இது திரையா இல்லை நிஜமா?
The degree of slowness is directly proportional to the intensity of memory; the degree of speed is directly proportional to the intensity of forgetting. – Milan Kundera
சினிமா ஆர்வலர்கள் சந்திப்பில் ஒரு கேள்வி அனைவரிடமும் முன்வைக்கப்பட்டது. எளிமையான கேள்வி. நீங்கள் எதற்காக ஒரு சினிமாவைப் பார்க்க விரும்புகிறீர்கள்? வரிசையாகப் பதில்கள்: எண்டர்டெயின்மெண்ட், ரிலாக்ஸாக டைம் பாஸ் பண்ணுவதற்கு, கவலைகளைக் கொஞ்ச நேரம் மறக்க, புதியவற்றைக் கற்க, கதையை ரசிக்க, கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்க, அறிவை வளர்த்துக் கொள்ள, விருப்பமான கதாநாயகரைத் திரையில் ரசிக்க.. அனைத்துப் பதில்களையும் கேட்ட பின்னர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ‘நான் சினிமா பார்ப்பது ஒரு குழந்தையாக மாறுவதற்காக’ என்றார். முற்றிலும் உண்மை. கதை சொல்லுவதற்கும்
கதையைக் கேட்டு ரசிப்பதற்கும் ஒரு குழந்தையின் மனநிலைதான் தேவை. புரிந்த