|
கட்டுரை
வெந்து தணியும் அவதூறுகள்
கண்ணன் | 'காலச்சுவடு' இதழில் பலதரப்பட்ட பார்வைகளும்
விமர்சனங்களும் விவாதங்களும் பிரசுரமாகின்றன. இவற்றைக்
'காலச்சுவ'டின் நிலைப்பாடாகப் பார்ப்பது, வெளிப்படையாகச்
சொல்வதானால், முட்டாள்தனமானது. ஒரு இதழை, அது வெளியிட்ட
ஒன்றிரண்டு கட்டுரைகளின் அடிப்படையில்
எதிர்த்துக்கொண்டிருக்கும் அபத்தம் உலகில் வேறு எங்கேனும்
சாத்தியப்படுமா எனத்
தெரியவில்லை.
குஜராத் 2002: சுடும் உண்மை இந்துத்துவவாதிகளின் ஒப்புதல்
வாக்குமூலங்கள் | குஜராத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர
மோடி பற்றிக் கலவரக்காரர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள்,
தெஹல்கா, 3.11.2007
தமிழ்ச்செல்வன் படுகொலை - சமாதான முயற்சிகளுக்கெதிரான தாக்குதல்
விக்னேஸ்வரன் | தமிழ்ச்செல்வனது கொலை, யுத்தமுனையில் புலிகளைப்
பலவீனமடையச் செய்துவிடும் என்னும் நம்பிக்கை அரசுக்கு
இருக்கும் என்று யாரும் நம்பத் தேவையில்லை. அப்படி
நம்பியிருந்தாலும் அதற்குப் பின் முகமாலைப்பகுதியில் நடந்த
யுத்தத்தில்
அரசுப்படைகள் எதிர்கொண்ட பெரும் அழிவுகள் அந்த நம்பிக்கையைத்
தகர்த்திருக்கும்.
கற்றது தமிழும் பொதுப்புத்தியும்
பெருமாள்முருகன் | இன்றைய சூழலுக்கேற்பத் தமிழ்ப்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நமது
கல்வித்
திட்டம் இல்லை. பாடத்திட்டங்களில் மொழி இலக்கியக் கல்வியில்
காலத்துக்கேற்ற மாற்றங்கள் இல்லாத நிலையைப் பற்றி நிறையப்
பேச வேண்டியிருக்கிறது.
தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணியங்களும்: சில எண்ணங்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா | தற்கொலைக் குண்டுதாரித்தனம்
இஸ்லாம் சமயத்துக்கு மட்டுமுள்ள ஏகபோக உரிமையல்ல. மற்ற
மதங்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் இலட்சிய
முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டாடப்படுகிறார்கள். சமய
இலக்கியங்களில்
கௌரவிக்கப்படுகிறார்கள்.
திரை:
நாலு பெண்ணுங்ஙள்
சுகுமாரன் | இலக்கியப் படைப்பை அடிப்படையாக வைத்து அடூர்
உருவாக்கும் திரைக்கதைகளில் இந்தக் கச்சிதம் ஓர் அபூர்வமான
எளிமையையும் அழகையும் வழங்குகிறது.
|
சிறுகதை
இரவு
எம். கோபாலகிருஷ்ணன் | உடலின் ஒவ்வொரு நரம்பும் மின்னலைச்
சூல்கொண்டதுபோல் நெளிந்தாடிக்கொண்டிருந்த அவளை நெருங்கி
அணைத்துக் கொண்டால் போதுமென இருந்தது. குளிரின் துடிப்பும்
காமத்தின் உன்மத்தமும் அவன் உடலை நடுங்கடித்தன. முகமறியா
ஒரு பயமோ தயக்கமோ அவனைக் கவ்வியிருந்த அந்த ஒரு கணத்தில்
மார்பில் ஒரு மின்னல் வெட்டுப் பளீரென்று ஒரேயொரு கணம்
அறைந்து மறைந்தது.
மயான நகரம்
அரவிந்தன் | ராணிக்கு நாற்பத்தியேழு வயதானபோது பதினெட்டு வயதில்
ஒரு மகன் பிறந்தான். அவனது வருகையை தேசம்,
குறிப்பாகத் தலைநகரம், ஓராண்டுக் காலம் வரையிலும் கொண்டாடியது.
அரசியின் நகர உலாக்கள் அதிகரித்தன. உலாக்களிலும் அரச
மடல்களிலும் பொது இடங்களிலும் ளவரசரின் படங்களும் சக்தியின்
திருவுருவப் படங்களுக்குக் கீழ் வீற்றிருந்தன.
அஞ்சலி
லா.ச. ராமாமிர்தம் (30.10.1916 - 30.10.2007)
வண்ணநிலவன் | லா.ச.ரா.வின் உலகம் வேறுவிதமானது. லா.ச.ராவிடம்
பு.பியின் குத்தல், கேலி மிகக் குறைவு. பு.பியின் கதைகளில்
இடம்பெறும் சோகம் விமர்சனத்துடன் கூடிய துயரம். லா.ச.ராவின்
சோகம் தீவிரமானது.
லா.ச.ரா. என்கிற
கைவினைஞர்
மலர் மன்னன் | லா.ச.ராவை எப்போது நினைத்துக் கொண்டாலும் அவரது
அடர்த்தியான வெண்ணிறப் புருவங்கள்தாம் கண்ணெதிரே
தோன்றுகின்றன. கூடவே சிங்கத்தின் பிடரி போன்ற அவரது சிகையும்.
இந்தச் சித்திரம் என்றும் அழியாது.
தி.பெ. கமலநாதன் (04.11.1923 - 04.11.2007)
ரவிக்குமார் | தலித் வரலாற்றை மீட்பதற்கான பங்களிப்பில்தான்
அவரது முக்கியத்துவம் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும்
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் தமிழ்நாட்டில் நடந்த
தலித் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களைச்
சேகரித்துப் பாதுகாத்தவர் கமலநாதன்.
கவிதைகள்:
அய்யப்ப மாதவன்,
பொ. செந்திலரசு
|