|
காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகள்
அவர்கள்
காணாமல் போய்விட்டவர்கள்
நாளிதழ்களைப் புரட்டினால்
அவர்களின் அடையாளங்களை
அறிந்துகொள்ளலாம்
தாடி வைத்திருப்பவர்களாகவும்
தன் குறிப்பை எப்போதும்
பைகளில் வைத்துக்கொண்டே
அலைபவர்களாகவும்
அவர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.
காணாமல் போனவர்களைப் பற்றி
முழுமையான எந்தத் தகவலும்
இதுவரை கிடைத்ததாக இல்லை.
நாங்கள் நாட்டைக் குலைக்க வந்த
தீவிரவாதிகள் . . .ஒ என்ற குறிப்புகள் மட்டும்
என்கௌண்டர்களில் கொல்லப்படும்
அவர்களின் பைகளிலிருந்து
எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
n
|