சாலச் சிறந்தவரும் நேர்மையாளரும்
அஞ்சலி: கிரீஷ் கார்னாட் (1938 - 2019)
சாலச் சிறந்தவரும் நேர்மையாளரும்
விவேக் ஷான்பாக்
கிரீஷ் கார்னாடுடன் என் முதல் சந்திப்பு எப்போது, எப்படி நடந்தது என்பது நினைவிலில்லை. மனத்தால் பலமுறை சந்தித்தவரின் முதல் சந்திப்பை நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். நேரடியாகச் சந்திப்பதற்கு முன்பே கார்னாடைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப்பற்றிய செய்திகளைத் தெரிந்துவைத்திருந்தேன். சிரசிப் பள்ளியில் பயின்ற நாட்களில் அவர் என் அம்மாவின் சக மாணவராக இருந்தார். பள்ளியில் நடக்கும் – நாடகம