தலையங்கம்

இந்த ஆண்டின் பருவமழை கேரள மாநிலத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. மே, ஜுன் பருவத்திலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் பொழிந்த மழை மீண்டும் ஆகஸ்டு மாதத்தில் அடைமழையாக மாறியது. பருவ மழையின் தொடர்ச்சி என்று நம்பப்பட்ட மழை பிரளயமாக மாறியது. நூற்றாண்டுக் கண்டிராத பேரிடர் என்று விரைவில் தெரிந்தது. மாநிலத்தில் சர

EPW -1

இணையமும் சமூக ஊடக மேடைகளும் அரசாங்கத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் தீர்க்க முடியாத சவாலை உருவாக்கியிருக்கின்றன. சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்தக் கட்சியினரான பாரதீய ஜனதா கட்சியினராலேயே ட்விட்டரில் பெரும் தொல்லைக்கு ஆளானார். இது சமூக ஊடகங்களின் எதிர்மறையான அம்சங்

EPW -2

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை நிலைகுலைந்தபோதிலும் அதன் சீர்திருத்தம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது. முதன்முறையாக இந்தியாவில் இரண்டு காவலர்களுக்குக் கேரளாவில் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் இறந்தது தொடர்பான வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது; மற்ற மூன்று காவலர்களுக்குச் சிறைத்தண்டனை வ

கடிதங்கள்

மழிக்கப்பட்ட மீசை’ சிந்தனையாளர்களின்மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் மற்று மொரு அத்தியாயம் மட்டு மல்ல சகிப்பின்மையின் அட்டூழியமும் கூட. கேரளத்திலும் இதுபோன்று நிகழ்வதை நம்ப முடிய வில்லை. கண்ணனின் அறச்சீற்றம் நியாயமானது.எத்தனையோ போராட்டங்களுக்கு இடை யிலும் தொய்வின்றி இயங்கி வரும் இலக்கிய

கவிதை
சுகுமாரன்

தேவி மகாத்மியம் தெய்வமானாலும் பெண் என்பதால் செங்ஙன்னூர் பகவதி எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள் ஈரேழு உலகங்களையும் அடக்கும் அவள் அடிவயிறு வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு யுகங்களாக வேரூன்றிய விருட்சங்களை உலுக்குகிறது. தொடை பிளக்கும் வேதனையில் அவள் எழுப்ப

கட்டுரை
சுகுமாரன்

1992 ஜனவரி 18 முதல் 1998 ஜனவரி 18 முடிய ஆறு ஆண்டுக் காலம் 93 ஏ கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 24 என்பது என் இரண்டாவது முகவரியாக இருந்தது. அங்குள்ள முரசொலி வளாகத்தில் பணியாற்றினேன். வளாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழன் நாளிதழிலும் பின்னர் குங்குமம் வார இதழிலும் பணிபுரிந்தேன். கலைஞர் கரு

கட்டுரை
மருதன்

‘தமிமிழ்நாட்டிலுள்ள வகுப்புவாதக் கட்சியினர் பிராமணர்களைத் துரத்திவிட்டு சுயேச்சையான திராவிடப் பிரதேசம் அமைப்போம் என்கிறார்கள். ஒரு பாகிஸ்தான் ஏற்பட்டது போதும். என்ன நடந்தாலும் இனி நாடு துண்டாடப்படாது. ஸ்திரமான சர்க்காரை காங்கிரஸ்தான் தரமுடியும்’ என்று சென்னையில் பிரசாரம் செய்யவந்த பிர

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியம்

திராவிட அரசியலின் தோற்றத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. திராவிடச் சித்தாந்தம், சொல்லாடல்கள் தலித்துகளிடமே முதலில் தோன்றியது எனலாம். பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலித்துகளிடம் முகிழ்த்துப் பின்பு திராவிட அரசியலால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. திராவிடன் என்ற சொல்

கட்டுரை
ஆ.இரா. வேங்கடாசலபதி

கலைஞர் மறைந்தபொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவின்பொழுது தோன்றாத - ஓர் எண்ணம் நெஞ்சின் ஓரத்தில் தளிர்த்தது. ஈடேற்ற இயலாதது என்று மூளை சொல்லியதில் அவ்வெண்ணம் உடனே கரிந்தும் போனது. இராஜாஜி அரங்கில் வரிசையாக அஞ்சலி செலுத்தியவர்களில் அரசியல்வாதிகளும் திரைத்

அஞ்சலி

நான் பத்திரிகையாளராக வேண்டும் என ஆசைப்பட்டதில்லை. லாகூரில் என் எல்.எல்.பி. படிப்பை முடித்தபின், சொந்த ஊரான சியால்கோட்டில் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என்னுடைய இறுதித் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சியால்கோட்டிலிருந்து எல்லையைக் கடந்

அஞ்சலி
விஷ்ணு ஸ்வரூப்

சென்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி மறைந்த விதியாதர் சூரஜ்பிரசாத் நைபால் (வி.எஸ்.நைபால்) அளவிற்கு மதிக்கப்பட்ட, அதே சமயம் விமர்சிக் கப்பட்ட, நம் காலத்து எழுத்தாளர் வேறு யாரும் இருக்க முடியாது. பின்காலனிய உலகத்தைப் பற்றிய கூர்மையான தரிசனங்களுக்காகவும் ஆங்கில உரைநடைக்கு வளம்சேர்த்த எழுத்து நடைக்காகவும் போற்றப்பட்

கதை
நாக பிரகாஷ்

அலுவலகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்திருப்பதாக அழைப்பு. கொண்டுவந்த புதுப் பையனுக்கு வழி தெரியவில்லை. அவன் வந்து சேர்வதற்குள் கிளம்பித் தெரு முக்கில் சென்று நின்றேன். நான் பதினொரு மணிக்கு வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். குழந்தைகளையும் பிறகு பத்து மணிக்குப் பயந்து வீட்டிலிருந்

கட்டுரை
பழனி. கிருஷ்ணசாமி

தமிழனுக்கு நீண்ட வரலாறு உண்டென்றாலும் அவனது தேசீய குணம் என்பது வரையறுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உலகமயமாதலுக்குப் பிறகு இது இன்னும் சிக்கலாகியிருக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னுமான தமிழனின் பிம்பம் என்று பார்த்தோமானால் அதன் உருவாக்கத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகளும் ச

கவிதைகள்

உள்ளே புறநகர் டீ கடை வாசலில் அசந்தர்ப்பமாக ஒரு அதிநவீன சொகுசு கார் அதன் உரிமையாளன் போனைத் தூக்கிக்கொண்டு ஃப்ரேமுக்கு வெளியே போய்விட்டான் இப்போது ஒரு காட்சி ஒரு அதி நவீன சொகுசு காரின் மேல் ஒரு அரைவாசி டீ டம்ளர் என்னவோ ஆகிவிட்டது எனக்கு இமை கொட்டாது வெறித்துக்கொண்டிருக்கிறேன் என்னவோ இருக்கிறது அதற்கு

கவிதைகள்
ஷாஅ

ஆயிரம் கால் சலங்கை 1 சுழன்று சுழன்று ஆடுகிறாள் அனார்கலி கருவிழியிலிருந்த நடனம் பட்டு உடைந்து நூறாய்ப் போகிறது கண்ணாடி                           விடாமல் அவள் ஆயிரம் ஆயிரம்

கவிதைகள்
ப. சகதேவன்

அமிர்தசரஸ் ரயில் நிலையம்      இன்னும் கேட்கின்றன மக்களே உங்கள் அழுகுரல்களும் மரண ஓலங்களும் கேட்கத்தான் வந்திருக்கிறேன் தென்கோடியிலிருந்து இந்தத்தமிழன் இளங்குளிர் தழுவும் புரட்டாசி மாத அதிகாலையில் அமுதம் கடலாகப் பொங்கும் இந்த நகரத்திற்கு எல்லை கடந்து வந்த, எல்லை கடந்துபோன எல்லாமும்

பதிவு
கௌரி கிருபானந்தன்

‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப் பில் கொண்டபல்லி கோடேஸ் வரம்மா வின் தன்வரலாற்று நூலை (காலச்சுவடு வெளியீடு 2015)  தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தபோது மிக அரிதான வாய்ப்பு கிட்டியது போல் உணர்ந்தேன்.அவருடைய நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்கு விசாகப்பட்டினம் செல்லும்போது

கதை
கே.என். செந்தில்

தடியைக் காற்றில் மீண்டும் வீசிய பின் தரையைத் தட்டி, அடித்து விரட்டுவதுபோல ராஜம்மாள் அவர் களிடம் அக்கம்பைக் காட்டினாள். பின் களைத்துப் போய் அச்சம் கலையாத கண்களுடன் மூச்சு வாங்கினாள். அந்த அதட்டலுக்குப் பயந்து சென்றுவிடு வார்கள் என நினைத்தற்கும் மாறாக அவர்களிடமிருந்து சிரிப்புச் சத்தத்தைக் கேட்டாள்

கட்டுரை
கோ. ரகுபதி

மிகவும் துல்லியமாகக் கூறுவதென்றால் 94 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாமழை பொழிந்து வருவதால் தென்னிந்தியாவில் தண்ணீருக்காக முட்டிமோதும் கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பெருவெள்ளத்தின் பேரழிவில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 1924ஆம

கட்டுரை
இ. அண்ணாமலை

வரலாறு முழுவதும் ஒரு நாட்டின் மக்கள் தொகுதியில் சில பிரிவினர் இனம், சாதி, பால், பணம் முதலியவற்றின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது, வாழ்க்கை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த மறுப்பு இன்று வேலை, கல்வி என்ற இரண்டு தளங்களில் வெளிப்படுவது. வரலாற்றுக் கா

மதிப்புரை
திவ்யா

பெருவலி (நாவல்) சுகுமாரன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 பக். 192 ரூ. 225 இந்திய வரலாற்றில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் சுவாரசியமானது. பாட்டி தன் பேத்திக்குச் சாதம் ஊட்டிக்கொண்டே கதை சொல்வதற்கு ஏற்றது அவர்களின் காலம். புனைவு எழுத்துக்கு உவப்பானது. அந்த வகையில் ச

திரை
ரதன்

2017இல் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாதிகளால் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. தாங்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து நிலையைக் கொண்டு இதனை நடத்தினர். வலதுக்கு மாற்றீடு, நியோ கொன்பிடரேட் அல்லது தெற்கு தேசியவாதிகள், Ku Klux Khan (KK or Klan)  நியோ நாசிகள் ஆகிய குழுக்களுடன

உள்ளடக்கம்