 |
கட்டுரை
சேதுக் கால்வாய்: பாதையை மறிக்கும் பாலம்
தேவிபாரதி |
அறிஞராகவும்
எழுத்தாளராகவும் போற்றப்படும் நம் முதல்வருக்கு அறிவியல்
அடிப்படையற்ற ஒரு மூடக்கருத்தை
அறிவார்ந்த தளத்தில் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள்
இருக்கும்போது அவர் ஏன் அதை உணர்வு சார்ந்த தளங்களுக்கு
நகர்த்திச்
சென்றார்?
இராமானுஜம்
மீட்டெடுத்த கைசிக நாடகம்
அ.கா. பெருமாள் | நம்பாடுவானைப்
பார்த்தபோது, ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப்
புசிக்க அவன் விரும்பவில்லை. அழகிய நம்பியின் முன் பாணன் பாடிய
பாடலைப் பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில்
விருப்பமில்லை..
அக்கறைத் தொனிகள்
சே. இராமானுஜம் | நாடகவியல்
தனித்துவம்மிக்க ஒரு துறையாக வளர்ந்து தொல்லியல், மொழியியல்,
இனக்கவித்துவம், இணை இசையியல், சமய வரலாறு, பண்பாட்டு வரலாறு,
வரலாறு, மற்றும் நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளோடு இணைந்த
ஆய்வுகளாகவும் ஆவணங்களாகவும் விரிகிறது..
வானவில்லால்
வளைத்துக் கட்டலாம்
அ. ராமசாமி | அரங்கப்பயிற்சி
என்பது அடிப்படையில் விளையாட்டுகளிலிருந்து உருவாவது. இதில்
விளையாட்டின் வளைகோடுகளும் நேர்கோடுகளும் சேர்ந்து உருவாக்கும்
பருண்மைக்குள் மனித மனத்தின் லயங்கள் என்னும் அரூபத்தை
உண்டாக்கும் வித்தைகள் கூடிவர வேண்டும்..
பாகிஸ்தான்: ராணுவ
சர்வாதிகாரமா? அடிப்படைவாத அராஜகமா?
ரவிக்குமார் | பாகிஸ்தானில்
மதஅடிப்படைவாதத்தையும் தாராளமயத்தையும் சேர்த்து முடிச்சுப்போட
அமெரிக்கா செய்த முயற்சி தோற்றுப் போனதால்தான் மிதவாத ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அது
திட்டமிடுகிறது.
பயணக் கட்டுரை
அங்கோர் வாட்: இந்தியக் கலை மரபின் உச்சம்
பி.ஏ. கிருஷ்ணன் | இந்தக் கோவில்
கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே (1914இல்) இதனுடைய மதிப்பு கலைத்
திருடர்களுக்குத் தெரிந்துவிட்டது. பல அரிய சிற்பங்கள் இந்தக்
கோவிலிலிருந்து சூறையாடப்பட்டன. இந்தத் திருடர்களில்
முக்கியமான திருடரின் பெயர் - ஆந்த்ரே மால்ரோ.
|
 |
பத்தி
கலைஞரின் கேள்விகள்
சக்கரியா | புராணிகங்களை
(myth)வரலாறாக்க முயல்வதன் கபடத்தை நாம் இனங்காண வேண்டும்.
அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குப் புராணிகம்
மதிப்புக்குரியது. அந்த நம்பிக்கையை நாமும் மதிக்க வேண்டும்.
அஞ்சலி
பொ. வே. பக்தவச்சலம் (13.10.1936 - 02.09.2007)
பெருமாள்முருகன் |
இளம் வயதில் வறுமையிலும் கல்வி பயில்வதற்கான போராட்டத்திலும்
உழன்றவர். துயரங்களுக்கிடையே மேலெழுந்துவரும் ஒருவருக்கு
மார்க்சியம் எதையும் திறந்த மனதோடு அணுகும் பயிற்சியை
வழங்கும். அத்தகைய பயிற்சி உடையவர் அவர் என்பதைப் பல
சந்தர்ப்பங்கள் காட்டின..
நெடுங்கதை:
உள்ளோசை கேட்பவர்கள்
யுவன் சந்திரசேகர் |
இறங்கினாள். கட்டிலில் அமர்ந்தாள். வைத்த கண் வாங்காமல் என்னை
உறுத்துப் பார்த்தாள். மாடத்திலிருந்த அகல் விளக்கின்
வெளிச்சம் அவள் முகத்தின் சோபையைக் கூட்டியது. அழகிதான்.
சந்தேகமில்லை. குறிப்பாக அந்த உதடுகள். அவற்றில்தான் என் ஆயுளை
முடித்துவைக்கும் விஷம் இருக்கிறது.
கவிதைகள்
கவிதா
தேவேந்திர பூபதி
எஸ். தேன்மொழி
விவாதம்
ஊர் விலக்கம் தேவையா?
களந்தை பீர்முகம்மது
| "அல்குர்ஆனை அதன்மீது
உங்கள் உள்ளங்கள் ஒற்றுமைப்பட்டிருக்கும்வரை ஓதுங்கள்; நீங்கள்
கருத்து வேறுபாடுற்றால் எழுந்து விடுங்கள்".
சுந்தர ராமசாமி
விருது
அறியப்படாத களத்தையும் சூழலையும் சமகால இலக்கியத்தில் முதன்மை
பெறச்செய்யும் படைப்பாற்றலுக்காகக் கண்மணி குணசேகரன்,
நாகர்கோவிலில் உள்ள நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் இந்த
ஆண்டுக்குரிய 'சுந்தர ராமசாமி விருதை'ப் பெறுகிறார்.
திரை: அம்முவாகிய
நான்
கவிதா |
பாலியல் தொழிலாளி ஒருவருக்கு
வாழ்வு கொடுக்க முன்வரும் எழுத்தாளன், திருமணமான பாலியல்
தொழிலாளிக்கு வாழ்வு கொடுக்க முன்வருமளவுக்கு ஏன் 'முற்போக்காக
இருக்கவில்லை?'
|
 |