இரவுப் பிராணி, அறைகளின் விடுதலை
இரவுப் பிராணி
ஒரு இராட்சதப் பிராணியென
பனியில் கொடுகிச் சிலிர்த்து
ஊர்ந்து செல்கிறது இரவு
அது குறைந்த ஒளியுடன்
பகலைப் பிரசவிப்பதற்காக
வயிற்றைத் தள்ளித் திரிகிறது
விண்மீன்களும் அம்புலியும்
துயிலுறும் கணத்தினிடை
மிக இலகுவாகப் பகலை ஈணுகிறது
ஒரு வெண்ணிற முயல்குட்டியென
ஒளிக் கீற்றுகளை உதறியபடி
முகம் மலர்ந்துகிடக்கிறது பகல்
பகலின் பேரொளியை
முத்தமிட்ட இரட்டிப்பு மகிழ்ச்சியை
கொண்டாடுகிற பறவைகள்
இரவுப் பிராணி பகலைப் பிரசவிப்பது
இது எத்தனையாவது முறையோ
-----------------------------------------
அறைகளின் விடுதலை
வெள