வைக்கம் போராட்டம் வரலாற்றுச் சாதனை
நூல் ஆய்வு
பெருமாள்முருகன்
வைக்கம் போராட்டம் வரலாற்றுச் சாதனை
ஆய்வு, பதிப்பு, கட்டுரையாக்கம் ஆகிய துறைகளில் தொடர்ந்து செயல்படுபவர் பழ.அதியமான். பெரியார் வரலாற்று ஆய்வில் ‘பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு’ (2012), ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ (2013) ஆகிய இரண்டு சிறந்த நூல்களை வழங்கியுள்ளார். வைக்கம் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்களுள் ஒருவராகிய ஜார்ஜ் ஜோசப் குறித்து ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ (2007) என்னும் நூல் ஒன்றையும் அவர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இந்தப் பி