Google   www kalachuvadu.com

சுந்தர ராமசாமி நினைவு நூலகம்:

ஒரு வேண்டுகோள்

சுந்தர ராமசாமி, அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தீவிரமாக இயங்கியவர். அதன் ஒரு பகுதியாகத் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் வெளிவந்த தரமான நூல்களை வாங்கிப் படித்து, அவற்றைச் சேகரித்து, சிறந்ததொரு நூலகமாகவும் தனது இல்லத்தில் அமைத்திருந்தார். அதை விரிவுபடுத்தி, பொது ஆய்வு நூலகமாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சு.ரா. வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்திக்க வந்த எழுத்தாள - வாசக நண்பர்கள், அவரிடமிருந்து நூல்களைப் படிக்க வாங்கிச் செல்வதுண்டு. பெரும்பாலானோரும் அந்த நூல்களைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவதுண்டு. சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாகச் சிலரால் நூல்களைத் திருப்பிக் கொடுக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தங்கள் வசமுள்ள அத்தகைய நூல்களைத் திருப்பிக் கொடுத்து, சு.ரா. நினைவாக, அவரது முதல் நினைவு நாளான அக்டோ பர் 15ஆம் தேதி முதல் செயல்படவிருக்கும் பொது ஆய்வு நூலகம் சிறப்பாக அமைய உதவுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,
எஸ்.ஆர். சுந்தரம்
நிர்வாக அறங்காவலர்
காலச்சுவடு அறக்கட்டளை

உள்ளடக்கம்

Google Ads.....


Google