|
கட்டுரை: மாயைகளைக் குலைக்கும் மகாமாயை
கண்ணன்
அரசியல்வாதிகளைப் பற்றி இந்திய மக்களுக்கு இருக்கும் பொதுக்கருத்து மிகக் கேவலமானது. எனவே ராடியா ஒலிப்பதிவுகளில் அவர்களின் பொதுப் பிம்பத்திற்குப் பாதிப்பு இல்லை, தனிப்பட்ட அரசியல்வாதிகள் பலரின் முகத் திரைகள் கிழிந்துள்ளன என்ற போதிலும்.
கட்டுரை: இந்தச் சக்கரம் நிற்பதில்லை
கானகன்
கருத்தியல்ரீதியாக முதலாளித்துவமே சிறந்தது என்பவர்கள், இந்துத்துவவாதிகள், இல்லையெனில், நடுத்தரவர்க்கத்தினரின் மேலோட்டமான புரிதலையே உள்வாங்கியிருப்பவர்கள் - எல்லா மட்டங்களிலும் இந்தியப் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
கட்டுரை: ஜூலியன் அஸாஞ், பிராட்லே மேனிங் வரலாற்றை மாற்றும் தியாகங்கள்
க. திருநாவுக்கரசு
விக்கிலீக்ஸ்போல், ஜூலியன் அஸாஞ் மற்றும் பிராட்லே மேனிங் போல் பலர் உருவாகிவிடக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் பல நாட்டு அரசுகளின் தீவிரக் கவலை. எப்பாடுபட்டாவது அஸாஞை ஒழித்துக்கட்ட அமெரிக்கா முயல் கிறது. இந்த முயற்சியில் அமெரிக்கா விற்கு எந்த அளவிற்கு வெற்றி கிட்டும் எனத் தெரியவில்லை.
கட்டுரை: விக்கிலீக்ஸ் உள்ளே, ராஜபக்சே வெளியே!
கலையரசன்
அமெரிக்கத் தூதரகம், இலங்கை நிலவரம் பற்றி, இதுவரை குறைந்தது ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் கேபிள்கள் வெளியாகியுள்ளன. இவை யாவும் பிரிட்டனின் கார்டியன் நாளேட்டின் வசம் உள்ளன. விக்கிலீக்ஸ் இவற்றைப் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று பகிரங்கப்படுத்தியுள்ள போதிலும் தெரிந்தெடுக்கப்பட்ட கேபிள்கள் மட்டுமே வெளியாகின்றன. யாரும் வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஐயாயிரம் கேபிள்களை வாசித்துக் கொண்டிருக்கப்போவதில்லை.
சிறுகதை: மெய்க்காப்பாளன்
அ. முத்துலிங்கம் ஓவியங்கள்: சந்தோஷ்
சரியாக நாலு மணிக்குப் பளபளவென்று மின்னும் வெள்ளைச் சீருடையில் அவள் பஸ் தரிப்புக்கு வருவாள். வரும்போதே தென்றல் வீசும். நான் அவளையே பார்த்தாலும் அவள் என்னைப் பார்ப்பது கிடையாது.
கட்டுரை: அங்கோர் அதிசய அழிவுகள்
அம்ஷன் குமார் புகைப்படங்கள்: ராஜீவ் ஆனந்த்
‘அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில். கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது.
சுய அனுபவத்தின் விளைச்சல்
நஞ்சுண்டன்
கட்டுரை: 2010 ஆங்கில எழுத்துக்கள்: ஒரு தன்னிச்சையான தேர்வு
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சென்ற ஆண்டு வெளிவந்த சில ஆங்கிலப் புத்தகங்கள் பற்றி இங்கே அறிமுகப் படுத்தியிருக்கிறேன். இந்தத் தேர்ந்தெடுப்பு முழு மையான தன் உள்ளுணர்வு சார்ந்தது. இந்தப் புத்தகங்களைக் குறிப்பிட்ட வரிசை முறையின்றி ஒழுங்கில்லாமல் அட்டவணைப்படுத்தியிருக்கிறேன்.
|
சிறுகதை: பெயர்நீக்கச் சான்றிதழ்
எஸ். செந்தில்குமார் ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சம்பத்திற்குத் தாலுகா ஆபிஸில் நிறைய நபர்கள் பழக்கமானவர் களாக இருந்தார்கள். புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பம் பெறுவதும் புதிய கார்டு தருவதும் வட்டவழங்கல் அலுவலகத்தில் தான். சம்பத் தனக்குத் தெரிந்தவர் கள் பலருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் வாங்கித்தருவதும் வீடு மாற்றிச் செல்பவர்களுக்கு விலாச மாற்றமும் கடை நம்பரும் மாற்றித் தருவதுமான வேலைகளைச் செய்து தந்திருக்கிறான்.
கவிதை
வா. மணிகண்டன் பூமா ஈஸ்வரமூர்த்தி அனார் கதிர்பாரதி ஓவியங்கள்: ரவி
கட்டுரை: தேடுதலிலிருந்து நாம் ஓயமாட்டோம் (பாலகங்காதராவின் கட்டுரைகள்)
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்
பாலகங்காதராவின் சிந்தனைகள், எழுத்துக்கள் இரண்டு விஷயங் களில் குவிகின்றன. ஒன்று மேற்கின் கலாச்சாரத்தை, சிந்தனைகளைச் சரியாகப் புரிந்துகொள்வது. இரண் டாவது இந்திய ஆசிய மரபுகளை மேற்குலகச் சிந்தனைகளின் பாதிப்புகளிலிருந்து விடுவித்துப் புரிந்துகொள்வது. வேறு வார்த்தை களில் கூறினால் மேற்குலகை இந் திய, ஆசிய மரபுகளின் பார்வை களிலிருந்து விளங்கிக்கொள்வது..
நாடகம்: வரலாற்றை நினைவுகூர்தல்
சண்முகராஜா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடகக் குழுவாகச் செயல்படுவது சுரபியின் சிறப்பம்சம். பார்ஸிதியேட்டரின் உட்பிரிவான சுரபி நாடகங்கள் அதிகமும் தொன் மங்கள் சார்ந்தவை. ஆந்திராவில் குழந்தைகள் உட்படக் குடும்பம் குடும்பமாக மக்கள் வரவேற்போடு அரங்கு நிறையப் பார்வையாளர் களைக் கொண்டது சுரபி நாடகம்.
நாடக விழா: சர்வதேச நாடக விழா Parallel Festival Bharath rang mahotsav 13
சண்முகராஜா
2011ஆம் ஆண்டுக்கான Parallel Festival brm 13 தேசிய நாடகப் பள்ளியும் தமிழக அரசின் கலை - பண்பாட்டுத் துறையும் இணைந்து நடத்தும் விழாவாக ஜனவரி 11 முதல் 20 வரை சென்னை மியூசியம் அரங்கிலும் சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கான்சர்ட் ஹாலி (லேடி ஆண்டாள்)லும் நடைபெறவுள்ளது..
எதிர்வினை: அரைவேக்காட்டு முட்டையும் அம்பையின் காஷ்மீரமும்
நக்கீரன், நன்னிலம்
எதிர்வினை: இரண்டு திருப்பதி லட்டும் இந்துத்துவ அதிகாரமும்
மீனா, திருவண்ணாமலை
மதிப்புரை: உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் நவீனத் தூரிகையின் கற்பிதங்கள்
மண்குதிரை
மதிப்புரை: மறுபக்கம் (நாவல்) மதமும் மனிதனும்
பாவண்ணன்
பதிவுகள்: அ. பாரதி இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - 2010 விருதுகள் தரும் உத்வேகம்
கடிதங்கள்
தலையங்கம்
|