|
விருது வாங்கலயோ
சங்கேத அக்காதெமி விருது
420 கள்ளச்சாராயப்பட்டி
டுபாக்குர் மாவட்டம் - 009.
சங்கேத அக்காதெமி அமைப்பு இவ்வாண்டு பற்பல விருதுகளை வழங்க
முடிவு செய்துள்ளது. பின்-நவீனத்துவ நோக்கில் எல்லாப்
படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் அவரவர்
சிறப்புக்கு ஏற்ப ஒரு விருது அறிவிக்கப்படும். முதல் பட்டியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதை வாங்க விரும்புபவர்கள்
மேற்படி முகவரிக்கு 2000 பொற்காசுகள் அனுப்பி வைக்கவும்.
இவ்வமைப்பின் செயலாளர், தேர்வுக் குழு உறுப்பினர்கள், கமிட்டி
உறுப்பினர்கள் யாருடைய பெயரும் வெளியிடப்படமாட்டாது.
இவ்வமைப்பில் ரகசியப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் விருது
வாங்கிக்கொள்ளும் உரிமை உண்டு. விருது வழங்கி இவ்வமைப்பு
சேகரிக்கும் தொகை தமிழகக் குடிமக்களின் தாகசாந்திக்காகப்
பயன்படுத்தப்படும் (ஒயின் ஓரியை அணுகுக).
|
விருதுப் பட்டியல் |
|
ஆளுமையின்
பெயர் |
விருது |
|
ந. முருகேசபாண்டியன் |
இளைய தளபதி விருது |
|
விக்கிரமாதித்யன் |
முதல் குடிமகன் விருது
|
|
அ. ராமசாமி |
மூன்றாவது மனிதன் விருது |
|
நாஞ்சில் நாடன் |
நடுநிலைச் செம்மல் விருது
|
|
ரவிசுப்பிரமணியன் |
நன்னடத்தை விருது |
|
பிரபஞ்சன் |
வெளிநடத்தை விருது |
|
எஸ். ராமகிருஷ்ணன் |
'நான் அவன்
இல்லை' விருது |
|
குட்டி ரேவதி |
இன்முகச் செல்வி விருது |
|
சுகிர்தராணி |
நன்மடந்தை விருது |
|
ரமேஷ்-பிரேம் |
டோபல் (தமிழ் நோபல்) விருது |
|
அம்பை |
பூலான்தேவி விருது |
|
தேவேந்திரபூபதி |
ஒயின் ஓரி விருது |
|
சாரு நிவேதிதா |
குத்துப்பாட்டு மைனர் விருது |
|
ஜெயமோகன் |
மோனத்தவம் விருது |
|
சல்மா (எம்.எல்.ஏ?) |
ராணி மங்கம்மா விருது |
திலகபாமா
வைகைச் செல்வி |
தணிக்கைச் செல்வி(கள்)
விருது |
|
எம். யுவன் |
ஜென் முனி விருது |
|
பாவண்ணன் |
வள்ளலார் விருது |
|
கண்ணன் |
ரஸ்புட்டின் விருது |
|
தொ. பரமசிவன் |
திராவிட ஜோதி விருது |
|
ரவிக்குமார் (எம்.எல்.ஏ?) |
திராவிட மாயை விருது |
|
லீனா மணிமேகலை |
பயாஸ்கோப் விருது |
|
கனிமொழி |
தாட்சாயணி விருது |
|
வசந்தகுமார் |
தளபதி விருது |
|
தமிழ்ச்செல்வன் |
திரு.வி.க. விருது |
|
லஷ்மி மணிவண்ணன் |
'வோட்காவிலிருந்து
மாம்பட்டை
வரை' விருது |
|
ஆர். செந்தில்குமார |
ஸ்ரீமான் சி.என். லக்ஷ்மிகாந்தம் விருது |
|
அய்யனார் |
தலாய் லாமா விருது |
|
சி. மோகன் |
சொக்கத் தங்கம் விருது |
|
வீ. அரசு |
சின்ன மருது விருது |
|
இளம்பிறை |
புன்னகை அரசி விருது |
|
மனுஷ்ய புத்திரன் |
ஏகபுத்திரன் விருது |
|
மாலதி மைத்ரி |
அன்னை தெரசா விருது |
|
கோணங்கி |
நாடோடி மன்னன் விருது |
எம். கோபாலகிருஷ்ணன்
க. மோகனரங்கன் |
சமரச சன்மார்க்க விருது |
|
ஆ.இரா. வேங்கடாசலபதி |
கருவிலே திரு விருது |
|
தமிழச்சி |
நடமாடும் கவிதை விருது |
|
காஞ்சனா தாமோதரன் |
தங்கத் தாரகை விருது |
|
என்.டி. ராஜ்குமார் |
நாஞ்சில் கத்தார் விருது |
|
இமையம |
புதினச் சிகரம் விருது |
|
யமுனா ராஜேந்திரன் |
'சுட்டாச்சு!
சுட்டாச்சு!' விருது |
|
சு. வெங்கடேசன் (எம்.எல்.ஏ?) |
எஸ்.எஸ்.ஆர். விருது |
|
பெருமாள்முருகன |
சங்கர்லால் விருது |
|
நஞ்சுண்டன் |
சீத்தலைச் சாத்தனார் விருது |
இப்பட்டிலைத் தொடர அனைவரது ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.
இதில் இடம்பெறாத பிற எழுத்தாளர்கள் பெயர்களையும் அவர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய விருதுகள் பற்றியும் வாசகர்கள் சிபாரிசு
செய்யலாம்.
உள்ளடக்கம்
|