|
பதவியை விட்டுவிலகிய முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளயர் கத்தோலிக்கச்
சபையின் அங்கத்தினராக ஞானஸ்நானம் பெற்றுள்ளார். கிறிஸ்தவத்திற்குப் பதிலாக
இசுலாமிற்கோ விருத்தசேதனம் செய்து யூத சமயத்திற்கோ மாறியிருந்தால் விளம்பரப்
பிரியரான பிளயருக்கு அதிகக் கவனத்தையும் பரபரப்பையும் அது பெற்றுத் தந்திருக்கும்.
எந்த மதத்தில் எப்போது தன்னுடைய விசுவாசத்தைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவார்
என்று அச்சு, தொலைக்காட்சி, வலைய ஊடக விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
பிளயரின் மாற்றம் பவுலுக்குத் தமஸ்கு தெருவில் நடந்ததுபோலத் திடீரென்று
ஏற்பட்டதல்ல. டோனி பிளயருக்குக் கிறிஸ்தவ சமயம்மீது எப்பவுமே ஒரு ஈடுபாடு
இருந்திருக்கிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது கிறிஸ்தவ
சோஷலிச ஒன்றியத்தில் அங்கத்தினராக இருந்திருக்கிறார். அதன் கூட்டங்களில்
பங்குபெற்றிருக்கிறார். அதன் பிரசுரங்களிலும் எழுதியிருக்கிறார். பிரதமராக
இருந்தபோது க்ஷிணீஸீவீtஹ் திணீவீக்ஷீ இதழுக்குக் கொடுத்த நேர்காணலில்
நவீனப்படுத்தப்பட்ட புதிய லெபர் கட்சியின் கருத்துநிலைக்கு ஏற்றவாறு இயேசு கிறிஸ்து
ஒரு னீஷீபீமீக்ஷீஸீவீsமீக்ஷீ என்று கூறினார். பிளயரின் கையில் எப்பவுமே ஒரு
வேதாகமப் பிரதி இருக்கும் என்று அவரது உற்ற நண்பரும் தற்போது அய்ரோப்பிய
ஒன்றியத்தின் வாணிகத் துறை ஆணையருமான றிமீtமீக்ஷீ விணீஸீபீமீறீsஷீஸீ
தெரிவித்திருக்கிறார். பிளயருடைய அரசியல் உரைகளை ஊன்றிப் படிப்பவர்கள் உவிலியச்
சொற்றொடர்கள் அவற்றில் மறைமுகமாகப் பின்னிக்கிடப்பதை உணர்ந்திருக்கலாம். ஓர்
உதாரணம். அமெரிக்க காங்கிரசுக்கு ஆற்றிய உரையில் கூட்டணித் துருப்புகள் பீவீபீ
ஸீஷீt stக்ஷீவீஸ்மீ ஷீக்ஷீ பீவீமீ வீஸீ ஸ்ணீவீஸீ என்று கூறினார். இந்த வேதவசனம்
ஆங்கிலேய உவிலிய நூல் ரிவீஸீரீ யிணீனீமீs க்ஷிமீக்ஷீsவீஷீஸீ இல் வருகிறது. ஆனால்,
பதவியிலிருந்தபோது தனது கிறிஸ்தவ விசுவாசம் பற்றி வெளிப்படுத்தத் தயங்கினார்.
அதற்கு ஒரு நேர்காணலில் அவரே கொடுத்த பதில்: மக்கள் அவரை ஸீuttமீக்ஷீமீக்ஷீ என
எண்ணக்கூடும். அவரது கத்தோலிக்க சமயத் தழுவலுக்கு அவருடைய குடும்பமும் ஒரு காரணம்.
அவரது மனைவியும் பிள்ளைகளும் கத்தோலிக்க மத விசுவாசிகள்.
அமெரிக்காபோல் பிரித்தானிய அரசியல்வாதிகள், சமயத்தை அவர்களுடைய அரசியல் சொல்லாடலில்
இலகுவில் புகுத்துவதில்லை. ஆங்கில அரசியல் பரப்புரைகளில் சமயப்பற்று தனியார்
சம்பந்தப்பட்டது என்ற எண்ணமே பரவலாகக் காணப்படுகிறது. அரசியல் விமர்சகர்களிடையேயும்
வேட்பாளர்களிடையேயும் மதம் பற்றிய வெளிப்படையான பேச்சு கேலியையும் சந்தேகத்தையுமே
ஏற்படுத்துகிறது.
அமெரிக்கா இதற்கு எதிர்மாறு. ஜார்ஜ் புஷ்ஷின் அரசியல் பேச்சுகளிலும் வெளிநாட்டுத்
தலையீடுகளிலும் இவருடைய கிறிஸ்தவ, வைதீகக் கோட்பாடுகளின் தூண்டுதல்களையும்
பாதிப்புகளையும் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் எபிரேய மோசேக்கு வந்த அழைப்பைப்போல்
அமெரிக்காவைத் தலைமை தாங்கி வழிநடத்தத் தான் அழைக்கப்பட்டதாக புஷ் கருதுகிறார்.
இந்தத் தகவலை ஷிtமீஜீலீமீஸீ விணீஸீsயீவீமீறீபீ எழுதிய ஜிலீமீ யீணீவீtலீ ஷீயீ
நிமீஷீக்ஷீரீமீ கீ ஙிusலீ என்னும் நூலில் பார்க்கலாம். ஒசாமா பின்லாடனைப் பிடிக்க
நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரி லிt.நிமீஸீ. கீவீறீறீவீணீனீ நி. 'யிமீக்ஷீக்ஷீஹ்'
ஙிஷீஹ்ளீவீஸீ கடவுள்தான் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அமர்த்தியிருக்கிறார் என்று
கூறியிருக்கிறார். இன்று புஷ்ஷின் இடத்தைப் பிடிக்க அவரது கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளர் பிuளீணீதீமீமீ ஒரு சிருஷ்டிவாத (நீக்ஷீமீணீtவீஷீஸீவீsனீ) நம்பிக்கையாளர்.
கடவுள் உலகத்தை ஏழு நாள்களில் படைத்தார் என்ற உவிலியச் சிந்தனையை முழுமையாக
நம்புவதாக வாக்காளர்களுக்குப் பொதுப்படுத்தியுள்ளார். மதத்தை அரசியலுக்கு
அனுசரணையாக்குவது குடியரசுக் கட்சிக்கு மட்டுமுள்ள முன்னுரிமையல்ல. கிறிஸ்தவத்தை
ஜனநாயகக் கட்சியும் ஆதாயப்படுத்தத் தயங்குவதில்லை. வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டிபோடும் பாராக் ஒபமாகூடத் தன்னைக் கடவுளின் சுருதியாகப்
பிரகடனப்படுத்தியுள்ளார். அத்துடன் அவரது நோக்கமே கடவுளின் இராஜ்ஜியத்தைப் பூமியில்
உருவாக்குவதே. கிளாரி கிளிண்டன் தன்னுடைய விசுவாசப் பயணத்தைப் பற்றிப் பகிரங்கமாகப்
பேசியது மட்டுமல்லாது தூய ஆவியின் பிரசன்னத்தைப் பல தடவைகளில் தன் வாழ்வில்
உணர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
பிளயரின் கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றிணைப்பில் பல ஒவ்வாத்தன்மைகள் பளிச்சென்று
தெரிகின்றன. பிளயரின் பழைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர் புதிதாகச் சேர்ந்த
கத்தோலிக்கச் சபையின் சிந்தனைகளுடன் ஒத்துப்போவதாய் இல்லை. கருக் கலைப்பு, ஓரின
ஈர்ப்பாளத் தம்பதிகள் தத்தெடுப்பு ( ரீணீஹ் நீஷீuஜீறீமீ ணீபீஷீஜீtவீஷீஸீ)
stமீனீ-நீமீறீறீ ஆராய்ச்சி முதலியவற்றிற்குக் கத்தோலிக்கத் திருச்சபை கடுமையான
பரப்புரையில் (ஜீக்ஷீஷீஜீணீரீணீஸீபீணீ) ஈடுபட்டபோது இவற்றிக்கு ஆதரவாய்ப் பேசியும்
நாடாளுமன்ற வாக்கெடுப்பிலும் தன்னுடைய ஒப்புதலைத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வளவுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஈராக் போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பை
அறிவித்திருந்தும் புஷ்ஷின் ஏகாதிபத்தியக் குறியார்வத்திற்கு உறுதுணையாக நின்று
பிரித்தானியப் படைகளைப் போருக்கு அனுப்பினார். ஈராக் யுத்த முடிவு எடுக்கும்முன்
புஷ்ஷ§ம் பிளயரும் ஒன்றாக ஜெபித்தே ஒரு தீர்மானத்திற்கு வந்ததாக ஷிtமீஜீலீமீஸீ
விணீஸீsயீவீமீறீபீ தன்னுடைய நூலில் எழுதியுள்ளார். தங்கள் பாவங்களை முற்றாகத்
துறக்காதவர்களுக்கு நரகத்தில் நிரந்தரமான ஆக்கினையுண்டு எனும் செய்தியைத் தற்போதைய
போப்பாண்டவர் 14ஆம் பெனடிக்டின் அருள் உரை ஒன்றில் காணலாம். ஈராக்கில் பிளயர் செய்த
பாவங்களுக்கு என்ன தண்டனை பெறுவார் என்று ஆசிரியர் கடிதப் பகுதிகளில் குத்தலாக
எழுதியிருந்தார்கள்.
அரசியலும் சமயமும் ஒன்று சேருதல் ஆபத்தான கலவை. இதற்குச் சரித்திரத்தில் பல
எடுத்துக்காட்டுகள் உண்டு. பரிச்சயமான உதாரணம், மத்திய காலச் சிலுவைப் போர்கள்.
தீவிர சமயவாதிகளிடையே காணப்படும் பெரிய எரிச்சலான குணம் அவர்களை ஆளுமைப்படுத்தும்
பக்தியல்ல. அவர்களின் ஆன்மிக இறுமாப்பும் தவறாத்தன்மையுமே. அவர்களுடைய வாசிப்பும்
பார்வைகளுந்தான் சரி என்ற திடகார்த்தம். தாங்கள் செய்வதுதான் கடவுளின் சித்தம் என்ற
பிடிவாதந்தான் பிளயரின் சில அரசியல் கணிப்புகளுக்கும் அவருடைய வெளிநாட்டுத்
தலையீடுகளுக்கும் உந்துதலாகயிருந்தது. எனக்குச் சரி என்று தெரிந்ததை நான் செய்தேன்
என்று பிளயர் அவருடைய பல உரைகளில் சொல்லியிருக்கிறார். அவர் வார்த்தைகளுக்குப்
பின்னால் மறைந்துகிடக்கும் குறியம் (நீஷீபீமீ): கடவுளின் கரம் என்னை நடத்திற்று.
தங்கள் தனிப்பட்ட நம்பிக்கையில் அதீத முதலீடு செய்கிறவர்களுக்கும் கெட்டியான
நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பிளயர் தினமும் வாசிக்கும் உவிலிய நூலில் ஒரு வசனம்
இருக்கிறது. ஒருவேளை இது அவரது கண்ணுக்குப் படாமலிருக்கலாம். இதோ அந்த வசனம்:
'விசுவாசத்தில் நிலைநிற்கிறீர்களோவென்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள், உங்களை
நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.' (2 கொருந்தியர் 13.5)
போராட்டங்களும் நவீனத்தின் பொற்கனிகளும் பிராந்தியத் தன்மைகளும்
புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர் சந்திப்புக் கூட்டங்களில் இலக்கியச் சண்டையும்
இருக்கும். அத்துடன் நீங்கிவந்த மண்ணின் அரசியல் பிரச்சினைகளின் தொடர்ச்சி
அதிகமாகத் தலைதூக்கும். மேற்கு வங்காள நாவலாசிரியர் தாமிமா அணமின் (ஜிணீலீனீவீனீணீ
கிஸீணீனீ) கி நிஷீறீபீமீஸீ கிரீமீ நாவலில் வாதத்திற்குரிய கொதிப்பான சமாச்சாரங்கள்
எக்கச்சக்கமாக இருந்தபோதிலும், கூட்டம் சச்சரவு இல்லாமல் மிக நாகரிகமாகவே நடந்தது.
பார்மிங்கமின் பல் பண்பாட்டு நிலையை மேலும் வலுவூட்டப் பல இனத்தினரும்
வந்திருந்தார்கள். பங்களா தேசத்தவரைவிடப் பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள்,
ஈராக்கியர், ஈரானியர், மலேசியர் இப்படிப் பலர். அவை நிறைந்திருந்த அந்தக்
கூட்டத்தில் இரண்டு ஆங்கிலேயர்கள் மட்டுமே. நாவல் என்னதான் ஆங்கிலத்தில்
எழுதப்பட்டாலும் உலகப் பொதுமையான விழுமியங்களை வெளிப்படுத்தினாலும் படைப்பாளியின்
இன அடையாளம் கருதி ஓரப்படுத்தப்படுகிறார்கள். ஆங்கிலேயரின் குறைந்த எண்ணிக்கைக்கு
அவர்களின் வாசிப்பு ரசனை குறுகிய நோக்கம்கொண்டது மட்டுமல்ல, அவர்களின் வாசிப்புச்
சுவைகூட கூறு கூறாக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஒன்பது மாதங்கள் நடந்த வங்காள விடுதலைப் போரை ஒன்பது அத்தியாயங்களில் அணம்
சித்தரித்திருக்கிறார். இது ஒரு தேசத்தின் கதை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின்
முக்கியமாக ஒரு தாயின் கதையுங்கூட. விடுதலைப் போராட்டப் படைப்புகள் தலைவர்களின்
நுண்ணிய திட்டமுறைத் திறன்களையும் போராளிகளின் சூரத்தமான துணிச்சல்களையும்
வர்ணிக்கும். ஆனால், இந்த நாவலில் சாதாரண மக்களின் பின்னணியிலிருந்து விடுதலைப்
போருக்கு அவர்கள் செய்யும் அன்றாடப் பணிகள் குறிப்பாகப் பெண்களின் பங்களிப்பு
பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. நாவலின் முக்கியப் பாத்திரமான ரெகெனாவும் அவரின்
தோழிகளும் போருக்குப் பணம் திரட்டக் கம்பளிப் போர்வைகள் தயாரிக்கிறார்கள். போரின்
தாக்கத்தினால் தளர்ச்சியடையும் இளைஞர்களுக்குத் தைரியம் கொடுக்கிறார்கள். காயப்பட்ட
ஒரு இராணுவ அதிகாரிக்குத் தன்னுடைய வீட்டில் தங்க இடம் கொடுத்து ரெகெனா தன்னையே
ஆபத்துக்குள்ளாக்குகிறார்.
கதையின் சாரத்தைவிட இந்த நாவல் தரும் சில செய்திகளைத் தருகிறேன். விடுதலைப்
போராட்டங்களில் தங்களை ஈடுகொடுக்கிறவர்கள் அதீத நாட்டுப்பற்று, கவர்ச்சியான அரசியல்
கருத்தாடல்கள், சரித்திரம் சாதிக்கும் பேரார்வம், இயக்கங்களின், தலைவர்களின்
ஒளிர்ச்சியான சாதனைகளால் ஈர்க்கப்படுவதில்லை. காதலும் பிள்ளைப்பாசமுங்கூடக்
காரணமாகயிருக்கின்றன. ரெகெனாவின் மகன் சொகில், தனக்குக் கிடைக்காமல் இன்னொருவனுக்கு
மனைவியாகப் போன பழைய காதலிக்குத் தன் முழு நேசத்தைத் தெரியப்படுத்தவே முக்தி பாணி
இயக்கத்தில் இணைந்துகொள்கிறான். இதேபோல் லெபனான் நாட்டு எழுத்தாளர் ணிறீவீணீs
ரிலீஷீuக்ஷீஹ் எழுதிய நிணீtமீs ஷீயீ tலீமீ ஷிuஸீ என்ற மூன்று தலைமுறை பற்றிய
பாலஸ்தீன விடுதலைப் போராட்ட நாவலில் வரும் போராளி யூனிஸ், தான் பங்குகொண்ட காரணம்
பற்றி இவ்வாறு கூறுகிறார்: 'மி பீவீபீஸீ' t யீவீரீலீt, னீஹ் யீக்ஷீவீமீஸீபீ,
யீஷீக்ஷீ tலீமீ றீணீஸீபீ ஷீக்ஷீ லீவீstஷீக்ஷீஹ். மி யீஷீuரீலீt யீஷீக்ஷீ ணீ
ஷ்ஷீனீணீஸீ மி றீஷீஸ்மீபீ.' வங்காள விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஒரு ஆதாயமும்
கிட்டாதபோதும் ரெகெனா தன் மகன்மீதுகொண்ட அன்பினால்தான் இந்தப் போரில் ஈடுபடுகிறார்.
அரூபமான (ணீதீstக்ஷீணீநீt) கருத்துகளைவிடச் சாதாரண மனித உணர்வெழுச்சிகளே
போராளிகளுக்கு உந்துதலாக இருக்கின்றன போலும்.
எழுபதுகளில் உருவாகிய விடுதலை இயக்கங்கள் நவீனத்தின் பெரும் விவரிப்புகளினால்
(ரீக்ஷீணீஸீபீ ஸீணீக்ஷீக்ஷீணீtவீஸ்மீs) உயிர் ஊட்டப்பட்டவை. சமத்துவம்,
சகோதரத்துவம், சனநாயகம் எனப் பரந்த முன்னேற்றக் கருத்தாக்கங்களுடன் ஆரம்பமாகும்
விடுதலை இயக்கங்கள், போராட்டங்கள் நாளடைவில் குறுகிய சமய, இன ஆளுமைக்கு அகப்பட்டுச்
சிதறிவிடுகின்றன. இந்த நாவலிலும் இந்த அடையாளங்களைப் பார்க்கலாம். வங்காள விடுதலை
இயக்கமான முக்தி பாணிக்குத் தொடக்கத்தில் கருத்தியல் திருவுருக்களான (வீநீஷீஸீs)
மார்க்ஸ§ம் லெனினும் துணை புரிகிறதாக நாவல் சித்தரிக்கிறது. இவர்களின் படங்கள்
முக்தி பாணிப் போராளிகளின் அறைகளை அலங்கரிக்கின்றன.
சே குவேராவின் எழுத்துக்களை விடுதலை இயக்கத்தினர் எல்லோரும் வாஞ்சையுடன்
வாசிக்கிறார்கள். தொடக்கத்தில் வங்காள விடுதலைப் போரில் முஸ்லிம்களும் இந்துக்களும்
இணைந்தே செயல்படுகிறார்கள். இந்து உறுப்பினர் பெயர் பார்த்தோ. ஒரு பல் சமய, பல் இன,
இடதுசாரி எதிர்ப்பாக ஆரம்பமாகிய போராட்டம் நாளடைவில் மாறாக சுயநலமான சமயத்
தீவிரவாதத்திலும் சமய, இன, மொழிச் சுத்திகரிப்பிலும் முடிவடைவதை நாவல்
சித்தரிக்கிறது. பிரபல வங்காள ஆசிரியர் ரவீந்தரநாத் தாகூரின் எழுத்துக்களைக்கூட
மறைந்திருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. உருது மொழிகூடச்
சந்தேகத்துக்குள்ளாகிறது. உருது பேசும் கறிக்கடைக்காரர் விரோதி எனக்
கணிக்கப்படுகிறார். மத அடிப்படைவாதம் இயக்கத்தில் தலைதூக்கிய பிறகு போராட்டமே
இருளடையத் தொடங்குகிறது.
இன்னுமொன்று. எழுபதுகளின் போராட்ட வீரர்கள் மேற்கத்தைய நற்கனிகளை நுகர்ந்தவர்கள்.
கதையின் முக்கிய மாந்தர்களின் கலாரசனை மேலைநாட்டு எழுத்தாளர்களாலும் சங்கீத
வித்துவான்களினாலும் பாதிக்கப்பட்டது. அணமின் கதைமாந்தர்கள் டிக்கன்ஸ்
படிக்கிறார்கள். அவர்களுடைய புத்தக அலமாரியை சிஷீறீறீமீநீtமீபீ றிஷீமீனீs ஷீயீ
ஞிஹ்றீணீஸீ ஜிலீஷீனீணீs அலங்கரிக்கிறது. ழிவீஸீணீ ஷிவீனீஷீஸீமீ னின் இசையில்
உருகிப்போகிறார்கள். யிமீணீஸீ கிக்ஷீணீsணீஸீணீஹ்ணீரீணீனீ எழுதிய ஒரு சிறுகதையில்
வரும் இலங்கை யிக்ஷிறி உறுப்பினர்கள் மார்க்ஸ§ம் சேக்ஸ்பியரும் மனப்பாடமாக
ஒப்படைக்கிறார்கள். இன்றைய எதிர்ப்புகள் சமயம் சார்ந்து புனிதப் பனுவல்களில்
அடைக்கலம் புகுவதால் இவை நவீனத்துக்கு அருட்செல்வங்களுக்கு எதிராகவே
செயல்படுகின்றன.
கேள்வி-பதில் நேரத்தில் தன்னுடைய பாட்டி நினைவுகூர்ந்த வங்காள தேசப் போராட்டக்
கதைகள் தான் நாவலை எழுதத் தூண்டியது என்று அணம் கூறினார். நாவலில் வரும் ரெகெனாவும்
பாட்டியும் ஒன்றா எனக் கேட்டபொழுது ஒருவரேதான் ஆனால் ஒரு வித்தியாசம். தன் பாட்டி
தன் வீட்டில் இராணுவ அதிகாரிக்குப் புகலிடம் கொடுத்தது உண்மை. ஆனால், கதையில்
வருவதுபோல் அவரைக் காதலிக்கவில்லை என்றார். கதையின் மாந்தர்கள் எல்லாம்
மேட்டுக்குடி மக்கள். அவர்களின் வாழ்வும் மதிப்பீடுகளுமே அதிகம் நாவலை
ஆளுமைசெய்கின்றன என்னும் விமர்சனத்திற்கு அணம் கூறிய பதில்: இந்தப் போராட்டத்தில்
மட்டும்தான் முழு வங்காள மக்களும் பங்கு பெற்றார்கள். இந்தப் போராட்டம் எல்லாத்
தரமட்ட மக்களுக்குமே பொதுவானது. ஆகையினால் உயர்குடி மக்களின் செயல்பாடுகளையும்
குரல்களையும் ஆவணப்படுத்துவது தவறல்ல.
இவருடைய நாவல், நிuணீக்ஷீபீவீணீஸீ பத்திரிகை வருடந்தோறும் நடத்தும் ஆசிரியர்களின்
முதல் நாவல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருந்தது. பரிசுக் குழு எத்தியோபியாவிலிருந்து
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஞிவீஸீணீஷ் விமீஸீரீமீstuவின்
சிலீவீறீபீக்ஷீமீஸீ ஷீயீ ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீக்குப் பரிசை வழங்கியிருக்கிறது. நான்
மென் குஸ்துவின் 227 பக்கங்கொண்ட நாவலில் 101ஆம் பக்கம்வரை வாசித்துவிட்டேன்.
குடியிருக்கவந்த நாட்டைப் பற்றிய பரிச்சயமான சில இருண்மையான பார்வைகள் தவிரப்
புதிதாகச் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. இவை வாசகர்களை மின்னூட்டம்
செய்யக்கூடிய புலப்பதிவுகள் அல்ல. மிகுதி 126 பக்கங்களில் மென்குஸ்து எனது கவனத்தை
இழுக்க அற்புதமான இலக்கியக் காந்தங்கள் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
நாவலின் கடைசியில் எவ்வளவோ உயிர்ச்சேதங்களிடையே கபடமற்ற தொனியில் ரேகனா பெருமிதமாக
இப்படிக் கூறுகிறார்: ஜிலீவீs ஷ்ணீக்ஷீ tலீணீt லீணீs tணீளீமீஸீ sஷீ னீணீஹ் sஷீஸீs
லீணீs sஜீணீக்ஷீமீபீ னீவீஸீமீ. ஜிலீவீs ணீரீமீ tலீணீt லீணீs தீuக்ஷீஸீமீபீ sஷீ
னீணீஸீஹ் பீணீuரீலீtமீக்ஷீs லீணீs ஸீஷீt தீuக்ஷீஸீமீபீ னீவீஸீமீ. மி லீணீஸ்மீ ஸீஷீt
றீமீt வீt. போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இலங்கை, ஈராக்கிய, பாலஸ்தீன,
லெபனான் தாய்மார்களில் எத்தனை பேர் இதே வார்த்தைகளைத் தைரியமாக மனம்விட்டுச்
சொல்லக் கூடும்.
|