Google   www kalachuvadu.com

 

நானும் என் எழுத்தும்
அவரும் அவர்தம் எழுத்தும்
 
அண்மைக்காலமாகப் பண்பாட்டுத் தளத்தில் காத்திரமான தாக்கங்களை உருவாக்கிவரும் தலித்தியச் சிந்தனைகள், அவற்றை ஆதாரமாகக் கொண்டு கிளர்ந்தெழும் கலை, இலக்கியங்கள் பற்றிய விவாதங்களையும் பரிசீலனைகளையும் உருவாக்கும் நோக்கில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மையம் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் சென்ற வருடத்தில் தொடங்கி ஒரு தொடர்சொற்பொழிவை நிகழ்த்தியது. தமிழின் முக்கியமான தலித் இலக்கியவாதிகள் பலருடைய நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குறித்த ஆய்வரங்கமாகத் திகழ்ந்த இத்தொடர் நிகழ்வில் இரண்டு நாவலாசிரியர்கள், இரண்டு சிறுகதையாசிரியர்கள் மற்றும் இரண்டு கவிஞர்கள் என அறுவரைக் குறித்த ஆறு முக்கியமான விமர்சகர்களின் உரைகளும் தமது படைப்புகள் குறித்த படைப்பாளிகளின் அனுபவப்பகிர்வுகளும் இடம்பெற்றன. பலவிதமான விவாதங்களை உருவாக்கிய அந்த உரைகள் மற்றும் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் காலச்சுவடு இதழில் தொடர்ந்து வெளியிடப்படும் எனச் சென்ற இதழில் அறிவித்திருந்தோம்.

இவ்விதழில் எழுத்தாளர் இமயம் தனது படைப்பியல் அனுபவங்கள் குறித்து வாசித்த கட்டுரையும் இமயத்தின் நாவல்கள் குறித்து அரவிந்தன் முன்வைத்த விமர்சனக்கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வு 28.2.2007 அன்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மையத்தில் நடைபெற்றது. இவை குறித்த வாசக எதிர்வினைகளைக் காலச்சுவடு வரவேற்கிறது.

- ஆசிரியர்

உள்ளடக்கம்

 

 

Google