 |
கட்டுரை
ஒரு 'பயங்கர'மான கற்பனை
தேவிபாரதி | மன்மோகனை நினைத்தால்
முதுகுத்தண்டு சில்லிட்டுப் போய்விடுகிறது. மன்மோகன்
அனைத்தையும் கடந்து நிற்கிறாரா என்ன? அவரது உரைகளில் சவால்கள்
இல்லை, உடல் அசைவுகளில் வழக்கத்துக்கு மாறானது என எதுவுமே
தென்படவில்லை, தவறிப்போயுங்கூட அவர் தனது கைகளைத் தோளுக்கு மேல்
உயர்த்துவதில்லை.
ஆவணப்பட விழா:
நூறு கோடிக் கண்கள்
சாதி: காட்சியும் பதிவும் பார்வையும்
அழகரசன் |
சென்னையைச் சேர்ந்த ப்ரகிருதி
பவுண்டேஷன் கடந்த ஆகஸ்ட் 15 முதல் 19வரை நூறு கோடிக் கண்கள்
(One Billion Eyes) என்னும் தலைப்பில் இந்திய அளவிலான ஓர்
ஆவணப்பட விழாவை நடத்தியது. சாதி என்னும் பொருளில் நடத்தப்பட்ட
இவ்விழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட 'தீண்டப்படாத
இந்தியா' என்னும் ஆவணப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ஸ்டாலினின் 'தீண்டப்படாத
இந்தியா'
ஆர்.வி. ரமணி |
கடைசியில் அந்த மாபெரும் செயல்
நிகழ்த்தப்படுகிறது. என் மதிப்பீட்டில் இது இந்து மத வரலாற்றில்,
நம் நாட்டின் சுதந்திரத்தில் பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிக
முக்கியமான செயல்.
நேர்காணல்:
கே. ஸ்டாலின்
மனுவை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துக் குரூரமான நகைச்சுவை
உணர்வை வெளிப்படுத்தும் திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று
சில சமயங்களில் நினைத்தேன். தீவிரமான மதவாதிகள் சிலர் தயக்கமே
இல்லாமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதைக் கண்டு
ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..
கட்டுரை:
சில புத்தகங்கள், சில எழுத்தாளர்கள், சில சர்ச்சைகள்
நஞ்சுண்டன் |
தன் விமர்சனத்தைக் கவனிக்காமல்
தான் பேசியதிலிருந்து ஒரு வாக்கியத்தை மட்டும் உருவித் தனக்கு
எதிராக நடத்தப்பட்ட இந்தத்
துர்ப்பிரச்சாரத்தால் மனமுடைந்த அனந்தமூர்த்தி இனி
ஊடகவியலாளர்கள் உள்ள சபையில் பேசப்போவதில்லை என
விரதம்பூண்டுவிட்டார்.
கட்டுரை:
'வரையறைக்குள் சிக்காத உறவு'
நெய்தல் கிருஷ்ணன் | கலைஞரும்
அண்ணாவும் ஒவ்வொரு வட்டங்கள். அதுபோல ஏராளமான வட்டங்கள்
இருக்கின்றன. அவற்றின் உள்ளேயும்
நீங்கள் நுழைந்து பார்க்கலாம் என்றார்.
|
 |
கட்டுரை:
பாலைவனமாகும் தேரிக்காடும்,
கலைஞர் மறந்த திருக்குறளும்
நித்தியானந் ஜெயராமன் | கருணாநிதி
தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார்.
எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை
ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர்
பேசுகிறார்.
பத்தி:
அகவிழி திறந்து
கண்ணன் | ஆர்.எஸ்.எஸ்.
அரசாங்கம் ஏற்பட்டால், அதன் சென்சார் போர்டில் பணியாற்றத்
தகுதியான ஆச்சாரமான கருத்துகள்கொண்ட இந்தப்
'படைப்பாளி', இங்கு 'முற்போக்கு' வட்டாரத்தில் உலாவுவது
தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.
சிறுகதை:
வெள்ளி மீன்
பெருமாள்முருகன் |
பூபதி கோரைக்குள் வெகுதூரம் வந்திருந்தான். ஆள்களும் நாய்களும்
அரவமிட்டவாறு வானியைச் சூழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இதற்குமேல் அசைவு காட்டாமல் இருப்பதுதான் நல்லது என்று
தோன்றியது.
ஊடக
வெளி: நகல்களின் பெருக்கம்
அ. ராமசாமி | ஐரோப்பியக்
கல்வியின் வழியாகத் தோன்றிய வாசிப்புப் பழக்கத்திற்குத்
தீனிபோடும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிகைகள், அரங்க
நிகழ்வுகள், திரைப்படச் சாதனங்கள் என ஒவ்வொன்றும் நடுத்தர
வர்க்கத்தைக் குறிவைத்துக் கடை விரிக்கப்பட்டவை.
கவிதைகள்
வினோதினி
அனார்
அழகு நிலா
ஆகர்ஷியா
சிறுகதை:
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்
காப்ரியேல் கார்சியா
மார்க்கேஸ் | கப்பல் பயணம் முழுவதும் எல்லாருடனும் நட்பு
பாராட்டியிருந்த திருமதி புருடென்ஷியா லினெரோவுக்குத்
திடீரென்று அவர்கள் எல்லாரும் அந்நியர்களாகவும்
மாறிப்போனவர்களாகவும் தெரிந்தார்கள். கரை கண்ணில்பட்டதும்
கடலுடன் தோன்றியிருந்த முடிவற்ற காதல் முடிந்துபோனது.
திரை:
தேசத்திற்குத் தந்தை - மகனுக்கு?
'காந்தி என் தந்தை' எழுப்பும் கேள்வி
மலர்மன்னன் | தாய்நாட்டின் சுய
தொழிலை மீட்டெடுக்க அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்குமாறு
காந்தியடிகள் விடுக்கும் அறைகூவலை நாடே ஏற்கிறது.
|
 |