Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 118, அக்டோபர் 2009

 
 
 

கட்டுரை:
ஆஷ் அடிச்சுவட்டில்...

ஆ. இரா. வேங்கடாசலபதி
தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைது மற்றும் சுதேசிக் கப்பல் கம்பெனி விவகாரம் ஆகியவையே இக்கொலைக்கு முக்கியக் காரணமாகும்’ என்று அறுதியிட்டுக் கூறினார், சோமசுந்தரம் பிள்ளை. வாஞ்சியின் அரசியல் ஈடுபாடுகளும் கமுக்கமான செயல்பாடுகளும் தந்தை மகனுக்கிடையே கடுமையான புகைச்சலை ஏற்படுத்தியிருந்தன. வாஞ்சிக்குக் கடைசிக் கடன்களைச் செய்யவும் மறுத்துவிட்டார் அவருடைய தந்தை.

இலங்கைக் கட்டுரை:
வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?

இந்த அகதிகளின் கதை வேறானது. இவர்கள் மிகக் கொடுமையான யுத்தக் களத்திலிருந்து அகதியானவர்கள். வவுனியாவில் நிரம்பிய இந்த அகதிகளுக்கு குடிநீர், சாப்பாடு, மலசலக்கூட வசதியே இல்லாமலிருந்தது. சாப்பாட்டுப் பொதிகளை வீசும்போது அதைப் பெறுவதற்காக முண்டியடித்துச் செத்த கதையெல்லாம் உண்டு. புலிகளிடமிருந்து இந்த மக்களைத் தாம் மீட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கத்தின் ஜனாதிபதியோ பிரதமரோ இந்த மக்களை ஒரு தடவையேனும் நேரில் சென்று பார்வையிடவில்லை.

இலங்கை: நலன்புரி முகாம்கள்
‘புல்மோட்டைப் பகுதியில் அதிகளவில் வெள்ளைக் காகங்கள் பறக்கின்றன’
ரமேஷ் குலநாயகத்துடன் ஒரு நேர்காணல்
உறவைத் தேடி - கடிதங்கள்

தொகுப்பு: அநாமதேயன்
உண்மையில் இந்த நலன்புரி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கூடங்களுக்கு ஒப்பானவை. இங்கே வெளியுலகு அறியாத வகையில் மெதுமெதுவாக ஓர் இனப்படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பெருந்தேவி கவிதைகள்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்



கட்டுரை:
சு.ரா.: நினைவிலிருந்து கொஞ்சம்

இமையம்
சுந்தர ராமசாமி புனிதர் அல்ல. மனிதர்களை அசட்டை செய்யாத, மனிதர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்திய, மதித்த ஒரு மனிதர். அவர் ஒரு எழுத்தாளராக இருந்தார். இறுமாப்போ இறுகிப்போன மனமோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.

சிறுகதை:
நான்காவது கனவு

யுவன் சந்திரசேகர்
ஓவியங்கள்: மருது

... கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வ தற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்து விடும்.

கட்டுரைத் தொடர் :
பசுமைப்புரட்சியின்
கதை - 11
வீரிய விதைகளின் தொழில்நுட்பமும் வரலாறும்

சங்கீதா ஸ்ரீராம்
நம் நாட்டிலேயே இயற்கையாக விளைந்த சில நெல் ரகங்களைக் கொண்டு நம் விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக இத்தகைய தொழில்நுட்பத்தைக் கையாண்டு உருவாக்கியவைதாம், நாட்டு ரக விதைகள்.

திரை:
உன்னைப் போல் ஒருவன்
குழப்பமான, அபாயகரமான கலாச்சாரச் செய்தி

சச்சிதானந்தன் சுகிர்தராஜா
இந்த சினிமாவைப் பார்க்கும் அடிப்படைவாதிகளின் நெஞ்சு கொஞ்சம் பெருமிதமடையும். கரிசனையுள்ள பொதுஜனங்களுக்குப் பயங்கரவாதம் ஏற்படுத்தும் அச் சுறுத்தல் கவலையை இன்னும் அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் இது நல்ல செய்தி அல்ல.

மதிப்புரை:
வரலாற்று சாளரம்: பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு

தியடோர் பாஸ்கரன்

பதிவுகள்:
பெண்ணொளி: ஒரு குரல்கூட எழவில்லையே... நாரதகான சபா, ஆகஸ்ட் 31, 2009

அரவிந்தன்

பதிவுகள்:
சா. கந்தசாமி, அற்றைத் திங்கள், 2009 மே 17, சேலம் தமிழ்ச் சங்கம்

அ. கார்த்திகேயன்

பதிவுகள்:
மாணவர்களுக்கான நாடகப் பயணம்

சண்முகராஜா

கடிதங்கள்

தலையங்கம்