்பாட்டியின் கனவுகள்
திரை
ப. சகாதேவன்
மூகாப்பாட்டியின் கனவுகள்
(ஞானபீடப்பரிசு பெற்ற சிவராம காரந்தர் நாவலின் திரைப்பட வடிவம்: நாவல் வெளியான ஆண்டு: 1968, திரைப்பட வெளியீடு: நவம்பர் 2019: திரைக்கதை, இயக்கம்: பி.சேஷாத்ரி)
தன்கன்னட மாவட்டத்தில் மூடூர் என்னும் ஊரில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மூகாம்பிகை திருமணமான இரண்டாவது நாளில் தனது பத்தாவது வயதில் விதவையாகிறாள். பிறந்த வீட்டிற்கு வந்து தனது சகோதரனுடன் வாழத்தொடங்கிய இந்த மூகாம்பிகை மூன்று தலைமுறைகளைக் கடந்து என்பது வயதாகி மூகாப்பாட்டி (மூகா அஜ்ஜி) என்று பெயரடைந்து தனது தம்பியின் பேரன் சுப்பராயன் குடும்பத்தோடு வாழ்கிறாள்