Google   www kalachuvadu.com

 

பத்தி

சுருக்க வடிவில் தத்துவ நூல்கள்

திவாகர் ரங்கநாதன்

"தத்துவ ஞானிகள் பொதுவாகப் படுமோசமாக எழுதுபவர்கள். நமக்குத் தேவை அவர்களது சிந்தனைகள்தாம், வார்த்தைகள் அல்ல" என்கிறார் இத்தொகுப்பின் ஆசிரியர் கிளின் ஹ்யூஸ் (Glyn Hughes). Squashed Philosophers (www.btinter net.com/~glynhughes/squashed/) என்னும் இந்த வலையகத்தில், பிளேட்டோ வின் The Republic முதல் சர் கார்ல் பாப்பரின் The Logic of Scientific Discovery வரை சுமார் ஐம்பது மேலைத் தத்துவ நூல் களை சுருக்கப்பட்ட வடிவத்தில் தருகிறார் ஹ்யூஸ்.

அரசியல், அறவியல், கணிதம், இயற்பியல், கல்வி, சட்டம், மனித உரிமை, உளவியல், கணிப்பொறியியல் என வகைப்படுத்தக்கூடிய துறைகளில் முக்கியமான புத்தகங்கள் சுருக்கப்பட்டுள்ளன. ஹிட்லரின் 'எனது போராட்டம்', மார்க்கி த சாதின் (Marquis de Sade) 'படுக்கையறைத் தத்துவம்' போன்ற புத்தகங்களுக்கும் இத்தொகுப்பில் இடம் உண்டு.

தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தக்க சில ஆசிரியர்கள்: அரிஸ்டாட்டில், மாக்கியவெல்லி, தெகார்த், ஸ்பினோஸா, நியூட்டன், லீப்னிஸ், ஜார்ஜ் பெர்க்கிலி, ரூஸோ, ஆடம் ஸ்மித், கான்ட், மேரி வோல்ஸ்டன் க்ராஃப்ட் ('பெண்ணியத்தின் தாய்' என்று சொல்லப்படுபவர்), ஹெகல், மார்க்ஸ், எங்கல்ஸ், ஷோப்பனாவர், ஜான் ஸ்டூவர்ட் மில், ஹென்றி டேவிட் தோரோ, டார்வின், நீட்ஷே, ஃப்ராய்ட், ஐன்ஸ்டீன், விட்கன் ஸ்டீன், சார்த்ர், ஆலன் டுரிங்.

ஒவ்வொரு நூலும் அதன் ஆசிரியரின் சொற்களில் அமைந்திருக்கிறது. ஆனால் லட்சக்கணக்கான சொற்கள் நூற்றுக்கணக்கானவையாகச் சுருக்கப்பட்டிருக்கின்றன. கடுமையான நடையில் அமைந்த பகுதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலுக்கும் ஆசிரியருக்கும் சிறு அறிமுகம் தரப்படுகிறது.

இவை தத்துவ நூல்களின் சுருக்கிய வடிவங்கள்தாம்; அந்த நூல்களில் வெளிப்படும் சிந்தனைகளுக்கான அறிமுகங்கள் அல்ல.

உள்ளடக்கம்

Google Ads.....


Google