|
ஆவணம்: ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய
பண்பாட்டு அடையாளம்
த. உதயச்சந்திரன், IAS |
உலகெங்கிருந்தும் தமிழகத்தை நோக்கிப் பிற நாட்டவர்களின்
கவனத்தைத் தைத்திங்களில் குவிக்கவைக்கக்கூடிய முக்கியத்
திருவிழா ஜல்லிக்கட்டு. மனிதநேயத்தையும் பலதரப்பட்ட மக்களின்
பண்பாட்டையும் அறிய விரும்பும் பிறநாட்டு மக்களின் வருகையைத்
தொடர்ந்து உறுதிப்படுத்திவருகிறது இவ்விளையாட்டு.
கட்டுரை: மரபை நினைவூட்டும் ஒரு கலை
விழா (சென்னை சங்கமம்)
செல்லப்பா | நாட்டுப்புறப்
பாடல்களின்வழி வெளிப்பட்ட தமிழகக் கலாச்சாரக் குரல்களின்
ஒலியில் வெளி நிரம்பியது. கலைஞர்களின் கடின உழைப்போடு
நேர்த்தியான ஒத்திகைத் திறனும் சேரும்போது நிகழ்த்தப்படும்
கலையானது உச்சத்தைத் தொடும் என்பதை நிரூபித்தது 'ஞாயிறு
போற்றுதும்'.
கலகக்காரர்களின் கால்வழி மரபு
டி. தருமராஜன் | ஐரோப்பிய
மிஷனரிமார்களின் மதத்தைத் தழுவினால் அரசியல் ஆதாயங்கள் உண்டு
என்ற நப்பாசையில் மட்டுமே மதம் மாறியிருந்த பிராமணர்கள், அந்த
மிஷனரிகள் திடீரென்று காணாமல்போன பதினெட்டாம் நூற்றாண்டில்
மீண்டும் பழையபடி இந்து மதத்திற்குத் திரும்பிவந்தார்கள்
என்பதும் உண்மை.
சிறுகதை: புவியீர்ப்புக் கட்டணம்
அ. முத்துலிங்கம் | அம்மையே,
புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது
இருந்து கொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக்
கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு நாளும்
அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக
அதற்கும் வரி கட்ட வேண்டுமென்றால், எப்படி?
பத்திரக்குழாய்
சந்ரு | பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கும் பத்திரக்குழாயில் உள்ள வீட்டுப்
பத்திரங்களிலும் துண்டுச் சிட்டைகளிலும் என்னென்ன விவரம்
எழுதியிருக்கிறது என்பதை அறியோம். இதற்கு எழுத்துக்கூட்டி
வாசிக்கத் தெரியாத பருவத்தையும் வாசித்து அறியவேண்டுமென்ற அவா
இன்மையையும் குறிப்பிடலாம்.
கவிதைகள்:
கருணாகரன் |
பத்திரக்கோட்டை:
தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை
ஸ்டாலின் ராஜாங்கம் | படம்
எடுப்பதோடு மட்டும் தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்கிறவர்
அல்ல தங்கர்பச்சான். தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சாரம்,
மக்களின் வாழ்நிலை குறித்தெல்லாம் கருத்துக் கூறுவதோடு அவை
தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்டுபவராகவும் இருக்கிறார்.
சிறப்புப் பகுதி
அஞ்சலி: ஆதிமூலம்
மறைந்தும் மறையாத ஆதிமூலம்
ந. முத்துசாமி | ஒரு சமூகத்தில்
வளங்களைச் சேர்க்கிறவர்கள் மிகவும் முக்கியமானவர்களாகப்
போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்துக்கு
மிகவும் முக்கியமானவர் ஆதிமூலம்.
ஆதிமூலம் தமிழ்க் காண்பியல் மரபின்
நவீன அடையாளம்
டிராட்ஸ்கி மருது | அவருடைய
சமகாலத்தில் நடந்த இலக்கியப் பரிட்சார்த்தங்களுக்கு
உருவகமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது அவருடைய ஒவ்வொரு கோடும்.
சமகாலப் படைப்பாளிகளுக்கு அவர் எப்போதும் ஒரு உந்து சக்தியாக
இருந்துவந்திருக்கிறார்.....
வாழும் கலைஞன்
சா. கந்தசாமி | தான் அரூபமாகக்
கண்டதைக் காட்சிப்படுத்துவதில் ஆதிமூலம் மனத்திண்மையுடன்
உழைத்தார். தன் படைப்புமீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டு
இருந்தார். தன் கலை கோட்பாட்டை தன் மரபு, ஐதீகம் - என்பதின்
வழியாகவே கண்டு பின்பற்றினார்.
பத்தி:
அரபிக் கடலோரம்
மலையாளம், மலையாளி - ஓர் எச்சரிக்கை
சக்கரியா | கேரளத்துக்குள்ளே
மலையாளிகளுக்கு விருப்பமான ஒரு பொருளாதார நிலை இல்லாமல்
போயிற்று. அரசியலால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள்
தொழிற்சாலைகளையும் பொருளாதார முயற்சிகளையும் திட்டமிட்டுக்
கவிழ்த்தன.
பத்தி:
பிறவழிப் பயணம்
விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!
ரவிக்குமார் | ரிஷி வாலியில்
பயன்படுத்தப்பட்டுவந்த முறையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல்
தமிழகக் குழுவினர் அதை அற்புதமாக மேம்படுத்திவிட்டனர். ஆங்கிலம்
பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவியல்,
சமூக அறிவியல் ஆகிய பாடங்களும்....
|