Google   www kalachuvadu.com

 

சு.ரா:

அழகிய மனமும் சிந்தனையும்

ஹியூபர்ட் சதீஷ்

கடவுள் இல்லாதவர்களுக்குப்
பெரும் எழுத்தாளர்களே புனிதர்கள்.

- அனிடா புரூக்னர்

(Great writers are the saints for the godless.

- Anita Brookner)

சு.ரா. பற்றிக் கடித வடிவிலுள்ள இந்நினைவுக் குறிப்புகளில் பெரும்பாலானவை என் நினைவுகளிலிருந்தும் ஏனையவை என் நாட்குறிப்பிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. 1998 அக்டோ பர் 4ஆம் நாள் எங்கள் உறவு தொடங்கியது. சரியாக 8 வருடங்கள். தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்தவிதச் சலிப்போ மனத்தாங்கலோ இல்லை. மாறாக அவர்மீதுள்ள அன்பும் மரியாதையும் வளர்பிறையாகவே வளர்ந்தன. காரணம், எழுத்துகளைவிட அவரது ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. அவரது ஆளுமையின் பல்வேறு கூறுகளைப் பார்க்கும்போது அவர் வாழ்வு ஓர் அற்புதமாகவே எனக்குப் படுகிறது. இவ்வாறு ஒரு மனிதரால் வாழ இயலுமா, சிந்திக்க முடியுமா என்ற பரவசம் தொடர்ந்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பெரும்பாலும் முக்கியமான அனைத்து நினைவுகளையும் இங்குப் பதிவுசெய்திருக்கிறேன். உள்மனதில் மறைந்து கிடப்பவற்றுள் சில திடீரென ஒரு நாள் தோன்றலாம்.

அவர் மறைவிற்குப் பின்னர் அவர் பற்றிய நினைவுகளை எழுத்தில் வெளிப்படுத்த வேண்டும் என ஒயாது எண்ணினேன். அதன் விளைவாக ஜனவரி 1ஆம் தேதி அன்று சில பக்கங்களை எழுதினேன். அமைதியாக இருந்து எழுதும் சூழல் வாய்க்காததால் தொடர்ந்து எழுத இயலவில்லை. பின்னர் வேலையின் பொருட்டு மார்ச் மாதம் திடீரென பஹ்ரைன் செல்ல வேண்டியதாயிற்று. புதிய சூழல் புதிய சவால்களையும் ஏற்படுத்தியது. இவற்றினிடையே முதல் வேலையாக இதனை எழுதி முடித்திருக்கிறேன். சில செய்திகளை வேண்டுமென்றே எழுத்தில் கொணரவில்லை. எழுத்தில் கொணருவதன் வாயிலாக நேர் எதிரான பொருளை அவை தரக்கூடும் என்பதால் தவிர்த்துள்ளேன். எழுதி முடித்த பின்னர் மனம் லகுவாக உள்ளது. நமது எண்ணங்களிலும் செயல்களிலும் விரிவும் ஆழமும் மேலும் கூடுமானால் அதுவே நாம் சு.ரா. மேல் வைத்துள்ள அன்புக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும்.

நாகர்கோவில்
01.01.06
11.30 am

அன்புமிக்க நண்பர் சு.ரா.வுக்கு,

இன்று நீங்கள் வரப்போவதில்லை. கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு புத்தாண்டும் எங்கள் வீட்டிற்குத் தவறாமல் வரும் உங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்த்த நான் இன்று வெறுமையோடு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், நினைவு ஒரு வற்றாத நதி, கடல் அலைகள் போல் தொடர்ந்து வந்து மனத்தை நனைத்துக்கொண்டிருக்கிறது, சில நேரம் கனவுகளிலும்கூட.

அப்போது, 1993ஆம் ஆண்டு, எதேச்சையாக 'ஜே.ஜே'யைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படிக்கத் தொடங்கியதுமே ஒவ்வொரு வரியையும் அடிக்கோடிட வேண்டும் என்னும் எண்ணம். சொற்களின் அர்த்தத்தையும் சாராம்சத்தையும் இழந்துகொண்டிருக்கும் நம் சமூகத்தில் அது ஏற்படுத்திய பாதிப்பை வருணிக்க எனக்கு வார்த்தைகளில்லை. அப்போது நான் அனுபவித்துக் கொண்டிருந்த மீஜ்வீstமீஸீtவீணீறீ ணீஸீரீst அதில் இருந்தது. எள்ளல் கலந்த தீவிரம் நீட்சேயின் 'தஸ் ஸ்பேக் சாராதுஷ்ரா'வை (ஜிலீus ஷிஜீணீளீமீ ஞீணீக்ஷீணீtலீustக்ஷீணீ) நினைவுபடுத்தியது. அம்மாவிடம் படிக்கக் கொடுத்தேன். அம்மா இது நாவல் என்றாலும் உண்மையிலேயே நடந்ததுபோலல்லவா எழுதியிருக்கிறார் என்றார்கள். உடனே உங்களைச் சந்திக்க வேண்டும் என முடிவுசெய்தோம். வீட்டிற்கு வந்தோம். நீங்கள் அமெரிக்கா போயிருப்பதாகச் சொன்னார்கள். பின்னர் சில மாதங்களில் நானும் மேல்படிப்பிற்காக மைசூர் செல்ல வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. வருடங்கள் உருண்டோ ட, பார்க்க வேண்டும் என்னும் தீவிரமும் குறைந்துவிட்டது என நினைக்கிறேன். ஓசோவின் மேல் கொண்ட ஈடுபாடும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

1998, அக்டோ பர் 4ஆம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிற்கு வந்து 'காலச்சுவடு' பத்திரிகைக்குச் சந்தா கட்டலாம் என எண்ணினேன். சாயங்காலம் 5:30 மணி இருக்கும். காலச்சுவடு அலுவலகமான முன் அறையில் சந்தா செலுத்தினேன். அப்போது லீலா பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம், 'சாரைப் பார்க்க வேண்டுமா?' எனக் கேட்டார்கள். அதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சிறிது தயக்கத்துடன், 'பார்க்க வேண்டும் என இல்லை' என்றேன். 'இல்ல, சார் இங்கேதான் இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கலாம்' என்றார்கள். நானும் சரி என்றேன். இன்னும் சிறிது நேரத்தில் சார் வந்துவிடுவார்கள் என்று கூறி வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்னை அமரச் சொன்னார்கள். நான் உட்கார்ந்திருந்தபோது, ஜே.ஜே. என்னைப் பாதித்ததைக் குறிப்பிட வேண்டும், சில கேள்விகளையும் கேட்க வேண்டும் என எண்ணினேன். அன்று எனக்குத் தனிப்பட்ட கடவுள்மீது நம்பிக்கை இல்லையெனினும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. மிஸ்டிசிசம் புத்தகங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, ஞானமடைதல் (ணிஸீறீவீரீலீtமீஸீனீமீஸீt) நிலை, அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தரக்கூடியதாகவும் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுதலை தருவதாகவும் அமையும் என எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்குத் தடையாகத் திருமணம் அமையுமாயின் திருமணமே வேண்டாம் என்றும் அலை பாயும் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எவ்வாறேனும் அந்நிலையை அடைய வேண்டுமெனவும் எண்ணினேன். இவற்றை எல்லாம் எண்ணியபடியே உட்கார்ந்திருந்தேன். ஓஸ்பென்ஸ்கி (ளிusஜீமீஸீsளீஹ்) குருவைத் தேடி உலகெல்லாம் பயணித்து இறுதியில் பிறந்த மண்ணான ரஷ்யாவிலே குருஜிப்பைச் (நிuக்ஷீuபீழீவீமீயீயீ) சந்தித்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது நமக்கும் அவ்வாறு யாரேனும் வாய்க்க மாட்டார்களா என எண்ணியதும் உண்டு.

சிறிது நேரம் சென்ற பின்னர் வெள்ளை வேஷ்டியில் நீங்கள் தோன்றினீர்கள். என்னை நான் அறிமுகம் செய்தேன். ஜே.ஜே. பற்றியும் ஓசோ, கலீல் ஜிப்ரான் மீதுள்ள ஈடுபாடு பற்றியும் எடுத்துக் கூறினேன். மேலும் சொல்வதானால், இவர்களுக்கு மேல் ஒன்றுமில்லை எனவும் எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதியாக நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டேன். 'நம் கலாச் சாரத்தில் தியானம் வாயிலாக ஞானம் அடையலாம் என்றும் அந்நிலையை அடைந்தால் நாம் அனைத்திலிருந்தும் விடுதலை அடைவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா?'

நீங்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தீர்கள். சிறு குழந்தைபோல் கைகளைப் பிசைந்துகொண்டே மிக மெல்லிய குரலில், 'வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்தப் பயணத்தில் நாம் எங்கும் தேங்கி உறைந்து போய்விடக் கூடாது. தேக்கம் இல்லாமல் வாழ்வதே முக்கியம்' எனக் கூறினீர்கள். ஒரே வரியில் ஆம், இல்லை எனப் பதில் அளிக்காதது சிறு ஏமாற்றமாகவே இருந்தது. நீங்கள் அளித்த பதிலைவிட நீங்கள் சொன்ன முறை என்னை மிகவும் கவர்ந்தது. என்னைவிட ஏறத்தாழ நாற்பது வருடம் முதியவரான நீங்கள் கைகளைப் பிசைந்து சிறுகுழந்தைபோல் அதே நேரம் தீவிரச் சிந்தனையுடனும் கவனத்துடனும் பதிலளித்தது என்னை ஏதோ பண்ணியது. விடைபெறும்போது, "உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நாம் சந்திக்கலாம்" என்று கூறினீர்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே எனக்கு விடுமுறையாக இருந்தது. அதன் பின்னர் சில சனிக்கிழமைகள் தவிரப் பல ஞாயிற்றுக்கிழமைகள் மாலை நேரத்தில் நாம் சந்தித்தோம். எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்கு வாக்கிங் போனோம். ஒருமுறை சிறிது தூரம் நடந்துவிட்டு அங்கு கட்டடப் பணிக்கெனப் போடப்பட்டிருந்த ஆற்றுமணலில் வந்து உட்கார்ந்துகொண்டோ ம். பேசும்போது மணலைக் கைகளால் மெதுவாகத் தடவிச் சமன்செய்து உங்கள் கைகளைப் பதித்தீர்கள். அதை நான் மிகவும் ரசித்துக்கொண்டே இருந்தேன். இவ்வாறு பல நேரங்களில் உங்கள் உடல் மொழியை, கண்களில் தென்படும் கருணையை, கண்களிலும் உதட்டிலும் தோன்றும் குறும்போடுகூடிய புன்னகையை மிகுதியாக ரசித்திருக்கிறேன். உங்கள் அனைத்துப் படைப்புகளையும்விட உங்கள் ஆளுமையே என்னை மிகவும் கவர்கிறது. குழந்தைகளிடம் நீங்கள் எவ்வளவு அன்பை வைத்திருந்தீர்கள். ஒருமுறை அமெரிக்கப் பயணம் பற்றிய பேச்சு வந்தபோது, "ஒவ்வொருமுறை செல்லும் போதும் நாம் திரும்பி வரும்போது முகுந்தன் (பேரன்) இதே மாதிரி நம்மிடம் நெருக்கமாக இருப்பானா என்ற கவலை வந்துவிடும்" என்று குறிப்பிட்டீர்கள்.

என் வாழ்வில் நடந்த சிறு சிறு நல்ல நிகழ்வுகளுக்காக நீங்கள் எத்தனையோ தடவை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தீர்கள். அத்தகைய மகிழ்ச்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்னும் ஆவலில் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் தூண்டுதல் ஏற்பட்டதுண்டு.

ஒருமுறை வாக்கிங் சென்றபோது, வயதான, சிறிது மனவளம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்தார். வந்தவர் வீட்டினுள்ளிருந்த நாற்காலியில், கூச்சம் காரணமாக என நினைக்கிறேன், நன்றாகச் சாய்ந்து உட்காராமல் விளிம்பில் உட்கார்ந்தார். நீங்கள் அவரை நன்றாகச் சாய்ந்து அமருமாறு கூறிச் சிற்றுண்டியும் அளித்தீர்கள். அவர் சென்ற பின்னர் என்னிடம் மிகுந்த கவலையுடன், 'இவருக்குக் கல்யாண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்' என்றீர்கள். பல வேளைகளில் பிறர் துன்பத்திற்காக வருந்தும் உங்கள் மன நிலையை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். ஒரு மரம் வெட்டப்படுவதைக் கூடக் காண இயலாத இளகிய மனதல்லவா உங்கள் உள்ளம்.

22.06.2006

00.30. பஹ்ரைன்

ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் பிரிவின் துயரம் ஆழமாகவே ஓடுகின்றது. நான் உங்களுடன் பழகத் தொடங்கிய மிகச் சில நாள்களிலேயே உங்களைப் பற்றிய எண்ணமும் சிந்தனையும் என்னில் ஒரு பங்காக மாறுவதைக் கண்டேன். கடந்த எட்டு ஆண்டுகளில் உங்களைப் பற்றிய எண்ணமும் சிந்தனையும் குறைந்தது ஒரு நாளில் ஒரு முறையாவது என் மனத்தை ஆக்கிரமிக்காமல் இல்லை. 2004ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மஸ்கட்டில் வேலை கிடைக்கலாம் என்னும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தபோது நெருங்கிய உறவுகளைப் பிரியும் துயரத்தினூடே உங்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்னும் எண்ணமும் மேலோங்கியது. 'வளைகுடாவிலுள்ள (நிuறீயீ) வேலை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?' என உங்கள் கருத்தைக் கேட்டேன். அதற்குப் பதிலாக, 'ஐரோப்பிய நாடுகள் என்றால் இன்னும் நல்லது. பல கலாச்சாரங்களைப் பார்க்கவும் சுதந்திரமாகச் செயல்படவும் ஏற்ற சூழல். இங்கே அது பெருமளவில் இல்லை என்றாலும் நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து அன்னியச் சூழலில் வாழ்வை எதிர்கொள்வது ஒரு புது அனுபவமாகவும் தன்னம்பிக்கை தருவதாகவும் இருக்கும்' எனக் கூறினீர்கள்.

2004ஆம் ஆண்டு அமெரிக்கா கிளம்புமுன் நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது உரையாடலின் இடையே தற்செயலாக, 'சில ஆளுமைகளைப் பற்றிப் பேசிய ஒலிநாடா அச்சில் ஏறாமல் அப்படியே உள்ளது. ஒலிவடிவிலிருக்கும் அதனை வரிவடிவில் கொண்டு வருவதற்குத் தற்சமயம் யாரும் இல்லை. கொஞ்சம் பொறுமையோடுகூடிய வேலை அது' என்றீர்கள். உடனே அந்த வேலையை நான் எடுக்கலாம் என எண்ணினேன். நீங்கள் அமெரிக்கா சென்றதும் நானும் என் மனைவியுமாக என்.எஸ். கிருஷ்ணன் பற்றி நீங்கள் பேசிய ஒலிநாடாவைக் கேட்டுப் பதிவுசெய்தோம். ஒலிநாடாவில் தினமும் உங்கள் குரலைக் கேட்பதே மிகவும் இனிமையாக இருந்தது. இதில், திடீரென முகுந்தன் இடையில் குறுக்கிட அவன் செய்யும் சேட்டைகளைக் கண்டு நீங்கள் சிரிக்கும் பகுதி எங்கள் இருவரையும் மிகுதியாகக் கவர்ந்தது.

நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்த பின்னர் என்னை மிகவும் கவர்ந்த பிறிதொரு நிகழ்வு இது. 16.01.2005 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை நாம் பேசிக் கொண்டிருந்தோம். எதிர் சுவரில் சிறிதாக, புதிதாக ஒன்று தொங்க அது என்ன என்று கேட்டேன். பக்கத்தில் போய்ப்பாருங்கள் என்றீர்கள். நவம்பர் 6ஆம் தேதி 2004 'தினமணி' நாளிதழில் வெளிவந்த மிகச் சாதாரணமான ஒரு பெண்மணியின் கறுப்பு வெள்ளை புகைப்படம் அது. இங்கு எதற்காக, என்ன இது, என்றேன். "சுகாதார வேலை செய்யும் இவள் மும்பையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி நடனம் ஆடுகிறாள்." இதில் என்ன விசேஷம், என்றேன். "ரொம்ப வீஸீsஜீவீக்ஷீணீtவீஷீஸீ ஆக இருந்தது" என்றீர்கள். எத்துணை சிறந்த கலைஞர் நீங்கள்! ஜே. ஜே-யில் வருவதுபோல் பழக்கத்தின் பாசி உங்கள்மீது படியவே இல்லை. அதனால்தான் உண்மையை ஸ்பரிசித்துக்கொண்டிருந்தீர்கள். உங்கள் கண்கள் எதையும் ஆச்சரியத்தோடு பார்ப்பவை.

மேலும் ஒரு நிகழ்வு உண்டு. 1999ஆம் வருடம் நீங்கள் அமெரிக்கா சென்றபோது 'நியூயார்க் டைம்ஸ்' (ழிமீஷ் சீஷீக்ஷீளீ ஜிவீனீமீs) நாளிதழைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். உலகின் தலை சிறந்த நாளிதழ்களில் ஒன்றாகக் கருதப்படும் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் போன்றவற்றைக் கண்டறிய விரும்பினேன். எனவே, ஒரு நாளிதழ் வாங்கிவர முடியுமா எனத் தொலைபேசியில் கேட்டேன். நம் ஊர் 'எக்ஸ்பிரஸ்', 'இந்து' நாளிதழ்கள் போல் 24 முதல் 30 பக்கங்கள் இருக்கலாம், இல்லை குறைவாகவும் இருக்கலாம் என எண்ணியிருந்தேன். நீங்கள் வாங்கி வந்த பிறகுதான் அதன் எடை கிட்டத்தட்ட அரை கிலோ என்று தெரிந்தது. சில வருடங்கள் சென்ற பின்னர் நீங்கள் வாங்கிவந்த நாளிதழ் பற்றி நான் குறிப்பிட்டபோது, தைலாவின் கணவர் ராம், எடை அதிகமாக இருப்பதால் இதில் உள்ள சில முக்கியமான பக்கங்களை மட்டும் எடுத்துச் சென்றால் போதும் என்று கூறியதாகவும் ஆனால் நீங்கள் அதை முழுமையாகக் கொண்டு வருவதற்கு விரும்பியதாகவும் சொன்னீர்கள். இவ்வாறு நீங்கள் பலருக்குச் செய்த பல செயல்கள் மென்மலர்கள்போல் மணம் வீசுகின்றன. ஒரு சிறு துளியைக்கூட அலங்காரப் பெட்டிகளில் இட்டு, இதோ பாருங்கள் அற்புதத்தை என்று கூவிக் கூவித் தம்பட்டம் அடிக்கும் இன்றைய உலகில் யாருக்கும் வெளிப்படுத்தாது, குறிப்பாகக் கொடுப்பவனுக்குக்கூடத் தெரியாத வகையில் கொடுக்கும் உங்கள் மாண்பை என்னென்று பகர்வது.

11:30

1999ஆம் ஆண்டு 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலைப் படித்துவிட்டு அது எனக்குப் பெருமளவில் உவப்பாக இல்லை எனக் கூறினேன். 'ஜே.ஜே.யில் உள்ள நீர்க்குமிழிகள் எல்லாம் உங்களுக்கு எளிதாக மேற்பரப்பிலே தெரியும். அதே குமிழிகள் ஆழத்தில் நிகழ்ந்தால் தெரிவதில்லை. 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலில் எல்லாம் ஆழத்தில் நிகழ்கின்றன. நீங்கள் ஒரு கால இடைவெளிவிட்டு மீண்டும் அதை வாசிக்கலாம். இப்படி ஒரு கருத்தை நீங்கள் கூறுவது எனக்கு முக்கியமாகப் படுகிறது' என்றீர்கள். மறுவாசிப்பில் இதுவரை நான் ஈடுபடவில்லை.

08.10.2000 அன்று 'நெய்தல்' சார்பாக நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. எஸ். ராமகிருஷ்ணன், நாவலைப் பற்றிப் பேசினார். அவர் இலைமறை காயாக நாவல் தன்னைப் பெரு மளவில் கவரவில்லை என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தார். காலை அமர்வு முடிந்தது. மதிய அமர்வில் உங்கள் உரை; மதியம் வயிறாரச் சாப்பிட்ட பின்னர் நானும் நண்பர் நந்தனும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தோம். சுமார் மூன்று மணி இருக்கும். உங்கள் உரையைத் தொடங்கினீர்கள். தொடக்க வரியே கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. "நண்பர் ராமகிருஷ்ணன் மேலும் வயது குறைவாக இருந்திருந்தால் இன்னும் வெளிப்படையாகப் பேசியிருப்பார்" என்றீர்கள். அதன் பின்னர் நாவலில் எப்படி அதிகாரத்திற்கும் ஒழுங்கிற்கும் உள்ள உறவு (எஸ்.ஆர்.எஸ். மூலம்) நிகழ்கிறது, எப்படிப் பெண்களுக்கு ஒரு கணம்கூடத் தனியாகக் கிடைப்பதில்லை எனப் பலப்பல செய்திகளைத் தொட்டுப் பேசினீர்கள். நீங்கள் அன்று ஆற்றிய உரை நான் கேட்டவற்றைப் பொறுத்தவரையில் உங்கள் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக இருந்தது. உண்ட மயக்கத்தால் தூக்க உணர்வில் இருந்த மனம் முற்றிலும் விழிப்படைந்து, மரிஜுவானாவின் இறகுகளில் பறப்பதுபோல் மேலே பறக்கத் தொடங்கியது. நான் பெஞ்சின் விளிம்பிற்கு வந்தேன். உடல் முழுவதுமே காதாக மாறிக்கொண்டிருந்தது. உரை முடிந்தபோது, பல தரிசனங்களைப் பெற்றிருந்தேன். மனம் அப்படியே பெரும் உயரத்தில் சிறகடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு விஷயங்கள் நாவலில் இருக்கின்றனவா? நாம் எப்படி அதைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டோ ம் எனத் தோன்றியது.

பிறிதொன்றும் கவனித்தேன். உரை முடிந்தவுடன் உங்களை மையப்படுத்தியே கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், உங்கள் உரையின் பின்னர் எம். யுவனுடைய உரையும் இருந்தது. சிறிது நேரம் சென்றதும் மெதுவாக, 'இனி நாம் நண்பர் யுவனுடைய பேச்சைக் கேட்போம்' என்றீர்கள். அந்தச் சூழலிலும் மற்றவரது இருப்பை நீங்கள் மறக்கவில்லை. கூட்டம் முடிந்து கிளம்பியபோது, "சதீஷ் வீட்டிற்கு வருகிறீர்களா?" என்றீர்கள். சரி என்றேன். வீட்டில் தொடர்ந்து பேசினீர்கள். தற்கால எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவரைப் பற்றி ஏதோவொரு மனவெழுச்சியில் பேசியதைப் போல் பேசினீர்கள். நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன். எப்போதும்போல் சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு சென்றேன். மறுநாள் மாலையில் என்னைத் தொலைபேசியில் அழைத்தீர்கள். 'நேற்றைக்கு நீங்க வந்திருந்தபோது நானே பேசிட்டு இருந்தேன். உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நான் கேட்கல. அது ரொம்பக் கூச்சமாக இருந்தது' என்றீர்கள். நான் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

18:40

'தமிழ் இனி 2000' மாநாட்டில் மறக்க முடியாத இன்னொரு இனிய அனுபவம் நிகழ்ந்தது. எனக்கும் நண்பர் நந்தனுக்கும் எழுத்தாளர் வனமாலிகையோடு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெரும் வசதிகள் இல்லை என்றாலும் அறை நன்றாக இருந்தது. மாநாட்டின் முதல்நாள் அறை ஒதுக்கப்பட்ட சிறிது நேரத்தில் உங்களை வழியில் சந்திக்க நேர்ந்தது. 'அறை சவுகரியமாக இருக்கிறதா?' என மிகுந்த அக்கறையோடு கேட்டீர்கள். 'இல்லாவிட்டால் என் அறையிலே தங்கிக்கொள்ளலாம், இடம் இருக்கிறது' என்றீர்கள். என் உள்ளத்தில் பெரும் உவகை ஏற்பட்டது.

கருத்தரங்கில் பேச்சாளர்களின் பேச்சைவிட அவர்களின் நடத்தையைக் கவனித்ததாகக் கூறினீர்கள். வேறு சில மாநாடுகளிலும் இதைக் கூறினீர்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்யும்போது கொள்ளும் பெருமிதம், அறிமுகம் செய்யுமுன் கொள்ளும் தயார்நிலை, புகழின் மயக்கங்கள் இப்படிப் பல. ஒருமுறை உங்களை அறிமுகம் செய்யும்போது நோபல் பரிசு பெறத் தகுந்த எழுத்தாளர் எனத் தொடங்கி அடுக்கிய பல அடைமொழிகள் உங்கள் மனத்திற்கு வேதனையளித்தன. ஒருவரை அறிமுகம் செய்வதுகூட இன்றைய சூழலில் எவ்வாறெல்லாம் பாசாங்காகி அரசியலாகிவிட்டது என்பது அந்த வேதனையின் அடிநாதம்.

பிறிதொன்றும் நினைவிற்கு வருகிறது. 2002ஆம் ஆண்டு நான் பணிபுரிந்த கல்லூரியில் தமிழ் மன்றம் தொடங்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மன்றத்தின் செயலாளர் என்னிடம் தொடர்புகொண்டு உங்களுக்கு யாரையாவது தெரியுமா? மன்றத்தைத் திறந்து வைத்துப் பேச என்றார். நான் உங்கள் பெயரைக் கூறினேன். சரி என்றார். உங்களிடமும் இதைப் பற்றிக் கூறினேன். எந்தத் தலைப்பில் பேச வேண்டும் எனக் கேட்டீர்கள். அதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்றேன். நீங்கள் பொறியியல் மாணவர்கள் ஆனதால் வாழ்க்கையில் அறிவியலுக்கும் அறிவியல் பார்வைக்கும் உள்ள முக்கியப் பங்கு பற்றிப் பேசுவதாகக் கூறினீர்கள்.

கல்லூரிக்கு வந்தபோது மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்க முனைந்தனர். நீங்கள் வேண்டாம் எனக் கூறினீர்கள். பின்னர் தமிழ்மன்ற மாணவர் தலைவன், 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்ற தொனியில் மிகுந்த உணர்ச்சியுடன் குரலெடுத்துப்பேசினான். சொற்பொழிவாற்ற வந்த உங்களைப் பற்றிப் பற்பல புகழுரைகள். கல்லூரித் தாளாளர் மாணவர்களின் ஒவ்வொரு உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் மிகவும் லயித்து ரசித்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் நீங்காப் புன்முறுவல் பற்களும் தெரியத் தொடங்கின. அடிக்கடித் தலையையும் அசைத்துக்கொண்டார். ஆனால் நீங்களோ முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி இருந்தீர்கள்.

விழா முடிந்து விருந்தும் ஏற்பாடாயிற்று. என்னையும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு கூறினார்கள். விருந்திலும் நீங்கள் இறுக்கத்துடனே இருந்தீர்கள். புன்னகை எதுவுமில்லை. எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. காரணம் தாளாளர் உங்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். என்னிடமிருந்து உங்கள் புத்தகங்களையும் வாங்கிப் படித்துள்ளார். 'விரிவும் ஆழமும் தேடி' என்னும் நூலைப் படித்துவிட்டு, "கீஷீஸீபீமீக்ஷீயீuறீ வீபீமீணீs" என்றார். இறுதி வரை இறுக்கம் தொடர்ந்தது.

சில வாரங்களுக்குப் பின்னர் கல்லூரியின் பேச்சு வந்தது. 'எங்கள் காலத்திலும் முக்கிய விருந்தினர்கள் பற்றிப் பெரியளவில் தெரிந்துவைத்திருப்பதில்லை. ஆனால், பேசும்போது இனியாவது அவரைப் பற்றி மேலும் தெரிய முயற்சி பண்ணுவோம் என்ற தொனி இருக்கும். ஆனால், இப்போது ஒன்றுமே தெரியாமல் அதைப் பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் மேடைப் பேச்சு போல் பேசுகின்றனர்' என்றீர்கள். மாணவர் தம் நடவடிக்கை உங்களைத் துயரில் ஆழ்த்தியது.

23.06.06

19:30

20.10.2002 அன்று ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் குறிப்பிட்டீர்கள்: "'பின் தொடரும் நிழலின் குர'லில் ஜெயமோகன் மார்க்சியத்தின் நடைமுறைப்படுத்தலை (வீனீஜீறீமீனீமீஸீtணீtவீஷீஸீ) விமர்சிப்பதற்குப் பதிலாக, மார்க்சிசத்தை விமர்சித்திருக்கிறார். மார்க்சிசம் தவறானதல்ல. அதை நடைமுறைப்படுத்திய பாங்கே தவறானது. மார்க்சிசத்தை விமரிசனம் செய்ய மார்க்சின் வரலாற்றுப் பின்னணியையும் வரலாற்றினையும் அவர்களது இலக்கியத்தையும் படிக்க வேண்டும். நடைமுறைப்படுத்துதலை நாம் விமரிசனம் செய்யும்போது அங்கு எஞ்சுவது ஒரு மாபெரும் துக்கம். ஏனென்றால், வரலாற்றிலே ஒரு பெரிய கனவுக்காகத் தியாகம் செய்யப்பட்டது இதுதான். அந்தக் கனவு, எல்லோரும் சமமாக, சந்தோஷமாக இருக்கும் கனவு. அந்தக் கனவு கலையும்போது அங்கு எஞ்சுவது சிரிப்பு அல்லது துக்கம். அந்தத் துக்கம் இந்த நாவலில் இல்லை." நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பொருத்தமாகவேபட்டது. நான் வாசித்தபோதும் துக்கத்தை உணரமுடியவில்லை.

மக்கள்மீது உங்களுக்குத் தீராத கவலையும் கனிவும் இருந்தது. ஒருமுறை ஒளிநாடாவை முன்னோக்கி ஓட்டும்போது, மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடுவதைப் பார்க்க மனத்திற்கு வருத்தமாக இருப்பதனால், அதை நிறுத்திவிடும்படி கூறியது என் நினைவிற்கு வருகிறது.

23:10

எத்தனை வயதாயினும் உங்கள் உள்ளம் எப்போதும் உயிர்த் துடிப்புடனும் புத்துணர்வுடனும் இருந்தது. நீங்கள் என்னிடம் கூறியதுபோல் வாழ்க்கையில் எந்த இடத்திலும் தேங்கிவிடக் கூடாது என்ற கூற்றின் விளைவாக இருக்கலாம் அது. உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. இந்த உளப் புத்துணர்ச்சியே எந்நிலையிலும் முதுமை உங்களை அணுக இயலா வகை செய்தது. நீங்கள் நூறு வருடங்கள் வாழ்ந்து மறைந்தாலும் அந்த மரணத்தை உங்களோடு மிக நெருக்கம் உடையவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்பது ஐயமே. உங்கள் சிந்தனையின் உயிரோட்டமும் இளமையும் உங்களைப் பற்றிய ஒரு நிரந்தர இருப்பை (மீtமீக்ஷீஸீணீறீ ஜீக்ஷீமீsமீஸீநீமீ) மனத்தில் உருவாக்கியது. ஏதோ ஒரு வகையில் உங்கள் உடல் மொழியும் இந்த இருப்பை மேலும் வலுவூட்டியது. நான் உணர்ந்த மட்டில் உங்கள் இருப்பு என்னில் ஒரு நிரந்தர நிகழ்வினை உருவாக்கியது. ஆனால், உங்கள் அருகாமையில் இருந்து வெளியே வரும்போது அந்த நிரந்தர இருப்பு மறைந்துவிடுகிறது. மனம் மீண்டும் கற்பனைகளுடனும் கடந்த காலத்திலும் வருங்காலத்திலும் உலவத் தொடங்குகிறது. நிகழ்காலத்தை மறந்து உங்கள் அருகாமையை உருவாக்கும் இந்த நிகழ்கால இருப்பு எப்போதும் ஒரு புது அனுபவமாகவே இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதனை ஓர் ஆன்மீக அனுபவம் என்றும் கூறலாம்.

நண்பர் நந்தனும் நானும் ஒரு முறை உங்களிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றிப் பேசியபோது, "கடவுள் நம்பிக்கைக்கும் மனிதனுடைய திறனுக்கும் பெருமளவில் தொடர்பேதுமில்லை. கடவுள் நம்பிக்கை கொண்ட பலர் சிறந்த விஞ்ஞானிகளாகத் திகழ்கின்றனர். கடவுள் நம்பிக்கையென்பது தனி உலகம். அது நம்பிக்கை சார்ந்த உலகம். அதைப் பற்றி ஒருவருடன் வாதிட்டு எதையும் நிரூபிக்க முடியாது. நமது நம்பிக்கையை வேறு ஒருவர்பால் திணிக்கவும் நமக்கு உரிமை இல்லை. காரணம், கடவுள் மனிதனுக்கு இன்னும் மிகவும் தேவையுள்ள ஒன்றாகவே இருக்கிறது, குழந்தைகளுக்குப் பொம்மைகள்போல்" என்றீர்கள்.

சக மனிதனின் பார்வையிலும் நீங்கள் கடவுளைப் பார்த்தது எனக்கு இன்னொரு கோணத்தைத் திறந்துவிட்டது. மிகச் சாதாரணமான அன்றாட விஷயங்கள் பற்றிய உரையாடல்களிலும் பல கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறீர்கள். அவற்றைச் சொல்லும் முறையும் அலாதியானது. நகைச்சுவை கலந்த தீவிரம், கிண்டல் தொனி, மிகவும் குறும்புடன் கூடிய புன்னகை முதலானவை மேலும் அதை ஆழமாக்கின. உங்களைப் பற்றி ஒருமுறை ஜெயமோகனிடம் பேசியபோது மிக அழகான ஒரு படிமத்தை அவர் கூறினார். "சு.ரா. செய்கிற வேலை என்னவென்றால் எரிகிற விளக்கை லேசாகத் திருப்பிவிடுவார். அப்போது நமக்குத் திடீரென இன்னொரு வெளி, அதுவரை இருட்டில் இருந்தது புலனாகும்" என்றார். இவ்வாறு பல கோணங்களில் இருந்து நீங்கள் வாழ்வைப் பார்க்கும் பார்வை உண்மையின் பல பரிமாணங்களை விளக்கிக் காட்டியது.

29.06.2006

22:20

நீங்கள் ஒரு உண்மையான கலைஞன். தீவிர கலை மனம்தான் உங்களை எந்த அமைப்புகளோடும் சார விடாமல் தடுத்தது. பல அமைப்புகளைச் சார்ந்து வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் தேங்கிவிடுகின்றனர். மரணத்திலும் நீங்கள் தேங்கவில்லை. சடங்கு சம்பிரதாயங்கள் உங்களை ஆட்கொள்ளவில்லை. அவற்றைத் தாண்டி நின்றீர்கள். பாரதி கூறுவதுபோல், சிட்டுக்குருவி போன்று விடுதலையாகி, சுதந்திரமாக நின்றீர்கள். கலையுள்ளம் கொண்டோ ர் விழையும் மரணமும் இதுவே. ஒருவர் சடங்கு சம்பிர தாயங்களினின்று விடுபட நினைத்தாலும் பல நேரங்களில் தமது குடும்பத்தினர் ஒத்துழைப்பதில்லை. நரகம், மறுபிறவி, அதனைச் சார்ந்த வேதனைகள் போன்றவை அவர்களைப் பயமுறுத்தக்கூடும். ஆனால், நீங்கள் மிகவும் வெற்றி பெற்ற ஒரு குடும்ப நபர்.

2005ஆம் ஆண்டு மே மாதம் நானும் மனைவி பிரீதாவும் வீட்டின் முதல் மாடியில் தொங்கும் உங்கள் படத்தைப் பார்த்துக்கொண்டே நின்றோம். உங்களைப் பற்றிய முழு விவரங்களடங்கிய மலையாள இலக்கிய இதழான 'பாஷாபோஷிணி'யில் அட்டைப் படமாக வெளிவந்த அதனைக் கணினி வாயிலாகச் செம்மை செய்து தொங்கவிட்டிருந்தேன். 'மலையாள மனோரமா'வில் வேலைசெய்யும் என் நண்பர் காபிரியேல் மொரைரா எனக்குக் கொடுத்த படம் அது. படத்தில் அழகான புன்னகை இழையோடிக்கொண்டிருந்தது. புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே நின்ற என் மனைவி, 'சார் போன்றவர்களுக்கு மரணமே வரக் கூடாது' என்றாள்.

ஆன்மீகத்தில் நாட்டமும் தீவிர ஈடுபாடுமுடைய ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஒலிநாடாக்களைக் கேட்டும் நூல்களைப் படித்தும் இந்தியா வரும்போது அவரை நிழல்போல் பின்தொடர்ந்து அவருக்கு வாழ்வினை அர்ப்பணித்த மனிதரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ அவர்களுக்கு உங்களின் அருள் கைகூடவே இல்லை. எத்தனை தியானங்கள் செய்தாலும் உங்களைப் போல் விட்டு விடுதலையாகி நிற்க இயலவில்லை. வாழ்வினை ஒரு திட்டத்தின் வாயிலாகவும் ஒரு லட்சியத்தின் வாயிலாகவும் பார்த்ததன் விளைவே என நினைக்கிறேன். உங்கள் நண்பர்களில் ஆன்மீக ஈடுபாடுடைய பலர் இருந்தனர். புனிதர்களைத் தரிசிப்பதற்குத் தேடி அலைந்துகொண்டிருந்தனர். இது எனக்கு எப்போதும் வியப்பினையே தந்தது.

ஆன்மீகம் அற்ற உங்கள் போக்கே பலரை விலகவும் செய்திருக்கலாம். பெரும் தாகத்தைக் கிளப்பும் மனிதர் அல்லவா நீங்கள். அவர்களின் ஆன்மீகப் பசிக்குத் தீனி போட உங்களால் எவ்வாறு இயலும்? மிகச் சில சந்திப்புகளிலேயே என் மனைவி மனதிலும் அம்மாவின் மனதிலும் சிகரத்தை எட்டியிருந்தீர்கள். ஒவ்வொரு புத்தாண்டிற்கும் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்தோம். நான் மனமுவந்தளித்த சிறு சிறு பரிசுகளையும் மிகவும் ரசித்தீர்கள். குறிப்பாக வாத்திய இசை (மிஸீstக்ஷீuனீமீஸீtணீறீ னீusவீநீ) அடங்கிய இசைத்தட்டுகள். இளைய ராஜாவின் பாடல்கள் அப்போது வாத்திய இசையில் வெளிவரத் தொடங்கியிருந்தன. அதைப் பரிசாகத் தந்த சில நாள்களில், எப்படி இருக்கிறது சார் என்றேன். 'நான் தினமும் அதைக் கேட்டிட்டிருக்கேன். என்ன ஒரு ஜீனியஸ், இல்லையா? ஒரு கிராமத்தில் இருந்து மேற்கத்திய இசையின் அறிமுகமே இல்லாமல், மேற்கத்திய இசையின் கூறுகளையும் சேர்த்து என்ன மாதிரி கம்போஸ் பண்ணியிருக்கார்' என்றீர்கள்.

30.06.2006

11:30

ஆகஸ்ட் மாதம் நீங்கள் நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டுத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, இளையராஜாவின் புதிய படைப்பான திருவாசகம் கேட்டீர்களா என்றேன். 'இல்லை. கோகுலக் கண்ணன் அதைப் பற்றிச் சொன்னார். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?' என்றீர்கள். சில பாடல்கள் பிடித்திருக்கின்றன; சில பாடல்கள் பிடிக்கவில்லை; மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் எனக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாததாலும் இருக்கலாம் என்றேன். என்னை மிகவும் கவர்ந்த மேற்கத்திய இசை ராக் இசையாகவே இருந்தது. குறிப்பாக ராக்கின் மிக உன்னதப் படைப்பான பிங்க் பிளாய்டின் (றிவீஸீளீ திறீஷீஹ்பீ) இசையைக் கோர்வையாகப் பதிவுசெய்து உங்களுக்குத் தர வேண்டும் என எண்ணியிருந்தேன்.

கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் வெவ்வேறு உலகங்களைச் சார்ந்தவை. பியூஷன் (யீusவீஷீஸீ) வாயிலாக இரண்டையும் இணைக்கும் வகையில் பெரும் பாலம் கட்டும் பணியும் நடந்தது. நீங்களும் உங்களுக்கே உரிய உயிரோட்டத்துடன் உற்சாகமாக அதன் மேல் நடந்திருக்கலாம். ஆனால் அது முடியாமல் போயிற்று. ஒவ்வொருமுறையும் அமெரிக்காவில் நீங்கள் இருக்கும்போது மின்னஞ்சலில் ஒரு நல்ல ராக் ஷோவைப் பார்க்க முடிந்தால் பாருங்கள் என நான் எழுதியது நினைவிற்கு வருகிறது. ஓசையுடன் கூடிய இசையை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருப்பீர்கள் என்பது ஐயமே. ஆனால், முறையாக ஒருவரால் அறிமுகப்படுத்த முடியு மென்றால் கண்டிப்பாக ரசிக்கவும் தொடங்கியிருப்பீர்கள். அதேபோல் பிரேம் ஜோசுவாவின் (றிக்ஷீமீனீ யிஷீsலீuணீ) 'வாட்டர் டவுன் த கேஞ்சஸ்' (கீணீtமீக்ஷீ ஞிஷீஷ்ஸீ tலீமீ நிணீஸீரீமீs) இசைத் தட்டும் உங்களுக்குப் பிடித்திருந்தது. தினமும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நேரங்களில் கேட்பதாகக் கூறினீர்கள். சிறு விஷயங்களையும் மிகுதியாக ரசித்தீர்கள்.

ஒருமுறை முதிர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது, "மரணத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாத மனிதன் முதிர்ச்சி (னீணீtuக்ஷீவீtஹ்) அடைய முடியாது. மரணம் எப்போதுமே ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது" என்றீர்கள். மரணத் தறுவாயில் பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்றேன். "கண்டிப்பாக நம் உடம்பு போராடத்தான் செய்யும். அதுதான் இயற்கையின் நியதி. காய்ச்சல்கூட நோய்க் கிருமிகளை வெளியே தள்ளுவதற்குள்ள போராட்டம்தானே" என்று பதிலளித்தீர்கள்.

பெண்கள் மேல் உங்களுக்கு ஒரு இரக்கம் இருந்ததாகவேபடுகிறது. பெண்களின் சில பண்புகள் பற்றிக் குறிப்பிடும்போது, "எவ்வளவு காலம் அடக்குமுறையை அனுபவித்திருக்கிறார்கள், அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்யும்" என்றீர்கள். இவ்வாறு ஒன்றினை அதன் காரணகாரியத்துடன் பாரம்பரிய அடிப்படையில் நோக்குதல் உங்களிடம் மிகச் சிறப்பாகவேபட்டது. முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட பெண்களுக்கும் பெருமளவில் உதவிபுரிந்திருக்கிறீர்கள். பல உதவிகளைப் பெற்ற பின்னரும் இறுதி நேரத்தில் உங்கள் உடலைக்கூட நேரமின்மையால் பார்க்க இயலாமல்போனதாகக் கூறிய நபரை எண்ணும்போது, மனித மனத்தின் பல கூறுகளையும் அதன் புதிர்களையும் எண்ணி நொந்துகொண்டேன்.

19:20

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதினொரு மணியளவில் உங்கள் தொலைபேசி அழைப்பு வரும்; நான் தாமதமாக எழுவதால் பதினொன்று. நான் மாடிப்படிகளில் இறங்கி இன்று உங்களை அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும்போதே பல தடவைகளில் உங்கள் தொலைபேசி அழைப்பு ஒலிக்கும். நெகிழ்ச்சியை உருவாக்கிய பல தருணங்களும் உண்டு. ஒருமுறை பரிசு வாங்குவதற்காக டெல்லிக்குக் கிளம்பும் அரைமணி நேரத்திற்கு முன்னர் என்னை அழைத்து, "நான் போய் வருகிறேன்" என விடைபெற்றது போன்ற நிகழ்வுகள் பல உண்டு. பரிசுகள், பதவிகள் பற்றி நீங்கள் கூறியது நினைவிற்கு வருகிறது. "பரிசு, பதவிகளில் தவறேதுமில்லை. ஆயின் இவை உண்மையிலே ஒரு அரசன் என்னும் எண்ணத்தை உங்களிடம் உருவாக்குமாயின் வாழ்க்கை தொலைந்துவிடும். எல்லா வேடங்களும் சீட்டு விளையாட்டில் உள்ள ராஜாவும் ராணியும் போல்தான். நிஜ வாழ்வில் நாம் யாரும் கிடையாது." இதேபோல் எப்படிச் சிலர் தங்களை அறிவுஜீவிகள் என எண்ணிப் பலவற்றைக் கோட்டை விடுகின்றன என்றும் சாதாரண ஒரு பாமரனின் பார்வை அறிவு ஜீவிகளின் பார்வையைவிட எவ்வாறு விசாலமானது என்றும் ஒருமுறை கூறினீர்கள். பாமரன் தன் வாழ்விலிருந்து ஞானத்தைப் பெறுகிறான். நெற்பயிர்களைப் பார்த்த உடனேயே காலநிலை பற்றிய சில கணிப்புக்கு அவனால் வர முடிகிறது என்றீர்கள்.

ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது ஏறக்குறைய இரவு எட்டரை மணி இருக்கும். திடீரென்று தொலைபேசியை எடுத்து சல்மாவை அழைத்து, "முதல்ல பேசி முடிக்கும்போது சரியாகப் பேசி முடிக்காததுபோல் தோன்றியது. அதுதான் கூப்பிட்டேன்" எனச் சில வார்த்தைகள் பேசி முடித்தீர்கள். சிறிய செயல்களிலும் ஈரம் புலராத மனித நேயம் உங்களிடம் எப்போதும் இருந்தது.

நண்பர் 'நெய்தல்' கிருஷ்ணன் உங்கள்மீது பெரும் மதிப்பும் அன்பும் வைத்திருந்தார். உங்களுக்கும் அது தெரிந்ததே. நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் உங்களைப் பற்றி ஏதாவது கூறுவார். பிறகு, 'சதீஷ், உங்கள் அபிப்பிராயம் எப்படி?' எனக் கேட்பார். 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். எதேச்சையாக நானும் அதே ரயிலில் சென்னை சென்றுகொண்டிருந்தேன். எப்போதும்போல் உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அவர் முதல் முதலாக உங்களைச் சந்தித்தது பற்றிப் பேசினார். அப்போது திராவிடக் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அண்ணா, கலைஞரது படைப்புகளை மிகச் சிறந்ததாகக் கருதியதாகவும் அதை உங்களிடம் கூறியதாகவும் கூறினார். அதற்கு நீங்கள், "கிருஷ்ணன், அண்ணா ஒரு வட்டம், கலைஞர் ஒரு வட்டம். இது போல இலக்கியத்தில் பல வட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் மற்ற வட்டங்களுக்குள்ளும் நுழைந்து பார்க்கலாம்" என்றீர்களாம். பிறரது ரசனையைச் சிறிதும் புண்படுத்தாமல் அதே நேரம் சொல்ல வேண்டிய செய்தியையும் எவ்வளவு அழகாகக் கூறினீர்கள் என்று கூறி கிருஷ்ணன் வியந்தார். இறுதியில், 'சாரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க சதீஷ்?' என்றார். ஒரு வரியில் சொல்வதானால், "கி தீமீணீutவீயீuறீ லீமீணீக்ஷீt ணீஸீபீ ணீ தீமீணீutவீயீuறீ னீவீஸீபீ" என்றேன்.

தொடக்க காலத்தில் கவிஞர் கலீல் ஜிப்ரான் மேல் எனக்கிருந்த ஈடுபாட்டினைக் கூறியபோது நீங்கள், "ஆமாம், யேசுவின் மலைப்பிரசங்கம் போல் அதைப் படிக்கும்போது நம்மை ஒரு படி மேலே உயர்த்துகிறது" என்றீர்கள். ஆனால் ரொம்ப ரொமான்டிக்காக இருப்பதாகக் கருதினீர்கள். ரொமான்டிக்கான படைப்பைவிட யதார்த்தப் படைப்புகளே உங்களை அதிகம் கவர்ந்தன.

ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் ஜே.ஜே.யைப் படித்துவிட்டு உங்களைச் சந்தித்துப் பேச முடியாதா எனத் தவிப்பதை என்னால் காண முடிகிறது. அதன் கவித்துவமிக்க கச்சிதமான நடையும் விழிப்பு நிலையை நோக்கி உந்தும் எண்ணங்களும் காலத்தால் எளிதில் அழியாதவை. ஒரு முறை உங்கள் நாவல்கள் பற்றிப் பேசியபோது, "ஒரு மனிதனுக்குச் சமூகம், குடும்பம், கருத்து நிலைப்பாடு என்னும் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்கின்றன. மனிதனுக்கும் அவன் சமூகத்திற்குமிடையே உள்ள உறவே, 'ஒரு புளியமரத்தின் கதை' நாவல். மனிதனுக்கும் அவன் கருத்துகளுக்கும் உள்ள ஈடுபாட்டை 'ஜே.ஜே: சில குறிப்பு'களில் பதிவு செய்துள்ளேன். 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' என்னும் நாவல் அவனுக்கும், குடும்பத்துக்கும் உள்ள உறவினைச் சித்திரிக்கின்றது" என்றீர்கள். "கருத்து வேற்றுமைகொண்டிருந்தாலும் நண்பர்களாக இருக்கலாம் என்பது நிஜ வாழ்வில் மிக அரிதாகவே நிகழ்கிறது. அதேபோல் குடும்பம் ஒரு அமைதிமிக்க நதி போல் காட்சியளித்தாலும் அதனுள், பல விஷயங்கள் நதியின் அடியில் புதைந்திருப்பதைப் போல் புதைந்திருக்கின்றன" எனக் கூறினீர்கள். கருத்து வேற்றுமையால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியபோது, தற்கொலை எண்ணத்தால் உந்தப்பட்டதாகக் கூறினீர்கள். அம்மனநிலையோடு கேரளாவில் ஒரு ஆசிரமத்தில் தங்கியபோது, அங்கும் பதவிக்காக யார் தலைவர் என்று சன்னியாசிகள் மோதிக்கொண்டதைப் பார்க்க நேரிட்டது என்றீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் முன்னேற்றம் அடைந்தபோது நாம் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில் "லிவீயீமீ வீs தீமீணீutவீயீuறீ ஷ்லீமீஸீ ஹ்ஷீuக்ஷீ லீமீணீறீtலீ வீs ணீறீக்ஷீவீரீலீt" என எழுதியிருந்தீர்கள். இறுதியில் செப்டம்பர் 21ஆம் தேதி அனுப்பிய அஞ்சலில் உங்கள் ஆரோக்கியம் பற்றி நீங்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. மரணத்தை எமனாகவும் விலங்குகளாகவும் பார்த்த நம் பண்பாட்டில், அதை ஒரு குழந்தையாகக் கண்டது நீங்கள் ஒருவர் மட்டும்தான் என எண்ணுகிறேன்.

22:30

எழுத்தாளர் பேள் எஸ். பக் (றிமீணீக்ஷீறீ ஷி.ஙிuநீளீ) ஓரிடத்தில், "ஒரு புதிய எண்ணம் உங்களைத் தாக்கும்போது உண்டாகும் வலியால் உங்கள் வயதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்கிறார். அவ்வாறாயின் உங்கள் வயதுதான் என்ன? தொடர்ந்து புதிய எண்ணங்களோடும், கருத்துகளோடும் உறவுகொண்டு அதை உள்வாங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் எண்ணங்களுக்கு மாறான எதிர் துருவ எண்ணங்களையும் மிகவும் நிதானமாக தீவிரத்தோடு ஆராய்வதைப் பார்த்திருக்கின்றேன். உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடில்லாததைப் பார்த்தபோது, பெருமளவில் ஆன்மீகச் சிந்தனை கொண்ட நூல்களைப் படித்திருக்கமாட்டீர்கள் என எண்ணியிருந்தேன். முதன்முதலாக உங்கள் நூலகத்தைப் பார்வையிட்டபோது, அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆன்மீக நூல்களைப் பார்த்து வியப்படைந்தேன். குருட்ஜீஃப் முதல் ஜக்கி வாசுதேவ்வரை ஆன்மீகப் புத்தகங்கள் இருந்தன. பின்னர் அதைப் பற்றிக் கேட்டபோது, "ஒரு காலகட்டத்தில் அப்படிப்பட்ட நூல்களைப் படித்தேன்" என்று கூறினீர்கள். 'ஜே.ஜே: சில குறிப்புகள்' பற்றிய மதிப்புரையில் எழுத்தாளர் மு. பொன்னம்பலம், ஆன்மீகக் கோணத்தில் அதனை விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை. அது பற்றி உங்களிடம் கேட்டபோது, "நான் அந்தக் கோணத்தில் எழுதவில்லை. ஆனால், விமர்சகர்களுக்குப் பல கோணத்தில் விமர்சிக்கும் சுதந்திரம் இருக்கிறது" என்றீர்கள்.

உங்களுடன் பழகிய இக்காலகட்டத்தினை என் வாழ்வின் பெரும் பயனாகக் கருதுகிறேன். தொடக்க காலத்தில் என்னிலிருந்த ஆன்மீக நாட்டம் படிப்படியாக என்னிடமிருந்து விலகியது. இவ்வாறு பல மாற்றங்கள் நான் அறிந்தும் அறியாமலும் நிகழ்ந்திருக்கலாம். நீங்கள் இல்லாத இவ்வாழ்வு முன்னர்போல் இருக்கப்போவதில்லை. சொற்களின் சாரத்தை நாம் இழந்துவிட்டபின் நான் எச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அது மிகையாகவேபடும். "நாம் நம்மால் அன்பு செலுத்தப்படுபவர்களின் சாயலில் வளரத் தொடங்குகிறோம்" (கீமீ ரீக்ஷீஷீஷ் வீஸீ tலீமீ வீனீணீரீமீ ஷீயீ tலீஷீsமீ ஷ்மீ றீஷீஸ்மீ) என்னும் கூற்று உண்டு. அது உண்மையானால் அதுவே இவ்வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுவேன்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google