Google   www kalachuvadu.com

 

நூலகங்களுக்குக் காலச்சுவடை வழங்குங்கள்

இந்தியாவிலும் அயலிலும் வாழும் சில நண்பர்கள் தங்கள் ஊர் / பள்ளி / கல்லூரி நூலகங்களுக்குக் காலச்சுவடு இதழை அன்பளிப்பாக வழங்கக்கேட்டுப் பணம் அனுப்பி வருகின்றனர். எனவே இப்போது இதை ஒரு திட்டமாகவே அறிவிக்கிறோம். நூலகங்களுக்குக் காலச்சுவடு அனுப்பப்படும்போது அந்தக் கல்லூரியிலோ ஊரிலோ கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. எனவே நண்பர்கள் தங்களை வளர்த்த சூழலுக்கும் சமூகத்திற்கும் ஓர் எளிய கைமாறாக இத்திட்டத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம். உங்களை ஊக்குவிக்கும் முகமாகக் காலச்சுவடும் இத்திட்டத்தில் உங்களோடு இணைந்துகொள்ளும். நீங்கள் 10 நூலகங்களுக்கு (ஓராண்டு, இரண்டாண்டு, ஐந்தாண்டு) சந்தாப் பணம் வழங்கினால் காலச்சுவடு அதே காலகட்டத்திற்கு இரண்டு நூலகங்களுக்குத் தன் சார்பாக இதழ்களை அனுப்பிவைக்கும். இத்திட்டத்தைச் சிறைச்சாலைகள், பொருள் வசதியற்ற இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் என நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

இத்திட்டத்தைப் பரிசீலிக்க, பங்குகொள்ள, ஆலோசனை வழங்க நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google