அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் (ஓய்வு) வில்லியம்
Z. ஷெட்டர் (William Z. Shetter) மொழி தொடர்பாகப் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இவ்வலையகம்.
Language Miniatures (http://mypage.iu.edu/shetter/) என்னும் இத்தொகுப்பில் உள்ளவை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்காக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் என்றாலும் அவை எல்லோரும் படிப்பதற்கேற்ற தலைப்புகளை எடுத்துக்கொள்கின்றன.
மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள உறவு, மொழியை மனித மூளை கையாளும் முறைகள், மொழியின் பரிணாமம், இலக்கணம், மொழி அமைப்புகள், குறியீட்டு அமைப்புகள், வரிவடிவங்களின் வரலாறு, வெவ்வேறு மொழிகளுக்குரிய அம்சங்கள், ஆங்கிலம், விலங்குகளின் தொடர்பு அமைப்புகள், மென்பொருள் மூலம் செய்யப்படும் தானியங்கி மொழிபெயர்ப்பு போன்ற தலைப்புகளிலான இக்கட்டுரைகள் பெரும்பாலும் எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.
'பேச்சும் உடல் மொழிதான்' என்னும் கட்டுரை, ஜேம்ஸ் ஜாய்ஸின் ஃபினெகன்ஸ் வேக் நாவலில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம், ஆலிஸின் அற்புத உலகம் நாவலில் வரும் மொழி விளையாட்டுகள், மொழியில் காலமும் வெளியும், சீன எழுத்து முறை ஆகியவை குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
அக்டோ பர் 1998 முதல் மார்ச் 2007 முடிய 179 கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன (மாதம் ஒன்று முதல் தேதி வெளியாகிறது). இக்கட்டுரைகள் மொழியியல் மாணவர்களுக்கு மட்டுமின்றிப் பொதுவாக மொழியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் பயன்படும்.