இந்திய நாயினங்கள்
இந்தத் தலைப்பின்கீழ் நான் பட்டியலிட்டுள்ள நாயினங்கள் மந்தைகளைக் காப்பது, வீட்டுக்கு - பண்ணைக்குக் காவல், வேட்டை போன்ற பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டை நாய்களுக்குத் தனியாக ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன். வடக்கு எல்லையான இமயத்தில் தொடங்கித் தெற்கு நோக்கிப் பயணித்துக் குமரிமுனைவரை உள்ள நாயினங்களைப் பார்க்கலாம்.
இமாலய மாஸ்டிஃப்
இந்திய நாயினங்களிலேயே உருவில் பெரிய இமாலய மாஸ்டிஃப், இமயமலைத் தொடரின் காவல் நாய்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. திபெத்திய மாஸ்டிஃப் என்றும் அறியப்படும் இந்நாய் இமயமலையில் சிக்கிமிலும் மற்ற பிரதேசங்களிலும் வளர்க்கப்படுகின்றது; கம்பீரமான தோற்றமுடைது. இந்நாய் 70 செ.மீ. உயரமும் ஏறக்குறைய 75 கிலோ எடையும் இருக்கும். செயின்ட் பெர்னார்டு (St. Bernard), கிரேட் பிரனீஸ் மவுன்டன் நாய் (Great Pyrenees Mountain Dog) போன்ற மற்ற உலகப் புகழ்பெற்ற நாயினங்களைப் ப