இறகுகள்
கதை
இறகுகள்
ரேமண்ட் கார்வர்
என்னோடு பணிபுரியும் இந்த நண்பன், பட், என்னையும் ஃபிரானையும் இரவு உணவுக்கு வரச்சொல்லி அழைத்தான். அவன் மனைவியை எனக்குத் தெரியாது, அவனுக்கு ஃபிரானைத் தெரியாது. அதற்கும் இதற்கும் சரியாகிவிட்டது. ஆனால் பட்டும் நானும் நண்பர்கள். பட்டின் வீட்டில் ஒரு சின்னக் குழந்தை இருப்பது தெரியும். பட் எங்களை இரவு உணவுக்கு அழைத்தபோது அந்தக்குழந்தைக்கு நிச்சயமாக எட்டுமாதம் போல ஆகியிருக்கும். அந்த எட்டு மாதங்கள் எங்கே போயிருக்கும்? அதன்பிறகு வந்த காலம் எங்கேதான் போயின? ஒரு