படைப்பாற்றல் என்பது என்ன?
படைப்பூக்கம், படைப்பாற்றல், படைப்பு அம்சம் ஆகியவற்றைத் தெளிவாக வரையறுப்பது கடினம். படைப்பு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. புதிது என்பது புராணிக, மிகுகற்பனைப் படைப்புகளில் ஒன்றாகவும் யதார்த்த வாழ்க்கை சார்ந்த புனைவுகளில் வேறொன்றாகவும் இருக்கிறது. நடப்பியல் வாழ்க்கை சார்ந்த படைப்புகளைப் பொதுவாக யதார்த்தப் படைப்புகள் என்று சொல்வதுண்டு. இந்த யதார்த்தப் படைப்புகள் யதார்த்த உலகின் தர்க்கங்களுக்குட்பட்டு இருக்க வேண்டும். மிகுபுனைவுப் படைப்புகளும் அவற்றுக்கே உரிய தர்க்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். யதார்த்தப் படைப்புகளிலும் மிகுபுனைவுத் தன்மைகள் இடம்பெறக்கூடும் என்பதுபோலவே மிகுபுனைவுப் படைப்புகளிலும் யதார்த்தத்தின் தன்மைகள் இடம்பெறக்கூடும். இவற்றுக்கான உதாரணங்களை நவீனப் படைப்புகளிலும் புராணிகப் படைப்புகளிலும் காணலாம்.
<img style="width: 100%;" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad8