Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 126, ஜூன் 2010

 
 

கவிதை:
கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி

சச்சிதானந்தன் (மலையாளம்)
தமிழில்: சுகுமாரன்


கட்டுரை:
இந்தியக் கிரிக்கெட்: கறை படிந்த களம் - சூறையாடப்படும் அழகியல்

அரவிந்தன்
கிரிக்கெட்டில் நதியின் ரம்மியமான சலசலப்பையும் கேட்க முடியும். காட்டருவியின் உக்கிரத்தையும் தரிசிக்க முடியும். பாறையின் உறுதியும் இருக்கும். புல்லின் மென்மையும் தெரியும். அலுப்பூட்டும் தருணங்களும் மூச்சுத் துடிப்பை நிறுத்தும் அளவுக்குப் பரபரப்பூட்டும் கணங்களும் அமைந்த ஆட்டம் அது.

கட்டுரை:
ஆ. ராசா : துரத்தும் கொடுங்கனவு

பரஞ்சய் குகா தாகுர்த்தா
தமிழில்: தேவிபாரதி

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, விலை நிர்ணயம் (Allotment and pricing) சார்ந்த நடைமுறைகளில் ஆ. ராசா எடுத்த முடிவுகளில் பல முறைகேடானவை மட்டுமல்ல, சட்டவிரோதமானவையுங்கூட என்பது அம்பலமாகியிருக்கிறது.

பத்தி:
தொலைவும் அலைவும் - நவீன இதழியலின் முகங்கள்

சேரன்
மரபார்ந்த ஊடகத் துறையில் வணிகத்துக்கும் வணிக நலன்களைப் பேணுவதற்கும் இதழியலுக்கு மிடையில் ஒரு நியாயமான எல்லைக்கோடு இருந்தது. அது இப்போது உருவழிந்துபோய்விட்டது.

பத்தி:
அகவிழி திறந்து

கண்ணன்
பார்வதியம்மாள் யாரையும் இங்கே சந்திக்கக் கூடாது, மருத்துவமனைக்கு வெளியே எங்கும் தங்கக் கூடாது எனும் நிபந்தனைகள் மத்திய அரசின் ‘பாதுகாப்பு’க் கவலைகளைவிடக் கருணாநிதியின் அரசியல் கவலைகளையே அதிகமும் பிரதிபலிப்பதாக உள்ளன.

கவிதை:
கருணாகரன்
தீபச்செல்வன்
ஃபஹீமா ஜஹான்
ஓவியங்கள்: ரவி


கட்டுரை:
தமிழ் சினிமாவும் பாட்டுப் புத்தகங்களும்

தியடோர் பாஸ்கரன்
தமிழ் பேசும்படம் தோன்றியது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டு களாகத் தமிழ் சினிமாக் கலாச்சாரத் தின் ஒரு முக்கிய அங்கமாக சினிமா பாட்டுப் புத்தகம் நிலைத்திருந்தது.

மதிப்புரை:
யுத்தங்களுக்கிடையில்... பிழைப்பும் ஒரு யுத்தம்

அம்ஷன் குமார்

சிறுகதை:
இரண்டு பிம்பங்களாலான உலகம்

சிறீநான். மணிகண்டன்
சாய்வு நாற்காலியில் அமர்ந்து மேற்கூரையைக் கண்ட ஆசாரிக்கு விட்டங்கள் இரண்டிரண்டாய்த் தெரிந்தன. ஒருமுறை இமைகளை மூடித் திறந்தான். மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இனித் தன் உலகம் இரண்டு பிம்பங்களால் ஆனதாகவே இருக்குமென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டான்.

கட்டுரை:
சமயம் இல்லாத கலாச்சாரம்

ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்
கிறிஸ்தவத்தால் ஒரு இனத்தையோ மொழியையோ தன் பூர்விகமாகக் காட்ட முடியவில்லை. ஆனால் தங்கள்மீது சுமத்தப்பட்ட ‘மரபற்றவர்கள்’ என்ற குற்றச்சாட்டைக் கிறிஸ்தவர்கள் சாமர்த்தியமாக எதிர்கொண்டனர். கிறிஸ்தவம் தன்னை ஒரு பழமைவாய்ந்த தத்துவமாகக் காட்டிக்கொள்ள முயன்றது. தன்னைக் கிரேக்கத் தத்துவத்தைவிடப் பழமையானதாகக் காட்டிக்கொண்டது.

திறந்தவெளி:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ்ப் படைப்பாளிகளும்

வெளி ரங்கராஜன்
செம்மொழி மாநாட்டுக்கு 300 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக உள்ள அரசாங்கம் சிலகோடி ரூபாய் செலவழித்துப் பள்ளிகளிலும் கல்லூரி களிலும் உரிய கட்டமைப்பை உருவாக்கி இலக்கியம் மற்றும் நுண்கலைக் கல்வியின் தரத்தையும் பயன்பாட்டை யும் ஊக்குவித்தால் ஒரு இளைய தலைமுறை பயன்பெறும்.

கட்டுரைத் தொடர் :
எதில் பற்றாக்குறை? யாருக்குப் பற்றாக்குறை?

சங்கீதா ஸ்ரீராம்
பல்வேறு காரணங்களுக்காகத் தான் சேகரித்த விதைகளைத் தற்காலிகமாகத் தர மறுத்த ரிச்சாரியாவை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தோடு, அவர் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி அமைப்பை ஒரேயடியாக மூடவைத்து விட்டது ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன்.

பதிவுகள்:
அற்றைத் திங்கள், பிப்ரவரி 20 சேலம் தமிழ்ச் சங்கம்

சிவபிரசாத்

சு.ரா. பக்கங்கள்:
நானே காதல் கவிதை எழுதியிருக்கலாம். காதலிக்கவே எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போச்சே! என்ன செய்வது? முகத்தில் பால் வழிய வேண்டிய வயதிலெல்லாம் பத்திய உணவும் படுக்கையுமாக என் ஜீவன் உழன்று கொண்டிருக்க என் குழி விழுந்த கண்களையும் வற்றிய முகத்தையும் எலும்பெடுத்த உடலையும் எந்தப் பெண்தான் துணிந்து காதலிப்பாள்.

தலையங்கம்

கடிதங்கள்

விவாதம்