இமய விடியல்
நிரஞ்சனா, உன் கைப்பேசியை அணை. இது விளையாட்டில்லை. இன்னொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.”
“இந்தக் காட்டுக்குடிலை ஒரு க்ளிக் பண்ணிக்கொள்கிறேன். முகநூலில் போட்டால் ஆயிரம் லைக்குகளை அள்ளிவிடலாம்.”
“நாம எதற்காக இங்கே வந்திருக்கிறோம்? அலுவலக நண்பர்களுடன் வீக் எண்ட் பிக்னிக் போவதாகப் பொய் சொல்லிவிட்டுத் தனியாக நாம் இருவரும் இங்கே ஏன் வந்தோம்?”
“இப்படி சண்டை தொடங்காமல் பேசவே உனக்கு வராதே! டேக் இட் ஈசி மேன். நாம ஆசப்படலாம். முயற்சியும் பண்ணலாம். பட் எவ்ரிதிங் ஹேஸ் டூ ஃபால் இன் லைன் இல்லியா?”
“ஒன்னில்ல ரெண்டில்ல. எட்டுவருஷம் நிரஞ்சனா, எட்டுவருஷம்! இன்னும் டிசைட் பண்ண முடியலன்னா எப்படி?”
“எப்படின்னா எப்படி? அப்படித்தான் நான் இருக்கன். என் ஃபேமிலி இருக்கு. இருபத்தெட்டு வயசாயிடுச்சு. ஸ்கூல் காலேஜ் படிக்கிற எ