கவிதை
இந்த சிகப்பு வானத்தில் கிடையாது இந்த சிகப்பு
பூமியைத் தொடாது இந்த சிகப்பை சைத்திரிகர்கள் அணுகுவதில்லை
இந்த சிகப்பை பால்வெளி அனுமதிக்காது
இந்த சிகப்பை உங்கள் முதல் மாதவிடாயின்போது பார்த்திருக்கலாம்
இந்த சிகப்பை நீங்கள் செய்த முதல் கொலையின்போது அறிந்திருக்கலாம்
இந்த சிகப்பை இந்த சிகப்பு என்று அறியாதவர்கள்
ஒருபோதும் இந்த சிகப்பைத் தொடாதீர்கள்
ஒரு சிறிய மஞ்சள் மாத்திரை வெளிச்சத்தை அளிக்கிறது
அல்லது கோடையின் அதிக வெளிச்சத்தின்மீது
ஒரு திரையின் நிழலைக் கொண்டுவருகிறது
அறையை ஒழுங்குபடுத்துகிறது
உங்கள் புத்தகங்களை அடுக்கிவைக்கிறது
நீங்கள் மறந்துபோயிருந்த நடிகையின் பெயரைக் கொண்டுவருகிறது
அது ஒரு சிறிய மஞ்சள் மாத்திரையாக மட்டும் இல்லாதிருந்தால்
என்று நான் புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன்
அந்தப் புன்னகையைக் கவ்வி வந