|
கவிதை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
சுகிர்தராணி
கட்டுரை: பேட்டை ரௌடிகளும் சர்வதேச அரசியலும்
க. திருநாவுக்கரசு
பிராந்திய வல்லரசுகளின் உதவியுடன் தனது போர்க் குற்றங்களிலிருந்து இலங்கையால் எளிதில் தப்பிக்க முடியும் என்றால் உலக வல்லரசின் துணையுடன் தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமென்பதை இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
சிறுகதை: தூரத்து உறவுகள்
ஓரான் பாமுக் தமிழில்: கே. நர்மதா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
என் ஆவி உடலை விட்டு வெளியேறிச் சொர்க்கத்தில் ஏதோ ஒரு மூலையில் ஃப்யூஸனைக் கட்டித் தழுவி முத்தமிட்டது. எனக்குள் வானம் பாடி ஒன்று பாடியது. வெளியே வந்ததும், வெயிலை இதமாக உணர்ந்தேன். சிபெலை நான் மிகவும் காதலிக்கிறேன். இந்தக் கடையையும் ஃப்யூஸனையும் மறக்க முடிவெடுத்தேன்.
கட்டுரை: மகாத்மா: சொல்லும் உடலும்
பிரேம்
ஒவ்வொரு சத்தியாகிரகியும் ஒரு தனிப்படை, தனித்த சக்தி என்பதை உருவகப்படுத்தியதன் மூலம் செயல் பாடுடைய, அடையாளமுடைய, தன்னொழுங்குடைய ஒரு தனிமனித அடையாளத்தை உருவாக்கிக் காட்டினார்.
கவிதை:
பெருந்தேவி ஓவியங்கள்: ரவி
அஞ்சலி: அனுராதா ரமணன் என்றொரு மனுஷி
அம்பை
கல்வி கட்டுரை: பாகுபடுத்தும் கல்வியைக் கட்டமைத்தல்
வே. வசந்திதேவி ஓவியங்கள்: செ. சீனிவாசன்
அறிவு என்பது சந்தைப் பண்டமானதுதான் இறுதிச் சீரழிவு. கல்வி, அறிவுத் தேடல், சந்தையின் தேவை மூன்றும் எந்த முரண்பாடுமின்றிச் சங்கமித்துவிட்டன. உலகக் கார்ப்பொரேட் முதலாளித்துவம்தான் இன்று அறிவுக்கு இலக்கணம் வகுக்கின்றது, அதற்கு விலை நிர்ணயிக்கிறது.
|
கல்வி கட்டுரை: கல்வியியல் கல்லூரிகள்: குறைந்த முதலீடு அதிக லாபம்
பெருமாள்முருகன்
ஆசிரியப் பணி புனிதமானது, எழுத்தறிவித்தவன் இறைவன் போன்ற விழுமியக் கட்டமைப்புகள் எல்லாம் தகர்ந்து பொடிப் பொடியாய் உதிரும் காலம் இது. எல்லாத் தார்மீக நெறிகளையும் மீறிப் பெறும் வேலையாக ஆசிரியப் பணி இப்போது மாறிவிட்டது.
கல்வி கட்டுரை: தமிழ்ப் பாடநூல்கள் சமமாய்ச் சீரழிந்தவை
பிரபஞ்சன்
பாடநூல் என்பது ஆசிரியர்கள் வகுப்பில் சொல்ல வேண்டியவற்றின் அடிப்படைகள். அவையே பாடம் அல்ல. பாடநூல், ஒரு அறிமுக அட்டை. அதுவே ஆள் அல்ல. இது ஆசிரியர்களுக்குத் தெரிவதே இல்லை.
கல்வி கட்டுரை: இல்லாத ஒன்று : தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழலியல் கல்வி
சு. தியடோர் பாஸ்கரன் ஓவியங்கள்: சந்தோஷ்
சூழலியல் கரிசனம் ஒரு பாடமல்ல. அது ஒரு விழிப்பு. ஒரு பார்வைக்கோணம். நாம் வாழும் உலகைப் பற்றிய அடிப்படையான புரிதல்.
கல்வி கட்டுரை: உலகந்தேடும் தமிழ் - மேலை நாடுகளில் தமிழாராய்ச்சி
கி. நாச்சிமுத்து
தமிழ் ஆராய்ச்சி என்பது வெறும் தமிழர்கள் செய்கிற ஆராய்ச்சியாக மட்டும் இல்லாமல் உலகளாவிய அறிஞர் கூட்டத்தின் கவனத்தைப் பெறுகிற பன்னாட்டு ஆராய்ச்சியாக வளர்ச்சிபெறுகிறது.
கல்வி கட்டுரை: பாலியல் கல்வி: மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு
அனிருத்தன் வாசுதேவன்
பாலியல் கல்வி பெரும்பாலும் சுய கல்வியாகவே இருந்துவருகிறது. இந்தச் சுய கல்விக்கும் சிந்தனைக்கும் தேவையான சூழலும் தளமும் பெரும்பாலோருக்குத் தம்முடைய வாழ்க்கை அனுபவங்களாகவே இருந்து வருகின்றன.
மதிப்புரை: இலங்கையில் கல்வியும் இன உறவும்
பக்தவத்சல பாரதி
விவாதம்: கருத்துச் சுதந்திரம்: தொடரும் விவாதம்
பா. யோகேஷ்வரன், கண்ணன்
பதிவுகள்: முருகபூபதியின் ‘மிருக விதூஷகம்’
வெளி ரெங்கராஜன் புகைப்படம்: செல்லையா முத்துசாமி
தலையங்கம்
கடிதங்கள்
|