21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் உள்ள நாம், நமது இலக்கிய
வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம்!
படைப்பு முயற்சிகளை ஊக்குவித்து வளப்படுத்துவதும் சிறந்த துறைசார் படைப்பாளிகளை
அடையாளம் கண்டு அவர்களது ஆளுமைகளைக் கௌரவிப்பதும் நமது பணியாக உள்ளது.
இந்த வகையில் கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் அதன்
வளர்ச்சிக்கும் பணியாற்றிவரும் மூன்றாவது மனிதன் இதழும், நண்பர்களும் இணைந்து நமது
படைப்பாளிகளுக்கான துறைசார் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
கவிதை, சிறுகதை, குறுநாவல் ஆகிய மூன்று முக்கியப் படைப்புத் தளங்களைப்
பிரதானப்படுத்திய வகையில் இலங்கைத் தமிழ் மொழிப் படைப்பாளிகளிடமிருந்து போட்டிக்கான
படைப்புகள் கோரப்படுகின்றன. ஓவ்வொரு துறையிலும் அதன் துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்ட
நடுவர் குழுக்கள் படைப்புகளைத் தேர்வுசெய்யவுள்ளன. தேர்வு முடிவுகள்
வெளிவருகின்றபோது. அத்தேர்வுக்கான அடிப்படை நியாயங்கள் எழுத்து மூலம்
சமர்ப்பிக்கப்படும்.
ஒவ்வொரு துறையிலும் 1ம், 2ம், 3ம் இடங்களும் மேலும் மூன்று படைப்புகளும்
தேர்வுசெய்யப்பட்டு அவற்றிற்கான பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும். வயது வரையறை
இல்லை. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளும் பங்குபெறலாம்.
விருது வழங்கும் வைபவம், இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஒட்டிய விழாவாக
நடாத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் படைப்புகள் 'இலங்கைத்
தமிழ்ப் புனைவு இலக்கியம் - 2006' என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிடப்படவுள்ளது.
விதிகள்
படைப்பின் பேசுபொருள் இன, மத, கலாசார முரண்பாடுகளை வளர்ப்பதாக இருக்கக் கூடாது.
l
ஏற்கனவே பிரசுரமாகாத படைப்பாக இருத்தல் வேண்டும்.
l
சகல படைப்புகளும் தட்டச்சு செய்யப்பட்டு அல்லது கணினியில் எழுத்துக்
கோர்க்கப்பட்டு தாளின் ஒரு பக்கமே அமைந்திருத்தல் வேண்டும்.
l
ஒருவர், ஒருதுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்ப முடியாது. மூன்று
துறைகளுக்குமான போட்டிகளில் ஒருவர் பங்குகொள்ள முடியும்.
l
இறுதித் திகதிக்குப் பின் கிடைக்கப்பெறும் படைப்புகள்
தேர்வுக்குட்படுத்தப்படாது.
கால எல்லை
எதிர்வரும் 2007 பெப்ரவரி 28ம் திகதிக்கு முன் படைப்புகள் அனுப்பிவைக்கப்படல்
வேண்டும். அனுப்பிவைக்கப்படும் படைப்புகள் ஏலவே பிரசுரிக்கப்படாதது என்பதையும்,
சொந்தப் படைப்பு என்பதையும் உறுதிப்படுத்தும் உறுதியுரைக் கடிதம் இணைத்து
அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
தொடர்புகளுக்கு:
ஆசிரியர்,
மூன்றாவது மனிதன்,
617, அவிசாவெல்ல வீதி,
வெல்லம்பிட்டிய (இலங்கை)
E-Mail: thirdmanpublication@yahoo.com