ஏழூ முப்பத்தாறு
அவள் மிக நிதானமாகத் தன் உடை களைக் களைந்து கொண்டிருந்தாள். படுக்கையறையின் விளக்கு பளிச்சென எரிந்துகொண்டிருந்தது. பீரோவில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் உடலைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அவன் தயாராக இருந்தான். அவனுடைய வேகத்தை உதாசீனப்படுத்துபவள் போல் தன் கூந்தலால் தன் மார்பை மூடிக்கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தின் அழகைப் பருகியபடி நின்றிருந்தாள். மெள்ள அவனருகில் வந்து அவள் படுத்துக்கொண்ட அடுத்த விநாடி ஆடு மேயும் புல் தரையானாள். அவன் அவள் மேல் இயங்கினான். இரவு நேர அமைதியிலும் விரையும் உணர்வை அவனால் நிறுத்த முடிவதில்லை. சதாசர்வ வினாடியும் அவனுள் ரயில் ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மெதுவாக நிதானமாக காரியத்தில் லயித்துச் செய்வதன் மகிழ்ச்சியைக் கைவிட்டு வருடங்களாகிவிட்டன. அவளின் அதியற்புதமான உடலின் கீழ்ப்புறத்தில் முகம் பதித்துக்கொண்டிருந்தாலும் செய்க