ஜெயலலிதா: மனமும் மாயையும்
இஅதிமுகவின் வெற்றிக் கொண்டாட்டம் அட்டகாசமாக இருந்தது. திமுகவுக்கோ தலை நிமிரமுடியாத தோல்வி. 174 தொகுதிகளில் நின்று இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 163 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. அடேயப்பா, எப்படிப்பட்ட ஜாம்பவான்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்ட வெற்றி அது! ராஜீவ் காந்தியின் படுகொலையும் திமுகவுக்கு எதிரான மனநிலையும் அதிமுகவுக்குப் பெரிதும் உதவிற்று என்றாலும், ஜெயலலிதாவை லேசாக எடுத்துக் கொள்ளமுடியாது என்று முதல்முறையாகஉணர்ந்தார் கருணாநிதி. அவரது ஆட்சியில் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானகரமான சம்பவத்தை அவர் மறக்கவில்லை. அதன் விளைவாக அஇஅதிமுகவினர் தனக்கு என்ன வகையாகப் பழிதீர்ப்பார்களோ என்ற கவலையில், திமுகவின் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாகத் தனது அவை உறுப்பினர் இருக்கையை ராஜினாமா செய்தார்.
ஜெயலலிதாவின் பிரத்தியேக வெற்றித் தர