|
கட்டுரை
ஒலியற்ற வசந்தம்
தியடோர் பாஸ்கரன் |
இயற்கையின் நியதியில், இயற்கையை நோண்டும் எந்த ஒரு செயலுக்கும்
ஒரு விலை உண்டு. ஒரு பதிலடி உண்டு. இயற்கையில் திருத்த முடியாத
மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதன் விலையை ஒவ்வொரு தலைமுறையும்
கொடுத்துக ்கொண்டேயிருக்க வேண்டும்... அணுவைப் பிளந்தது ஒரு
எடுத்துக்காட்டு.
பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம் | வடக்கிந்தியக் காடுகள் ஓதரிசு நிலம்ஔ
என்னும் பெயரில் 45 ஆண்டு களுக்கு (வரிவிலக்குடன்) குத்தகைக்கு
விடப்பட்டன. இவ்வளவு பணம் கொடுத்து ஆங்கிலேயரால் மட்டுமே வாங்க
முடிந்தது. இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளில் பணிக்குச்
சேர்க்கப்பட்ட விவசாயிகள் சந்தித்தக் கொடுமைகள், இண்டிகோ,
அபினித் தோட்டங்களில் சந்தித்ததைவிட மிகப் பயங்கரமாக
இருந்தன.
கவிதைகள்:
பெருமாள்முருகன்,
சு. துரைக்குமரன்
பத்தி
பழைய பிரதமர், புதிய புனிதம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா | பிளயரின் கத்தோலிக்கத் திருச்சபை
ஒன்றிணைப்பில் பல ஒவ்வாத்தன்மைகள் பளிச்சென்று தெரிகின்றன.
பிளயரின் பழைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர் புதிதாகச்
சேர்ந்த கத்தோலிக்கச் சபையின் சிந்தனைகளுடன்
ஒத்துப்போவதாய் இல்லை.
அகவிழி திறந்து
கண்ணன் | இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் ராஜீவ் காந்தி உதிர்த்த, 'பெரு மரம் வீழும்போது பூமி அதிரும்' என்ற
வாக்கியம்போலக் கடந்த நூற்றாண்டில் இன்னொரு வாக்கியம்
தெற்காசியாவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்குமா என்பது
சந்தேகமே. |
வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டுச் சிறப்புப் பகுதி
கட்டுரைகள்
பஷீர்: பூமியின் உரிமையாளர்
சுகுமாரன் | பஷீரின் மொழி இலக்கியத்தனமானது அல்ல. பேச்சு
மொழியிலிருந்து உருவானது அது. கடைசிவரைக்கும் திருத்தமான
மொழி அவருக்குக் கைவரவே இல்லை. இலக்கண வழு நிரம்பிய மொழியை
பஷீர் தெரிந்தே பயன்படுத்தியிருந்தார். அந்த மொழியை
ராவிச் செப்பனிட்டார். ஒரு கதையைப் பலமுறை
செழுமைப்படுத்தியிருக்கிறார்.
பஷீர்: மொழியின் புன்னகை
ஜெயமோகன் | பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல.
ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும்
மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும்
அவற்றில் இல்லை. புனைவுத் தருணங்கள் கவித்துவத் தரிசனத்தின்
ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை.
சிறுகதைகள்
தேன் மாம்பழம்
வைக்கம் முகம்மது பஷீர்,
தமிழில்: சுகுமாரன் | 'நம் எல்லாரையும்
அல்லாஹ் ஆசீர்வதிப்பாராகஒ என்று சொல்லிவிட்டுக் கிழவர்
படுத்தார். எங்கள் கண்ணெதிரில் யூசுப் சித்திக் இறந்து போனார்.
அஸ்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் போய்த்
தம்பியிடம் விவரம் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டுவந்தோம்.
ஜென்ம தினம்
வைக்கம் முகம்மது பஷீர்,
தமிழில்: குளச்சல் மு. யூசுப் |
காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே
வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித்
திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ,
நோக்கமோ
இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை
எழுத வேண்டும் |