|
நாவல் பகுதி: ஒரு நூறாண்டுத் தனிமை
ஞாலன் சுப்பிரமணியன்
ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் கட்டற்ற கற்பனை எப்போதுமே இயற்கை அறிவுக்கும் அப்பால் செல்லும்; அற்புதங்கள், மாயாஜாலத்தைத் தாண்டி விரியும். தடித்த தோற்றமுடைய ஒரு நாடோடி வந்தான். தன் பெயர் மெல்குயாடெஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். கட்டுக்குள் கொண்டுவரப்படாத தாடி, துருதுருத்த கைகள், மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாகத் துணிச்சலுடன் அறிவித்தான், செயல் விளக்கம் தந்தான். இந்தப் பயனற்ற கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பூமியின் அடி ஆழத்திலிருந்து தங்கத்தை ஈர்த்துப் பிரித்தெடுக்க முடியுமென புயெந்தியா நினைத்தார். மெல்குயாடெஸ் நேர்மையான மனிதன். “அதற்கெல்லாம் இது பயன்படாது” என்று எச்சரித்தான். ஆனால் அந்தக் காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நாடோடிகளின் நேர்மையில் நம்பிக்கை இல்லாதவராயிருந்தார்.
கட்டுரை: ஒழுக்கம் என்னும் தந்திரம்
தேவிபாரதி
நித்தியானந்தா-ரஞ்சிதா படக்காட்சிப் பதிவுகள் எந்த வகையிலும் பாலியல்ரீதியில் கிளிர்ச்சியூட்டக்கூடியவையல்ல என்பது அவற்றில் சிலவற்றோடு பரிச்சயம் உள்ள எவரும் ரகசியமாக ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மை. ஆனால் அது எனக்கு வேறொரு வகையில் முக்கியமானதாகவும் கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தது. காவி நிறமுடைய ஒழுக்கத்தின் கொடி கிழிந்து தொங்குவதைப் பார்க்கும்போது ஏற்பட்ட கிளர்ச்சி அது.
அறிக்கை: குற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை
தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு கட்சி, திருமணம், இல்லற உறவு, குடும்பம் குறித்து இச்சமூகத்தில் நிலவி வந்துள்ள மதிப்பீடுகளை விமர்சனத்துக்குட்படுத்தியே கைக்கொள்ள வேண்டும். அது எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் குறைந்தபட்சம் இவற்றின் மீதான வெளிப்படையான விவாதத்திற்கேனும் இடமளிக்க வேண்டும்.
திறந்தவெளி: மீள் குடியமர்த்தல்: மறைந்திருக்கும் உண்மைகள்
எம். ரிஷான் ஷெரீப்
இந்தக் கொத்தடிமை முள்வேலி வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி.
மலையாளக் கவிதைகள்
எஸ். ஜோஸப் தமிழில் : சுகுமாரன் ஓவியங்கள்: மருது
கனடா நாட்டுப் பழங்குடியினக் கவிதைகள்
முனைவர் வை பாரதி ஹரிசங்கர் ஓவியங்கள்: மருது
சிறுகதை: மஞ்சள் நிறப் பைத்தியங்கள்
எஸ்.செந்தில் குமார் ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
அந்த ஊரில் தற்செயலாகத்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தோம். அவள் பரிசுப் பொருட்களும் செயற்கைப் பூக்களும் விற்கும் கடையில் வேலைக்கு இருந்தாள். அவளது நீண்ட மூக்கும் குறுகிய கண்களும் வட்டமுகமும் குளிருக்கென்று அணிந்திருந்த உடைகளும் அவற்றின் நிறங்களும் என்னைப் போலவே லிங்கத்திற்கும் பிடித்துவிட்டன.
|
கட்டுரை: எதையும் மறுப்பது இருத்தலுக்கு எதிரானது
நாகரத்தினம் கிருஷ்ணா
மரணத்தைப் போலத் துன்பமும் ஒரு கட்டாய தேவை. துன்பமென்பது சத்தியம், நிஜம். அதனோடு இணங்கிப்போக மனிதருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இவற்றை யெல்லாம் தீர்மானிப்பது விருப் பாற்றல், அதனுடைய விதிகளுக்கு முரண்பட மனிதரால் ஆகாது, அதன் எதேச்சாதிகாரத்திற்கு அடங்கிக் கிடப்பதன்றி மனிதருக்கு வேறு கதியில்லை.
கட்டுரை: அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்
கண்ணன்
நமது நீதிமன்றங்களில் நீதிக்காகப் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டும். ஊழல் மண்டிப்போன நிறுவனம் அது. அமர்வதற்கு இருக்கைகள் இருக்காது. குடிக்க நீர் இருக்காது. பயன்படுத்த நாகரிகமான கழிப்பறைகள் இருக்காது. நம்மை மனிதர்களைப் போல நடத்தும் பண்பு அங்கு யாரிடமும் இருக்காது.
பத்தி: பசுமைப் புரட்சியின் கதை பசுமைப் புரட்சி இந்தியாவுக்குள் நுழைந்த கதை
சங்கீதாஸ்ரீராம்
மூத்த விஞ்ஞானிகள் சி.எஸ்.இன் புதிய வேளாண் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். “புதிய வெளி நாட்டு ரகங்களை நாட்டிற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களில் பரப்பினால், அதுவரை அறிந்திராத நோய்களும் பூச்சிகளும் சேர்ந்து வந்திறங்கும் மிகப் பெரிய அபாயம் உள்ளது” என்று எச்சரித்தனர்.
சிறுகதை: நடனம்
கோகுலக்கண்ணன்
அவர்கள் இருவருக்குமிடையே ஒரு காலத்தில் காதல்போல ஒன்று இருந்திருக்கிறது. இருந்திருக்க வேண்டும். அதனால்தானே அவள் பிரிந்தவுடன் இவனுடைய பாதையே மாறிப்போனது. அந்தக் காதலின் விவரங்கள், தருணங்களின் துல்லியம் எதுவும் இவனுக்கு இப்போது தெளிவாக இல்லை.
கட்டுரை: மக்களின் வரலாற்றாசிரியர்
க.திருநாவுக்கரசு
தனது வாழ்நாள் முழுவதும் வன்முறைக்கும் போருக்கும் எதிராக எழுதியும் பேசியும் செயல்பட்டும் வந்த ஜின் இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நகரங்கள்மீது வெடிகுண்டுகள் வீசியவர் என்பதை நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும்.
மதிப்புரை: உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
அனார்
பதிவுகள்: அற்றைத் திங்கள், அக்டோபர் 18, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்
பதிவுகள்: அற்றைத் திங்கள், நவம்பர் 15, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்
பதிவுகள்: ஏற்காடு சிறுகதை செம்மையாக்க முகாம்
எஸ்.செந்தில்குமார்
தலையங்கம்
கடிதங்கள்
நூல் அறிமுகம்
|