Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 120, டிசம்பர் 2009

 
 
 

கட்டுரை: மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் - பிரதமரின் கொடுங்கனவு
தேவிபாரதி
பழங்குடியினரின் நிலங்கள் உரிய இழப்பீடின்றி அபகரிக்கப்பட்டு வருவதாலும், வன வளங்கள் கொள்ளையிடப்படுவதாலும் தம் வாழ்வாதாரங்களை இழந்து கொடிய வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு யாருமே முன் வராததாலும்தான் அவர்கள் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறார்கள்.

கட்டுரை: இரண்டாம் தலைமுறை ஊழல் - தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஒரு லட்சம் கோடி இரண்டாம் தலைமுறை ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை
பரஞ்ஜோய் குஹா தாகுர்தா
தமிழில்: கே. முரளிதரன்

2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதால், நாட்டுக்கு ரூ. 50,000 கோடிக்குக் குறையாமல் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மிகக் குறைந்த மதிப்பீடு. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதி ஊழல் இதுதான். நிபுணர்களின் மதிப்பீட்டின்படி இதில் சம்பந்தப்பட்டிருக்கும் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கக் கூடும். 2007-2008இல் இந்தியாவின் தேசிய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு இது. 2007-2008இல் மத்திய சுகாதார பட்ஜெட்டைவிட இது அதிகம். 2008-2009இன் பற்றாக்குறையில் நான்கில் மூன்று பகுதி இந்தத் தொகை.

கட்டுரை: படைப்புவாதமும் பரிணாமக் கோட்பாடும்: தொடரும் போர்
க. திருநாவுக்கரசு
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தப் புரிதலே தவறானது. பரிணாமக் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல மனிதன். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றுதான் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் தோன்றுவது என்பது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்வது.

சிறுகதை: வெளிறிய அந்திமாலை
குமாரநந்தன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்

கோமதிக்கு உடனடியாகத் துயரத்தைவிட இந்த நிகழ்வைத் தான் எப்படித் தனியாகச் சமாளிக்கப்போகிறோம் என்ற பீதிதான் உருண்டு அடைத்துக்கொண்டது. அனிச்சையாய் மகன்களுக்குப் போன் செய்தார். வீட்டைப் பூட்டிக்கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடினார். ஒவ்வொரு அடிக்கும் கால்கள் அடுத்த அடியை மறந்து குழம்பின. கடலலை மாதிரி காற்று வாய்க்குள் சென்றது.

கவிதைகள்
ஆனந்தராஜ்




உரை: பாரதியின் இதுவரை வெளிவராத சொற்பொழிவு - கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை
ஆ.இரா. வேங்கடாசலபதி
எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப் போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.

நேர்காணல்: பேராசிரியர் கல்யாணி - எல்லாவற்றையும் தீர்மானிப்பது அரசியல்தான்
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்
நான் எதையும் ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை என்று ஒரு கட்டத்தில் விமர்சனம்கூட வந்தது. “எதெல்லாம் ரகசியமோ அதை என்னிடம் சொல்லாதீர்கள், எதை வெளியில் சொல்லலாமோ அதை மட்டும் என்னிடம் சொல்லுங்கள், உங்களுக்காக என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள இயலாது” என்று கூறிவிட்டேன்.

கட்டுரை: கல்வி உரிமை வெறும் கனவு - கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 கல்வி உரிமையை நிலைநாட்டுகிறதா?
வே. வசந்தி தேவி
இந்தியக் கல்வியின் பெரும் குற்றம் அதன் கொடிய ஏற்றத்தாழ்வு. சமுதாயத்தின் அனைத்து வர்க்க-சாதிப் பிரிவினைகள் பள்ளிகளிலும் தொடர்கின்றன. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதற்கு, கல்வியில் ஏற்றத்தாழ்வு முக்கியக் காரணம். இதனால், அனைவரின் கல்வியும் தரமற்ற கல்வியாகிவிடுகிறது.

மதிப்புரை: அ/சாதாரண மனிதன்
மு. புஷ்பராஜன்

பதிவுகள்: இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது, 31.10.2009, நாகர்கோயில்
ஷாலினி

பதிவுகள்: ஆ. சிவசுப்பிரமணியன் - அற்றைத் திங்கள், ஜூன் 21, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்

பதிவுகள்: ஒரு நாடகம் இரு நடிகர்கள் சில கதாபாத்திரங்கள்
அருண்மொழி

கடிதங்கள்

தலையங்கம்