Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 123, மார்ச் 2010

 
 
 

கட்டுரை: ராஜபக்ச: வெற்றியின் சரித்திரம்
சங்கரன் சித்தார்த்தன்
இறுதியில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்ட பின்னரும்கூட விடுதலைப் புலிகளை மையப்படுத்தியதாகத் தமிழ் மக்களுடைய அரசியலை மையப்படுத்தியதாகவே இந்தத் தேர்தல் அமைந்தது

சரத் பொன்சேகா: சதியின் கதை
சசி
வெற்றியின் நாயகனாகவும் தேசாபிமானியாகவும் மூன்று தசாப்தகாலமாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த வெற்றிச் செய்தியை நாட்டின் தலைவரிடம் கையளித்த ஒரு இராணுவத் தளபதி ஆறு மாதங்களுக்குள்ளாகவே தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் சிறைப்பட நேர்ந்திருக்கிறது. இது அவர் மேற்கொண்ட சதியின் கதையா அவர்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சதியின் கதையா?

கட்டுரை: பால் தாக்கரேவும் பிராந்தியவாதத்தின் வேர்களும்
வண்ணநிலவன்
‘திராவிட நாடு திராவிடருக்கே’ எனத் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தி.மு.கழகம், பஞ்சாபின் அகாலிகள் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு தான் மகா ராஷ்டிரத்திலும் தாக்கரே மண்ணின் மைந்தர் என்னும் பிராந்திய வாதத்தை எழுப்பினார்

பத்தி: இங்கிலாந்து மறுபார்வை மை நேம் இஸ் கான்: புளித்துப்போன காதல் கதை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஒரு மதம் மாறிய இந்து முழுக்க இயேசு கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் புகழ்பாடும் Bhakti Niranjana என்னும் தொகுப்பிற்கு அட்டைப்படம் வரைந்தவர் தன் கையொப்பத்தைப் போட்டிருந்தார். படித்துப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. மறுபடியும் கவனமாக வாசித்தேன். சித்திரம் வரைந்தவர் இன்றைக்கு இன, மத துவேஷத்தைத் தூண்டிவிடும் பால் தாக்கரே.

கட்டுரை: இது கவிதை என்றால் நான் பாரக் ஒபாமா
பி. ஏ. கிருஷ்ணன்
அரசின் முதல்நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் காரணத்தை வைத்துக்கொண்டு கவிதையின் கடைசி நாற்காலிக்குக் கூடத் தன்னால் உரிமை கொண்டாட முடியாது என்பது வாஜ்பேயிக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தில் இந்த நம்பிக்கை யாருக்கும் நிச்சயமாக வராது.

பத்தி: உயர் மலரே துயர்க் கடலே இறந்த பூதத்தின் தொடரும் நிழல்
கவிதா
சோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான்.

பத்தி: அகவிழி திறந்து
கண்ணன்
தமிழ் மக்களின் இறுதிப் படுகொலையைப் பத்துநாட்களுக்குத் தள்ளிப்போட்ட பெருமை கருணாநிதிக்கே உரியது. தமிழினத் தலைவர் ஆட்சி, சிங்கள அதிபரின் ஆசிபெற்ற ஆட்சி. இதற்குக் கைமாறாகத்தான் இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை, பரிசுகளுடன் கருணாநிதி அனுப்பி வைத்தார்.

நேர்காணல்: “எல்லா இடங்களிலுமே வெகுசனக் கலை புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது”
ஸ்டீபன் எஸ் இங்க்லீஸ்
சந்திப்பு: ரெங்கையா முருகன், இரா. வைஷ்ணவி
ஆங்கிலத்தில் இருந்து தமிழில்: ஜா. தீபா
புகைப்படங்கள்: கோவில்பட்டி மாரீஸ்வரன்

தமிழக மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சிவகாசி காலண்டர்களுக்குத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் அமரர் சி. கொண்டையாராஜூ. 1980களில் தான் மேற்கொண்ட கொண்டையாராஜூ பாணி ஓவியக் கலை குறித்தான ஆய்வு ஒன்றின் மூலம் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆய்வாளர் ஸ்டீபன் எஸ் இங்க்லீஸ். இந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னை வந்த இங்க்லீஸிடம் எடுக்கப்பட்டது இந்நேர்காணல்.

சிறுகதை: விஷம்
சினுவா அச்சிபி
தமிழில்: கே. முரளிதரன்
ஓவியங்கள்: சந்தோஷ்

“தன்னை ஆம்பளை என்று அழைத்துக்கொள்ளும் அந்த ஜந்து கல்வி மீதான பைத்தியத்தைப் பற்றிப் பேசுகிறது. அவனுடைய எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்கள். இரண்டு வயதுக் குழந்தைகூடப் போகிறது. ஆனால் அதெல்லாம் பைத்தியமல்ல. பணக்காரர்களுக்குப் பைத்தியம் இருக்காது. என்னைப் போன்ற ஏழை விதவைகளின் குழந்தைகள் மற்றவர்களைப் போலத் தாங்களும் பள்ளிக்கூடத்திற்குப் போக விரும்பும்போது தான் அது பைத்தியக்காரத்தனமாகிவிடுகிறது. இது என்ன வாழ்க்கை? கடவுளே என்ன இது?”

கவிதை
எம். ரிஷான் ஷெரிப்





திறந்தவெளி: உலகத் தமிழர்களைக் காப்பது யார்
சூரியதீபன்
கோவை தமிழ்ச் செம்மொழித் தமிழ் மாநாடு பற்றி இடையறாது வெளியாகிக்கொண்டிருக்கும் அறிவிப்புகளை வரிசைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கே தமிழர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைபாழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. பேராசிரியர்களுக்கும் அறிவுத் துறையினருக்கும்? வாழ்த்துப் பாக்கள் பாடவும் ஆரத்தி எடுக்கவும் அறிஞர்களுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டாமா? அதற்குத்தான் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

கட்டுரை: ஞானியுடன் நடந்த தூரம்
சுகுமாரன்
சரியாகச் சொன்னால் ஞானி என்ற எழுத்தாளரைவிடவும் ஞானி என்ற பேச்சாளர் கூடுதல் இலக்கியத் தன்மை கொண்டவர். ஒரு படைப்பைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் பேச்சில் சோபித்த அளவுக்கு எழுத்தில் வரவே இல்லை.

பதிவுகள்: அற்றைத் திங்கள், செப்டம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்

அஞ்சலி: ஜெயந்தன் (1937-2010) - நாவல் இன்னும் முற்றுப்பெறவில்லை
தமிழ் மணவாளன்

விவாதம்
அ. ராமசாமி

விவாதம்
கண்ணன்

கடிதங்கள்

தலையங்கம்