|
கட்டுரை: “தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்”
அநாமதேயன் குறிப்புகள்
தமது ஏகப் பிரதிநிதிகளெனக் கொண்டாடிய புலிகளையே அம்மக்கள் அடித்து விரட்டத் துணிந்தார்கள் எனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழினத்தை அடக்கியொடுக்கி வன்முறையைக் கட்ட விழ்த்து வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கெதிராகத் தமிழ் மக்கள் பொங்கியெழுவது ஒன்றும் பெரிதல்ல.
மேலும் சில குறிப்புகள்
பொறுப்பாசிரியர்
இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தம் இலங்கைப் பயண அனுபவங்களைத் தமிழ் ஊடகங்களில் பதிவுசெய்துள்ளனர். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்தச் சுற்றுப் பயணம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகளோடு அந்தப் பதிவுகளிலிருந்து சில இங்கே மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன
கட்டுரை: விலங்குப் பண்ணையும் மாற்றுக் கருத்தாளர்களும்
மு. புஷ்பராஜன்
விடுதலைப்புலிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதன் பின் அனைத்தையும் மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கும் அவசியம் உணரப்படும் இவ்வேளையில், விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பின ரின் செயற்பாடுகளும் மீள்பரிசீல னைக்கு உட்பட்டே ஆக வேண்டும்.
எழுத்தும் கவிதையும் புதிய கவிதை 50 ஆண்டுகள்
எழுத்து இதழின் சாதனை தமிழில் புதுக்கவிதைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்பதே. அதைக் கருத்தில் கொண்டு அந்தக் காலப் பகுதியில் எழுதப்பட்ட சில கவிதைகளை இங்கே மறுவெளியீடு செய்திருக்கிறோம். இது ஒரு கோடிகாட்டல் மட்டுமே.
கட்டுரை: எழுத்தும் கவிதையும் - சில பிற்காலக் குறிப்புகள்
சுகுமாரன்
விமர்சனத்துக்கு முக்கியத்துவமளிக்கும் இதழாகத் தொடங்கிய ‘எழுத்து’ கவிதையின் நவீன முகமாக மாறியது தற்செயலானது. ஆனால் இந்தத் தற்செயல் விளைவு ஆரம்ப இதழ்களுடனேயே முடிவடையவும் செய்தது.
கலையின் பிறப்பு
க. நா. சு.
இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு, புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்ககாலத்தின் சிறந்த கவிதைச் சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையையும் நாமும் இன்று எட்ட முடியும்.
கவிதைகள்:
தொகுப்பு: சுகுமாரன்,
குவளைக்கண்ணன்
|
நேர்காணல் : ஞானக்கூத்தன்
சந்திப்பு : குவளைக்கண்ணன்
தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும்
‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக்
குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப்
பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை.
பத்தி: இங்கிலாந்து : மறு பார்வை
சொற்போராட்டமும் அரசியல்-சரியாக்கமும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
‘பாக்கி’ இனவெறியையும் இஸ்லாம் மீதுள்ள அச்சத்தை
உறுதிசெய்யும் அவதூறான, புண்படுத்தும் சினமான வார்த்தை.
சீராட்டுப்பதமல்ல. விளிம்புநிலை மக்கள் பற்றிய இனவாத
இழிபெயர்கள் அடிக்கடிப் பிரபலங்களால்
உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.
சிறுகதை: லெனினை வாங்குதல்
மிரோஸ்லாவ் பென்கோவ் தமிழில்: சுகுமாரன் ஓவியங்கள்: மருது
பேரனே, நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பாடம். மீன் களுக்கு இடையில் விழும் எல்லாக் கழிகளும் கவ்விப் பிடிக்க வேண்டி யவை அல்ல. சில சமயம் தவறான கழியைப் பிடிப்பது உன்னை உன் னுடைய முடிவுக்கே கொண்டுபோய் விடலாம். எனவே என் அன்பான வனே, எந்தக் கழியைப் பற்றிக் கொள்வது எதை விடுவது என்று எச்சரிக்கையுடன் யோசி. தகுதியான யுத்தங்களில் மட்டும் ஈடுபடு. மற்றவை உன்னைக் கடந்துபோக விடு.
கட்டுரை: முடிவேயில்லாமல் நீளும் புத்தகங்கள்
சல்மா
வாசித்தலை பழக்கம் அல்லது ஆர்வம் அல்லது வேட்கை இப்படித்தான் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் என்னைப் பொறுத்தளவில் அது விடுதலையின் அடையாளம்.
அஞ்சலி: முனைவர் கே. பாலகோபால் என்ற மானுட ஒளி
ச. பாலமுருகன்
மதிப்புரை: அஞ்சுவண்ணம் தெரு (நாவல்)
களந்தை பீர்முகம்மது
எதிர்வினை:
விவாதத்திற்கான ஒரு திறந்தவெளி
யாதவன், கொழும்பு
'வன்னியில் என்ன நடந்தது?' கட்டுரையாளரின் எதிர்வினை
விமர்சிப்பதும் புனிதப்படுத்துவதுமல்ல பிரச்சினை
சர்வகன்
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு
அ. கணேசன், சென்னை
எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே!
ப்ரவாஹன்
கடிதங்கள்
தலையங்கம்
|