தலித் சுயசரிதை இப்போது தலித் இலக்கியத்தின் முக்கியமானதொரு அங்கமாக மாறிவிட்டது.
அவை இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படுகின்றன.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கே.ஏ. குணசேகரனின் ‘வடு’ என்ற சுயசரிதை இப்போது
ஆங்கிலத்தில் ‘தி ஸ்கார்’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ஆசிரியரின் அனுப
வங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. தன்னைப்
படிக்கவைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும் போதும், அந்தக் காலத்திலேயே
எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தன் தாய் சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுத்து,
விறகு வெட்டி, புல்லறுத்து விற்றுத் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்லும்போதும்
நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சில் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக்
குணசேகரனின் மொழி பெற்றுள்ளது. மூல நூலின் ஆழமும் அழகும் ஆற்றலும் சற்றும்
குறையாமல் M. காதம்பரி இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.The Scar
K.A.Gunasekaran
Translated into English by V. Gadambari -
Orient Blackswan P Ltd.,
160 Anna Salai,
Chennai 600 002
Rs. 190. |