Google   www kalachuvadu.com

 

அறிவிப்பு

நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும்
இளம் படைப்பாளிகளுக்கான
சுந்தர ராமசாமி விருது

அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசியும் எழுதியும்வந்த சுந்தர ராமசாமியின் நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவுசெய்திருக்கிறது.

இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். அந்தப் பங்களிப்பு, படைப்பு ரீதியாக வலுவானதாக இருப்பதுடன், சூழலின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும்வண்ணம் இருத்தல் கூடுதலான தகுதியாகக் கொள்ளப்படும்.

40 வயதுக்கு உட்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் இவ் விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். இவர்கள் படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக இருப்பதும் அவசியம்.

இந்த விருதுக்குத் தகுதியான படைப்பாளிகளின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் நெய்தல் அமைப்பு கேட்டுக்கொள்கிறது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பாளிகளையும் பரிந்துரைக்கலாம். குறிப்பிட்ட ஒரு படைப்புக்காக அல்லாமல் தொடர்ச்சியான பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படும்.

பரிந்துரைப்பவர்கள் தங்கள் பரிந்துரைக்கான காரணங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். 2007 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பரிந்துரைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டு நடுவர்கள் விருதுக்கு உரிய படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நடுவர் குழு: சுகுமாரன், பாவண்ணன், அரவிந்தன்

விருதில், பாராட்டுப் பத்திரமும் ரூபாய் 10,000 ரொக்கப் பரிசும் அடங்கும்.

2007 அக்டோபர் மாதத்தில் நடைபெறும்

பொது நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்படும்.

தொடர்புக்கு:
நெய்தல் கிருஷ்ணன்
சரவணா இல்லம்
51, ஈத்தாமொழி சாலை
கோட்டாறு
நாகர்கோவில் 629 002.
செல்போன்: 9443153314

உள்ளடக்கம்

Google Ads.....

Google