மொழி காலத்தின் பிரதிநிதி, 4ஜி கதைகள் & 3டி பார்வை
Prose is architechture,not interior decoration
-Ernest Hemingway
வாசகனாக
“அந்த ஊர்ல அவருதான் பெரிய வைத்தியரு. ஒருநாளு செத்துப் போயிடுறாரு. அவரோட மகன் அப்பாவோட தொழில தொடர்றான். கொஞ்ச நாள்ல அப்பாவவிட பெரிய பேரு வாங்கிடுறான். அவனோட நண்பனுக்குச் சந்தேகம், இவனுக்கு வைத்தியம் பத்தி எதுவும் தெரியாதே? இவன் எப்படி எல்லாரோட நோய்களையும் தீக்குறான், அவன்கிட்டேயே கேப்போம்னு போறான். நண்பன்கிட்ட உண்மைய சொல்லிடுறான் வைத்தியரு மகன். வேறொன்னுமில்ல, மக்கா! எங்கப்பா செத்த பிறகு கஷாயம் போட வச்சிருந்த எங்க தாத்தா காலத்துப் பானைய அடிச்சு உடைச்சிட்டேன், உடைக்கும்போது கையில ஆழமா உரசிச்சு; அதுல ரொ