காந்தியால் பிறந்த தலித்துகளுக்கான பள்ளிகள்
மதுரை அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வலதுபுறமாக உள்ள பகுதியின் பெயர் ஷெனாய் நகர். மையச் சாலையிலிருந்து தெற்கு நோக்கி மூன்று வீதிகள் நீள்கின்றன. சிவசண்முகம் பிள்ளை வீதி, ராமையா வீதி, சேவாலயம் பிரதான வீதி என்பன அவ்வீதிகளின் பெயர்கள். மூன்று வீதிகளின் ஊடாக வைத்தியநாத அய்யர் தெரு, கக்கன் தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, குமாரசாமி ராஜா தெரு என்ற பெயரிலான வீதிகளும் உள்ளன. இப்பெயர்களை வீதிகளுக்கு உரித்தான வழக்கமான பெயர்கள் என்று கருதி அவற்றைக் காணும் பெரும்பாலனோர் கடந்துசெல்லக்கூடும். வேறுசிலர் கக்கன் போன்று ஓரளவு தெரிந்த பெயரிருப்பதால் தலைவர்களின் பெயர்களைச் சூடும் அரசியல் வழமையே காரணமெனவும் கருதிச்செல்லலாம். ஆனால் கக்கன் பெயர் மட்டுமல்ல இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லா பெயர்களுமே அரசியல் செயற்பாடுகளோடு தொடர்புடையனவாகும். குறிப்பிட்ட ஒரு பகுதியின் எல்லா தெருப்பெயர்களும் இவ்வாறு இர