|
கட்டுரை
கட்டாயக் கிராமப்புற சேவை
பெருமாள்முருகன் | மருத்துவம்
பயில்பவர்கள் எப்போதுமே அரசு வேலையை இலக்காகக் கொள்வதில்லை.
தனிப் பயிற்சி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் நிறையச்
சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கம். தனி மருத்துவமனை வைத்து
நடத்துபவருக்கு அரசு வேலை கிடைத்தால் கூடுதல் கவுரவம்.
பத்தி
அகவிழி திறந்து: எதிர்ப்பு அரசியல்
கண்ணன் | காலச்சுவடு ஆசிரியர்
குழுவிற்கு விமர்சனத்திற்கு அப்பாலான புனிதங்கள் எதுவும் இல்லை.
அதே நேரத்தில் யாரையும் விமர்சிக்கும் கட்டுரைகளை நாங்கள்
வேண்டி வெளியிடுவதில்லை. காலச்சுவடு ஒவ்வொரு ஆளுமையாக
விமர்சித்துத் தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
காலச்சுவடு இதழின் வாசகர்களுக்கு அதன் இதழியல் பண்புகள்
விளங்கும்.
பத்தி: பிறவழிப் பயணம்
அம்மனுக்கு மனைவியாகும் சிறுமிகள்
ரவிக்குமார் | தமிழ்நாட்டில்
கோயிலுக்குப் பெண்களை விற்கும் வழக்கம் இருந்த தகவல்களைச் சோழர்
காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர்கள் தளிச்சேரிப் பெண்கள்,
பதியிலார், தேவரடியார், நாடகக் கணிகையர் எனப் பல பெயர்களில்
அழைக்கப்பட்டுப் பாலியல்ரீதியாகச் சுரண்டப்பட்டுள்ளனர்.
சிறுகதை
பிறகொரு இரவு
தேவிபாரதி | என் மரணம்
சப்தங்களற்றதாகவே இருக்கும்! அநேகமாக ஒரு வசந்தகாலத்தின்
அதிகாலைப் பொழுதில். தில்லியின் மையத்தில் ஆயிரம் வருடங்களாக
இருந்துவரும் மிக உயர்ந்த தேவதாரு மரத்தின் உச்சியில் வசிக்கும்
சிறு பறவை முதலாவதாக விழித்துக்கொண்டு என் மரணத்தை உலகுக்கு
அறிவிக்கும்.
கவிதைகள்:
ரமேஷ்பிரேதன்
இன்பா சுப்ரமணியன்
ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்
சைதன்யா
உரை
கவிஞர் கனிமொழியின் மாநிலங்களவை முதல்
உரை
அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால்,
அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவில் நாம் இடம்பெறவில்லை.
அதனால், இக்குழுவைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகளுடன் அணுசக்தித்
தொழிலில் ஈடுபடுவது என்பது நமக்கு மிகவும் கடினமானதாக
இருக்கிறது. மேலும், ஏற்கனவே அமலில் உள்ள தடைகளின் காரணமாக நேனோ
தொழில்நுட்பம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை நமக்கு
மறுக்கப்படுகின்றன..
|
சிறப்புப் பகுதி
கட்டுரை:
இன்றைக்கும் இருக்கும் காந்தி
யு. ஆர். அனந்தமூர்த்தி,
தமிழில்: நஞ்சுண்டன் | நீங்கள் ஓர் அமைப்பில் காந்தியைப்
பொருத்தப் போனால், அவர் அதில் சிக்கவேமாட்டார். அதற்குக் காரணம்
அவரது அளவுகோல் பகுத்தறிவின் தர்க்கம் சார்ந்தது அல்ல.
பகுத்தறிவின் தர்க்கத்தில் மட்டும் காணக்கூடிய நேர்மை அல்ல அவர்
கடைபிடித்தது.
காந்தி இன்றும்
தேவைப்படுகிறார்
ராமச்சந்திர குஹா, தமிழில்:
யதுநந்தன் | இந்தியாவில் தற்போது காந்தியை இந்து
வலதுசாரிகள் மட்டும் வெறுக்கவில்லை; இடதுசாரி மாவோயிஸ்டுகளும்
எதிர்க்கிறார்கள். தற்போது "தேசம் சந்திக்கும் மிகப்பெரிய
உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்" எனப் பிரதமரால்...
அறியப்படாத காந்தி்
ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் |
காந்தி சுதேசியத்தைவிடக் கதரை ஏன் முக்கியப்படுத்தினார் என ஒரு
நண்பர் கேட்ட கேள்விக்கு, காந்தி 'சுதேசியம் என்பது ஒரு
சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான
உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது.
புதைப்பதற்கோ அல்லது...
அம்பேத்கர்
பார்வையில் காந்தியம்
ஏ.கே. அப்துல் மஜீத், தமிழில்:
சுகுமாரன் | சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப்
பொறுத்தவரை ரூசோவும் ரச்கினும் டால்ஸ்டாயும் சொன்னதைத்தான்
காந்தி திரும்பச் சொல்கிறார் என்பது அம்பேத்கரின் கருத்து.
தமிழ்
எழுத்துலகமும் சுதந்திரப் போராட்டமும்
வண்ணநிலவன் | பாரதியைப்
போல் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர் திரு.வி.க. அவர்
தொழிற்சங்கவாதியாகவும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். ஆனால்,
விடுதலைப் போராட்ட காலத்தில் 39ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த
பாரதிபோல் ஒரு வியப்புக்குரிய எழுத்துலக ஆளுமை அவனுக்கு
முன்பும் பின்புமில்லை.
இறுதிச் சந்திப்பு
அஷிஸ் நந்தி, தமிழில்: தி.அ.
சீனிவாசன் | அறிவு புனிதமானதாகவும்
பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு
கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான
புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த
செயல்பாடுகளுக்கும்....
காந்திஜியின் இறுதி
200 நாட்கள்
வி. ராமமூர்த்தி | அன்றைய
தினம் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுக்கான ஒலிபரப்பை 19
மீட்டர் அலைவரிசையில் கேட்க முடிந்தது. மாலை 5.15 மணிக்கு
நடைபெற்று வந்த நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டது. ஒரு
முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு டெல்லி வானொலி
நிலையத்திலிருந்து ஒரு வேண்டுகோள் ஒலிபரப்பப்பட்டது.
|