Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 121, ஜனவரி 2010

 
 
 

கட்டுரை: மீன்பிடிச் சட்டம்: மீனவர்களை மிரட்டும் புதிய பூதம்
வறீதையா கான்ஸ்தந்தின்
மீன்பிடி ஒழுங்காற்று மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வடிவம் (2009) மீனவர்களை மிரட்டும் புதிய பூதமாகக் கிளம்பியுள்ளது. தணியாது வேகும் காட்டுக்குள் திணறிக்கொண்டிருக்கும் சுண்டெலிகள் போல் இந்தியாவின் கடலோரங்களில் ஒரு கோடி மீனவமக்கள் தத்தளிப்பதை உலகம் கவனம்கொள்ளவில்லை.

கட்டுரை: கோபன்ஹேகன் உச்சி மாநாடு மாபெரும் வரலாற்று முரண்நகை
க. திருநாவுக்கரசு (புது தில்லி)
எந்தெந்த நாடுகள் இன்று கார்பன் அளவு அதிகரித்திருப்பதற்குக் காரணமோ அவை இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை ஒப்பிடும்போது எந்தெந்த நாடுகள் காரணமேயில்லையோ அவை மிகமிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. புவி வெப்பமடைதலைக் குறைப்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு மிக அதிகமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் இந்த விஷயத்திலும் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் நேரெதிரானது.

கட்டுரை: புலியின் வீழ்ச்சியும் பின்- இன அரசியலின் சிதறலும், பதிப்புலகம்: மாறிவரும் புத்தக வடிவமைப்புகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
யாழ்ப்பாணத்தில் ஆடும் கிளித்தட்டு ஸ்தானத்திலிருந்த கோல்பை உலக வெகு சன விருப்பு விளையாட்டாக மாற்றிய பெருமை வூட்சுக்கு உண்டு. வூட்ஸ் கோல்பைச் சார்ந்திருப்பதைவிடக் கோல்புக்கு வூட்சின் சம்பந்தம் அவசியமாயிருக்கிறது. சான்று: சென்ற ஆண்டு வூட்சு சுகவீனமாயிருந்தபோது இந்த ஆட்டம் இழந்த வருமானம்

சிறுகதை : பூதக்கண்ணாடி
ஜே. பி. சாணக்யா, ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
தங்கப்பனைத் தனக்குப் பொருத்தமில்லாதவனென்று நினைக்கும் வத்சலாவுக்கு எப்போதும் அவனைப் பிடித்ததில்லை. பெற்றோர்களற்ற அவளுடைய வாழ்க்கையில் குடும்ப உறவினர்கள் ஏற்பாடு செய்த திருமணம் அது. வாழத் தொடங்கிவிட்ட பிறகு தனக்கு விதிக்கப்பட்டது என்று அவனை சகித்துக்கொண்டாள்.

கவிதை
பெருமாள்முருகன்
வா. மணிகண்டன்
சிபிச்செல்வன்
சல்மா
வஸந்தா சூரியா

பத்தி: பள்ளிகள் சிறைகளா?
பெருமாள்முருகன்
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவரை உருவாக்குவதுதான் இந்தக் கல்விமுறையின் நோக்கம். எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை பார்க்கும் ஆட்களைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கிச் சாதாரணக் கடைகள்வரை விரும்புகிறார்கள்.

புத்தாயிரத்தின் இலக்கியம்: புதிய தலைமுறை, புதிய அடையாளம்
பொறுப்பாசிரியர்
பல தருணங்களில் விமர்சனம் ஒரு காலகட்டத்தின் படைப்பிலக்கியம் சார்ந்த அடையாளங்களை மாற்றியிருப்பதற்கும் சான்றுகள் உண்டு

கட்டுரை: தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள்
சுகுமாரன்
கவிதை ஓர் அனுபவத்தைக் காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின்நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன்.

கட்டுரை: கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள்: கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம்
ந. முருகேசபாண்டியன்
இந்தப் பத்தாண்டுகளில் நூற்றுக் கணக்கான நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் பிற இலக்கிய வடிவங்களைவிட, நாவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. அனுபவம்மிக்க நாவலாசிரியர்களுடன் முதல் நாவல் எழுதிய படைப்பாளியும் சமமாகக் களத்தில் உள்ளார்.

கட்டுரை: விளிம்பின் சரிவும் மையத்தின் ஏற்றமும்
க. காசிமாரியப்பன்
வன்மம் கொழிக்கும் சாதிய மனம், மனநெருக்கடிகளின் அக உலகத்தைத் தலித் படைப்பாளிகளால் தர முடியவில்லை. குற்றச்சாட்டுகளும் புகார்ப் பட்டியலுமாகப் பல கவிதைகள் நீர்த்துப்போய்விட்டன. ஒழுங்கு நிறைந்த கொலைத்தன்மையைக் கொண்டியங்கும் அரச வன்முறையின் வாள்வீச்சுக்குப் பலியாகும் வரலாறுகள் இனிதான் எழுதப்பட வேண்டும். தீவிரமான அவமானங்களை மென்று விழுங்கித் திணறும் மனிதர்கள் எழுதவே வரவில்லை

கட்டுரை: திசைகளும் சவால்களும்
க. மோகனரங்கன்
‘சமீபகாலமாக சிறுகதை இலக்கியம் நலிந்து வருகிறது. 70, 80களில் வெளிவந்ததைப் போலச் செறிவான நூல்கள் அதிகம் வரவில்லை’

கட்டுரை:
தலித் அடையாளம் : எழுத்தாகி வந்த வரலாறு

ஸ்டாலின் ராஜாங்கம்
தலித் வாழ்வைப் படைப்பாக்குதல், பொதுவான இலக்கியச் சூழலின் அங்கீகாரத்தைக் கோருதல் எனும் அம்சங்களை நிறைவுசெய்துவிட்ட தலித் இலக்கியம் அடுத்து என்ன செய்வது? என்று குழம்பி நிற்பது உண்மைதான்.

கட்டுரை:
வாசகர் நேசமான மின்நூல்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா
மின்-வாசிப்பானால் நமக்கு நல்ல காலம் கிட்டும் என்று அர்த்தம் அல்ல. சில சங்கடங்கள் உண்டு. இவற்றில் ஒன்று இன்று சந்தையில் கிடைக்கும் மின்-வாசிப்பான்களில் செருகப்பட்ட மென்பொருள்களின் ஒத்துவராமை

நாடகம்:
தேவை ஓர் இளம் தலைமுறை

சண்முகராஜா
‘மரபை மீட்டுருவாக்கம்’ செய்கிறோம் என்னும் பெயரில் தங்களது பிராந்தியத்திலி ருக்கும் மரபுக்கலை ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் அடவுகள், உடைகள், ஒப்பனைகளை அப்படியே பின்பற்றி எந்தவிதமான குறுக்கீடுகளும் அர்த்தப்படுத்துதல்களும் இன்றி மேடையேற்றும் வகை ஒன்று உள்ளது. இந்த வகையில் எல்லா அட்டகாசங்களையும் செய்வது கேரளக்காரர்கள்தாம்.

நாடகம்:
எங்கள் கண்ணீரால் அல்ல

திருமாவளவன்
‘ஊரான ஊர் இழந்தோம்
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே!
உம்மையுந்தான் நாமிழந்தோம்’

நேர்காணல்:
ம. இல. தங்கப்பா
‘கொடுத்தல்தான் வாழ்க்கை,பெறுதல் அன்று’

சந்திப்பு: பழ.அதியமான்
புகைப்படம் புதுவை இளவேனில்

சாதிச் சண்டைகள், சமயப் பூசல்கள், பண்பாட்டு மோதல்கள், பொருளியல் சுரண்டல்கள், இன, நிறப் பகைமைகள், மொழி மேலாண் மைகள், அரசு வல்லாண்மைகள் இவை என்ன? தன் சாதி மேலோங்க வேண்டும்; தன் சமயம் முன்னிற்க வேண்டும்; தன் பண்பாடு பரவுதல் வேண்டும்; தன் மொழி, இனம், தன் ஆட்சி, அதிகார வலிமை பெற வேண்டும் என்ற தன்னல நோக்கம்தானே!

கட்டுரை:
மகாத்மா காந்தி ஏன் உப்பை எடுத்தார்?

அரவிந்தன்
உப்பைச் சுரணையின் குறியீடாகக் கண்டு பழகிய இந்திய மக்களுக்கு அதைத் தங்கள் சுய மரியாதையின் குறியீடாகப் பார்ப்பது மிக எளிதாக இருந்தது. எனவேதான் அந்நிய அரசுக்கு வரி கொடாமல் உப்பை எடுத்து இந்த நாட்டில் என் உரிமையை நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு முதியவர் சொன்னதும் நாங்களும் வருகிறோம் என்று லட்சக்கணக்கான மக்கள் கூடவே சென்றார்கள்.

கட்டுரை: நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா!
பாரதி மணி
இந்தத் தலைமுறை இளைஞர்கள் எத்தனை பேருக்கு Beating the Retreat என்பதன் பொருள் தெரியும்? போன வருடம் ஜனவரி 29ஆம் தேதி மாலை இந்த நிகழ்ச்சியைத் தில்லி தூர்தர்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு இளைஞன் என்னைப் பார்க்க வந்தான். அவனுக்கு இதைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.

அஞ்சலி:
இல.கி. இராமானுஜம்

புது சீனிவாசன்

மதிப்புரை:
உறுமீன்களற்ற நதி

வா. மணிகண்டன்

மதிப்புரை:
சந்தியாவின் முத்தம்

ஆனந்த்

கடிதம்:
மண் பயனுற வேண்டும்

எதிர்வினை
த.ம. பிரகாஷ்
வி. சுஜாதா

பதிவுகள்:
மாதரி காதை நாடகம்

உபேந்திர நிநாசம்

தலையங்கம்

கண்ணோட்டம்

கடிதங்கள்