Google   www kalachuvadu.com

அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக காலச்சுவடு சந்தாதாரர்களுக்கு இதழ் கிடைக்காமை பற்றி பல புகார்கள் வந்துள்ளன. காலச்சுவடு சந்தாதாரர் பட்டியல் சரிவரப் பேணப்பட்டு, இருமுறை சரிபார்க்கப்பட்ட பின்னரே இதழ்கள் தபாலில் சேர்க்கப்படுகின்றன. எனவே இது பற்றி தபால் துறையினரிடம் முறையிட்டு தீவிர நடவடிக்கை வேண்டி வருகிறோம்.

காலச்சுவடு சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு இதழும் கிடைக்க வேண்டும் என்ற உறுதி எங்களுக்கு உண்டு. எனவே இதழ் கிடைக்கப் பெறாதவர்கள் (1) நாகர்கோவில் தலைமை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதுக. (2) 95-4652 - 278525 அல்லது 9362929718 எண்ணில் காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை புகார் தருக. ஞாயிறு விடுமுறை. (3) kalachuvadu@sancharnet.in மற்றும் kannan31@gmail.com முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புக. உடனடியாக மாற்றுப் பிரதியை அனுப்பி வைக்கிறோம்.

சந்தா பட்டுவாடா நாகர்கோவிலிலிருந்தே நடைபெறுகிறது என்பதால் சென்னை அலுவலகத்தைத் தொடர்புகொள்வதையும், புத்தகச் சந்தையில் காலச்சுவடு ஸ்டாலில் புகார் பதிவுசெய்வதையும் தவிர்க்க வேண்டுகிறோம்.

- ஆசிரியர்

Google Ads.....


Google