ஃபேம் அட்வர்டைஸிங் நிறுவனரும் அதன் முக்கிய நிர்வாகியும் நல்லி விளம்பர ஏஜென்டுமான
திரு ஆர். வைத்தியநாதசுவாமி 2006 டிசம்பர் 28 அன்று காலமானார். அவருக்கு வயது 68.
நண்பர்கள் மத்தியிலும் பத்திரிகைத் துறையிலும் 'ஆர்.வி.' என்று அன்புடன்
அழைக்கப்படும் திரு வைத்தியநாதசுவாமி சுமார் 45 வருடங்கள் விளம்பரத் துறையில்
பணியாற்றியிருக்கிறார். பல முக்கியப் பொருள்களைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்.
விளம்பரத் துறையின் தார்மிக நெறியில் நம்பிக்கை கொண்டிருந்ததோடு அதை பிறரும்
கடைப்பிடிக்கும்படி செய்திருக்கிறார்.
அவருக்கு மனைவி, மகள், மருமகன், இரண்டு மகன்கள், மருமகள்கள், இரண்டு பேரக்
குழந்தைகள் இருக்கின்றனர்.