Google   www kalachuvadu.com

 

ஷியாம் பெனகலுக்கு பால்கே விருது
2005ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது, புகழ் பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகலுக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் சிறப்பான சேவை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது. ரூ. 2,00,000 ரொக்கப் பரிசு, தங்கத்தாமரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றைக்கொண்டது இவ்விருது. 1973இல் ஆங்குர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷியாம் பெனகல் தன் மந்தன், பூமிகா, கல்யுக், மண்டி போன்ற திரைப்படங்களுக்காக உலக அளவில் மதிக்கப்படும் இந்தியத் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

இந்திய வாழ்வின் அக மற்றும் புற நெருக்கடிகளைத் தன் படங்களின் மூலம் விவாதித்த பெனகல் இந்திய சினிமாவின் தனித்த அடையாளம் குறித்த அக்கறைகளை உருவாக்குவதற்கு முயல்பவர் எனலாம்.

24 முழு நீளத் திரைப்படங்களையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆவணப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ள பெனகல் ஏற்கனவே நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றிருப்பவர்.

தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராகவும் செயல்படும் பெனகலுக்குக் காலச்சுவடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளடக்கம்

 

 

Google