 |
கட்டுரை: ஆதிதிராவிடன்: 'கற்பனை'யாக்கப்பட்ட இதழ் (உண்மெய்யும் திரிபும்)
ஸ்டாலின் ராஜாங்கம்
| பறையர்களைச் சென்னையைவிட்டே
அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின்
அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும்
திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின.
இவ்விடத்தில் எம்.சி. ராஜா நீதிக்கட்சியிடமிருந்து விலகி
நின்றார்..
எழுத்தும் எதிர்ப்பும்:
தஸ்லிமா நஸ் ரீன்
களந்தை பீர்முகம்மது
| லஜ்ஜா நாவலை எழுதியது முதற்கொண்டே
தஸ்லிமாவுக்குச் சோதனைக் காலம் ஆரம்பமாகிவிட்டது. அந்த நாவல்
உரிய முறையில் புரிந்துகொள்ளப்படாதது பெரிய சோகம். ஒரு பெண்ணின்
எதிர்ப்பும் எழுத்துக்களும் எந்தவொரு மதத்தின் நியாயசபையிலும்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
நானும் என் எழுத்தும்: தலித் எழுத்து: படைப்பாளிகளின்
அனுபவங்கள் விமர்சனப் பார்வைகள்
இமையம்
| என்னுடைய பாத்திரங்கள் பெரிய ஆசை கொண்டவர்களோ பெரிய
கனவுகள், லட்சியங்கள், எதிர்பார்ப்புக் கொண்டவர்களோ அல்ல.
பசியைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுவதுதான் அவர்களுடைய
வாழ்க்கையாக இருக்கிறது.
இமையத்தின் நாவல்கள்: ஆவணப் பதிவுகளினூடே நிகழும் கலை
முயற்சிகள்
அரவிந்தன்
| இமையத்தின் மூன்று நாவல்களிலும் பிரதிபலிக்கும் ஒரு
பார்வையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. தலித்துகளின் வாழ்வை,
சாதி அமைப்பில் அவர்கள் படும் துயரை, அதை அவர்கள் எதிர்கொள்ளும்
விதத்தை உணர்ச்சிப் பிசுக்கோ மிகையோ கோஷங்களின் துணையோ இல்லாமல்
சித்தரிக்கிறார்.
பத்தி:
அகவிழி திறந்து
கண்ணன்
| தமிழ் அச்சு ஊடகங்களில் பணியாற்ற விரும்புபவர்கள்
தமிழைப் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கிலாந்து:
மறு பார்வை, பொடியனின் கதையும் காலனிய உள்நோக்கமும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
| ஹாரி பொட்டருக்குப் பதிலாக டோ னி
பிளேயரைக் கற்பனைசெய்து பாருங்கள். டோ னி பிளேயர் அவருடைய
அரசியல் பிரசங்கம் ஒன்றில் சொன்ன உலகினை மறு அமைப்புச் செய்வோம்
என்ற வாக்கியத்தை யோசித்துப் பாருங்கள்.
|
 |
அஞ்சலி
இங்க்மார் பெர்க்மன்
மைக்கலேஞ்சலோ அன்டோ னியோனி
அசோகமித்திரன்,
அம்ஷன் குமார்,
விஸ்வாமித்திரன்
| பெர்க்மனின்
படங்களில் எளிதானது என்று ஒன்றும் கிடையாது. தீவிரத்தன்மை
அவருடைய இயல்பு. அந்த இயல்பின் பரிமாணங்கள் தேர்ந்த
விமரிசகர்களால்கூடப் பூரணமாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை.
இழந்த நம்பிக்கையை மீட்டுக்கொள்ள மனிதனுக்கு சினிமாவின் மொழி
உதவக்கூடும் என்பதை அன்டோ னியோனி வலிமையுடன் உணர்த்தினார்.
பாவலர் பாலசுந்தரம் (18.01.1924 - 01.08.2007)
பொ. வேல்சாமி
| தொல்காப்பியரே மீண்டும் பிறந்து வந்து தன்னுடைய
நூலைத் தான் கொண்டுள்ள நியாயங்களுடன் தமிழ் மொழியின்
அமைப்பையும் செம்மையாக இணைத்து விளக்குவது போன்று இவருடைய உரை
அமைந்துள்ளது.
சிறுகதை:
பூச்சி
சந்திரா | இதுவரை யாருமே வட்டக்கிணத்தின் ஆழத்தை அறிந்து
பிடிமண்ணை எடுத்துவர முடியவில்லை. நீச்சலடிக்கத் தெரியாத பூச்சி
அதன் பிடி மண்ணை எடுத்துவர விரும்பினான். தான் ஒரு ஆண் என்பதை
ஊர்க்காரர்கள் முன் நிரூப்பிப்பதே தான் வாழ்வதற்கான ஆதாரமாகக்
கருதினான்..
ஆலங்கட்டி
சுமங்கலா
| அவன் வழிக்கு வந்துட்டா போதும் என்னும்போது அவள்
தொண்டையிலேயே தங்கிக்கொண்டிருந்த - அவனுடைய அப்பாவைப் போல
ஆகாதிருந்தால் போதும் என்னும் - வார்த்தைகளை மாமு தானாக
அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தான்..
கவிதைகள்:
இசை
கார்க்கோ
எஸ். நடராஜன்
சைதன்யா
நேர்காணல்
ஜி.எஸ். லட்சுமண அய்யர்
சந்திப்பு: இந்திரா, இரா. முருகானந்தம், ச. ராம்குமார்
| என்ன
சொல்வது . . .? நான் பெரிய எழுத்தாளனோ சிந்தனையாளனோ அல்ல;
சாதாரண ஊழியன். என்னால் இயன்றதைச் செய்துவருகிறேன். எனக்குப்
பிறகு இந்தப் பள்ளி, ஆஸ்டல், ஐ.டி.ஐ. இதையெல்லாம் யாராவது
தொடர்ந்து நல்லமுறையில் நடத்தினால் போதும் வேறென்ன வேண்டும் .
. . ?
|
 |