|

மறுவாழ்வு
(கட்டுரை)
ஜனகப்பிரியா
முதல் பதிப்பு: ஜூலை 2007
பக். 48, நன்கொடை ரூ.10.
வெளியீடு:
அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்நாடு.
கிடைக்குமிடம்:
கு.சக்கையன்
லட்சுமி குணசாலி இல்லம்
வினோபா கிராமம்
கல்லமநாயக்கர்பட்டி, சிவகாசி. |
காலங்காலமாகத் தூய்மையின் அடையாளமாக மேல்தட்டு வர்க்கமும் அழுக்கின் அடையாளமாகக்
கீழ்த்தட்டு வர்க்கமும் இருப்பதாக மக்களுக்குக் கற்பிக்கப்பட்டுவருகிறது.
கீழ்த்தரமான பணிகளைத் தாழ்த்தப்பட்ட மக்களே செய்ய வேண்டுமென்ற மேல்சாதி ஒடுக்குமுறை
இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மலம் அள்ளும் வேலை ஒரு பிரிவினருக்கே
உரியதாகச் சுமத்தப்படுகிறது. மாற்றுத் தொழில் இல்லாத நிலையில் அதையே செய்ய வேண்டிய
சூழலும் ஏற்படுகிறது.
'அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு' வெளியிட்டுள்ள 'மறுவாழ்வு' என்னும் சிறு
வெளியீடு, அம்மக்களின் துயரத்தையும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும்
பேசுகிறது. உயிரைப் பணயம் வைத்து நோய்க் கிருமிகள் நிரம்பியுள்ள மலக்குழிகளில்
இறங்கித் துப்புரவு செய்யும் தொழிலாளர்களுக்கு, நூற்பாலைகள் நிறுவுதல், விசைத்தறிகள்
அமைத்தல், பால் பண்ணைகள் அமைத்தல், காலணி மற்றும் டயர் உற்பத்தித் தொழிற்சாலைகளை
அமைத்தல் போன்ற மாற்று ஏற்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளார் நூலாசிரியர் ஜனகப்பிரியா.
மனிதர்கள் அனைவரையும் தன்னைப்போல் மதிக்கிற நாகரிகம் - மனிதநேய உணர்வு வளர்வதற்கு
நமது கல்விப்புலம், பண்பாட்டுப்புலம், அரசியற்புலம் ஆகியவற்றில் முயற்சிகளை
முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நூலாசிரியர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். |