|
கட்டுரை: இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு
யதீந்திரா
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் சகாப்தத்தில், ஒரு விடயம் தங்களுக்குத் தடையென உணரப் படும்போது, அதை அழித்தொழிப் பது அல்லது பிறிதொரு சக்தியைத் தெரிவுசெய்வதன் மூலம் தற்காலி மாகக் குறித்த தடையை அகற்றுவது வழமை. இதுதான் புலிகளின் இறுதி நாட்கள்வரை அவர்களை வழி நடத்திச் சென்ற அரசியல் பண்பு நிலையாகும்.
சிறப்புப் பகுதி: முல்லைப் பெரியாறு பரிதவிக்கும் மக்கள், சிதறும் இந்திய தேசியம்
கானகன்
அறிவுஜீவிகள் அதிகமிருப்பதாகக் கருதப்படும் கேரளத்தில், பொதுவு டைமைக் கருத்துகளின் வீச்சு அதிக மெனக் கருதப்படும் அம்மாநிலத்தில், கேரளத் தேசியம் என்பதே அதிகம் பயன்படுத்தப்படாத அம்மாநிலத்தில், அணை விஷயத்தில் அனைவரும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறார்கள்.
சிறப்புப் பகுதி: முல்லைப் பெரியாறு கற்பிதங்களின் அரசியல்
ஜெய்குமார்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பதற்றத்திற்குரியதாக மாறியிருக்கும் எல்லைப் பகுதியில் இங்குள்ள தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தும் அமைப்பாளர்கள் மேற்கொள்ளும் உண்ணாவிரம், பேரணி போன்ற செயல்பாடுகள் மேலும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
சிறப்புப் பகுதி: முல்லைப் பெரியாறு மோதலைத் தீர்க்க ஒரு திட்டம் (பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பப்பட்ட திறந்த மடல்)
தமிழில்: அரவிந்தன்
உள்ளூரில் நீர்ச் சேகரிப்பு வழிமுறை களை ஏற்படுத்துல், பாசனத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முல்லைப் பெரியாறு அணையின் மீதான சார்பை நாளடைவில் குறைக்க முடியும். நதிப்படுகை பற்றி நாம் தீட்டும் எந்தச் செயல்பாடும் சூழலமைப்பைச் சார்ந்தே இருக்க வேண்டும்.
சிறப்புப் பகுதி: முல்லைப் பெரியாறு சில வரலாற்றுக் குறிப்புகள் - அணைக்கட்டும் கள்ளர் சீர்திருத்தமும்
ஆனந்த் பாண்டியன் தமிழில் தி. அ. ஸ்ரீனிவாசன்
“இப்பகுதி முழுவதற்குமே பாசனவசதி செய்து கொடுக்க முடியுமானால், இச்சாதியினரின் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். காவல் துறையால் இது ஒருபோதும் சாத்தியப்படப்போவதில்லை” - ஆண்ட்ரூ கார்டியூ
சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம் ரயில் போய்விடும்
அ. முத்துலிங்கம்
கம்ப்யூட்டர்கள் வந்த பின்னர் இணையதளங்களிலும் முகநூல்களிலும் விவாதங்கள் சூடுபிடித்தன. முந்தைய காலத்தில் ஒருவர் பத்திரிகையில் ஒன்றை எழுத அதற்கு மறுப்பு இன்னொருத்தர் எழுத நாலு மாதம் ஓடிவிடும். நாலைந்து கட்டுரைகள் எழுதி இறுதி நிலை வரும்போது இரண்டு மூன்று வருடங்கள் முடிந்து, ஆரம்ப வேகமும் மட்டுப்பட்டுவிடும். இப்போதெல்லாம் அப்படியல்ல.
சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம் இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள்
பெருந்தேவி
இணையம் உலகின் வெவ்வேறு மூலைகளுக்கிடையிலான தூரத்தை அழிக்கிறது என்பது எளிதாகப் புரிவதுபோல் இருக்கிறது. ஆனால் மின்திரையில் இன்னொரு அழித்தலும் நடக்கிறது. உருவகத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி என்பது அழிபடுவதே அது.
சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம் இணையமும் நானும்
பி. ஏ. கிருஷ்ணன்
அள்ள அள்ளக் குறையாமல், அதிகரித்துக்கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரம் இணையம். அறிவின் கருவிகளை மக்களிடம் எளிதாகக் கொண்டுசேர்த்ததில் இணையத்தின் பங்கு அளவிட முடியாதது. தகவல்களையும் அறிவுசார்ந்த எல்லா விவரங்களையும் ஒரு சொடுக்கில் கிடைக்கச் செய்தது மட்டுமல்ல, அறிவுத் தேடலையும் அறிவுசார்ந்த விவாதங்களையும் ஜனநாயகப்படுத்தியது இணையமே.
சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம் புலம்பெயர் தமிழர் வாழ்வில் வலைத்தளங்கள், வலைப்பூக்களின் பங்கு
தமிழ்நதி
உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைப்பதிலும் புதிய தகவல்கள், நிலைப்பாடுகளை அறியத்தருவதிலும் ‘இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு’ போன்ற வலைத்தளங்கள் பெரும்பங்காற்றிவருகின்றன. இவ்விடயத்தில் ‘சானல் 4’, ‘அல் ஜஸீரா’ போன்ற வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததே.
|
சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம் இணையமும் இலக்கியமும்
விமலாதித்தமாமல்லன்
தீவிர நுட்ப வாசிப்புக்குப் பழக்கப்படா தவர்களும் அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்துப் பயிலவியலாத வேலைச் சூழலின் அழுத்தம் காரண மாய், அதிலிருந்து தப்பிக்க இணையத்தைக் கேளிக்கை வடிகாலாய்ப் பார்ப்பவர்களுமே ஏராளம்.
க.நா.சு.100: க.நா.சுவின் எழுத்து மேஜை
சுகுமாரன் ஓவியம்: ஆதிமூலம்
எழுத்தைச் சார்ந்திருப்பவனுக்குத் துணையாக இருந்திருக்கக்கூடிய கல்வி, பத்திரிகைத் துறைகள்மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் க.நா.சுவைத் தீண்டத்தகாதவராக்கின. ஈடுபட்டிருந்த இலக்கியத் துறையி லும் கணிசமான பகைமையை ஈட்ட முடிந்தது.
சிறுகதை: ஓடாமல்போன இயந்திரம்
குலசேகரன் ஓவியங்கள்: செல்வம்
திடீரென்று இயந்திரங்களின் சீரான ஓட்டத்தில் அபசுரம் தட்டியது. மிதமிஞ்சிய அழுத்தத்தால் சக்கரங்களின் பட்டைகள் இழுபட்டுச் சத்தமிட்டன. அது அட்டைகள் தயாராகும் வலை இயந்திரத்திலிருந்துதான் கிளம்பியிருக்கும். அதைத் தொடர்ந்து கூக்குரல்கள் கேட்டன. வேலைசெய்பவர்கள் யாராவது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று மனோகரன் பயந்தான்.
சிறுகதை: வெம்பா
மண்குதிரை ஓவியங்கள்: செ. சீனிவாசன்
தன்னை உன்மத்தம்கொள்ளும் இவ்வுடல் கணேசனுக்காகத் திறந்து கிடந்ததைக் கடக்கத் திராணியற்றவ னாய் இருந்தான் ஆறுமுகம். அந்தக் கருப்பட்டி வட்டும் வெடித்த வெள்ளரிப் பழங்களும் கணேசனின் கைகளுக்குள் அடங்கியதை நினைக் கும்போதெல்லாம் இயலாமையாலும் புறக்கணிப்பாலும் பீடிக்கப்பட்டுத் தவித்தான்.
கவிதை:
அனார் ஸர்மிளா ஸெய்யித் சுகிர்தராணி ஓவியங்கள்: ரோஹிணி மணி
கட்டுரை: மேற்கில் எழுமோ சூரியன் ! 2011 - அந்தியில் சிதறும் சிந்தனைகள்
வே. வசந்தி தேவி
இன்று முதலாளித்துவத்தின் முடிவும் சோஷலிஸத்தின் எழுச்சியும் எங்கு நடைபெறும் என்பதைக் காட்டிலும் எவ்வாறு நடைபெறும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு மார்க்ஸியத்தின் அடிப்படைகளுக்குத் திரும்பிப் போக வேண்டும்
சிறப்புப் பகுதி: நேர்காணல் “ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை” - கார்டன் வெய்ஸ்
தொகுப்பு: கானகன்
இதைவிடவும் சிறந்த புத்தகம் எழுதப்படும்வரை இலங்கை இனமோதல் குறித்தும் 2009ஆம் ஆண்டு நிகழ்வுகள் குறித்தும் எனது கூண்டுதான் நம்பகமான வரலாறு எனலாம். அந்த அளவில் மெல்ல மெல்ல மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பும் என நினைக்கிறேன்.
சிறப்புப் பகுதி: புத்தகம் ஈழத்துப் படைப்பிலக்கிய மரபில் ஒரு புதிய நாவல்
மு. புஷ்பராஜன்
அன்றாடங்காச்சிகளின் நாளாந்த வாழ்வையும் அவர்கள் புறச் சூழலால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மிகுந்த செறிவுடன் தன் கசகறணம் நாவல்மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் விமல் குழந்தைவேல்.
சிறப்புப் பகுதி: புத்தகம் 2011இல் வந்த ஆங்கிலக் கதைப் புத்தகங்கள்: தனிப்பட்ட தேர்ந்தெடுப்பு
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
நான் முழுக்க வாசித்து முடித்த நூல்களில் ஐந்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன். இவை என்னுடைய சொந்தத் தெரிவுகள். இவற்றைச் சென்ற ஆண்டின் சிறந்த நூல்களாகச் சொல்லமாட்டேன்.
அஞ்சலி: தேவ் ஆனந்த்: கசப்பின் சுவடற்ற வாழ்வு
அசோகமித்திரன்
பதிவு: புக் பாயிண்ட், சென்னை, 11.12.2011 கிரிஷ் கார்னாட் நாடகங்கள் - நாடகத் தமிழுக்கு ஒரு புதிய வரவு
சி. கார்த்திகேயன்
கிரிஷ் கார்னாட் நாடகங்கள்
வெளி ரங்கராஜன்
பதிவு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் 3.12.2011 - 3.1.2012: நாடகமென்பது நடிப்புகளைக் கட்டவிழ்ப்பது
கலையரசி
மதிப்புரை: அஸீஸ் பே சம்பவம் - காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா
செல்லப்பா
தேவதச்சனுக்கு விளக்கு விருது
தலையங்கம்
கடிதங்கள்
|